Find us on Google+ October 2011 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Sunday 30 October 2011

சவால்களே சரித்திரம்


    சிலருக்கு வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் பலருடன் போராடி வெற்றிபெற விரும்புவதில்லை. போட்டிகளை கண்டு பின்தங்குபவர்களே இங்கு அதிகம். போட்டிகள் இல்லாமல் வெற்றி பெறும் எவருமே சரித்திரத்தில் இடம் பெறுவதில்லை. போட்டிகள் இல்லா வெற்றி என்பதே இருக்க முடியாது

         எம்.ஜி.ஆர்,சிவாஜி  ரஜினி,கமல்  விஜய்,அஜித் இப்படி போட்டிகள் இருந்தால் தான் ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறுப்பு ஏற்படும். போட்டியாளர்களுக்கும் துணிச்சல்,திறமை,தன்னம்பிக்கை பிறக்கும்

         சில வேலைகளுக்குப் போட்டியே இல்லாமல் இன்னும் முதல் இடம் காலியாகவே இருக்கிறது. ஆகவே சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்புவர்கள் சாகசக் காரர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. போட்டி போட்டு முன்னேற தகுதி படைத்த மன உறுதி உடையவராய் இருந்தால் போதும்.

      போட்டியிடாமல் நாம் அடையும் வெற்றி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நாம் மட்டும் ஓடி வெற்றி பெறுவதைப் போன்றதாகும். போட்டி போட்டு நாம் பெறும் வெற்றியே நமக்கு முழு சந்தோசத்தை ஏற்படுத்தி தருகிறது.
      எவராலும் அடைய முடியாத இலக்குக்கு போட்டி போட்டு உன்னையே நீ தாழ்த்திக் கொள்ளாதே... அதே நேரத்தில் நீ போட்டி போட்டு அடைய இருக்கும் உன் இலக்கு சரியானதாக இருக்கட்டும்.

               சவால்களை எடுத்து விழுங்குபவர்களே சரித்திரத்தில் வெற்றி பெறுகிறார்கள்………………..

அரேஞ்சுடு மேரேஜ் என்பது என்ன?


இன்றைய நிலையில் அரேஞ்சுடு மேரேஜ் என்பது கணவனுக்கும்,மனைவிக்கும் இரண்டு கல்யாணம் போன்றது. தனக்கு வரும் மனைவி இப்படி எல்லாம் இருக்க வெண்டும் என்ற கற்பனை மனைவி ஒரு தாரம் ஆனால் கிடைத்த மனைவியோ வேறு ரகம். இப்படித்தான் கற்பனை மனைவியான முதல் தாரத்துடனும் நிஜ மனைவியான இரண்டாம் தாரத்துடனும் வாழ்கின்றனர். அப்படியானால்                அரேஞ்சுடு மேரேஜ் பண்ணுகிற எல்லாருக்கும் இரண்டு தாரமா என்ன? நிச்சயம் அப்படி இல்லை.  

      பெரும்பாலான ஆண்களும்,பெண்களும் தங்களுக்குள் மனக்கோட்டையை கட்டிக் கொண்டு வாழ்வது தான் இந்த பிரச்சனைக்கு முழுக்காரணமே. இதனால் கல்யாணத்திற்குப் பின்னரும் கற்பனை மனைவியுடனே வாழத்தொடங்கி விடுகின்றனர். நிஜத்தை நிழலாகத் தொலைத்து நிழலெனும் கற்பனையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

      இறுதியில் விவாகரத்திலே போய் முடிகிறது. இது மாதிரியான மனிதர்கள் ஒன்று அரேஞ்சுடு மேரேஜ் பண்ணிக்க கூடாது. அல்லது தன் மனைவியோ, கணவனோ தாங்கள் எதிர் பார்த்தபடி அமையா விட்டால் அவர்களை தங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல அன்பினால் மாற்றி அமைக்க வேண்டும். இப்படி எதுவுமே என்னால் முடியாது என கூறுபவர்கள் கட்டாயம் அரேஞ்சுடு மேரேஜ் பண்ணிக்க கூடாது. இதனால் பாதிக்கப் படுபவர்கள் இருவருமே தான்

      கற்பனைகள் இருக்கலாம் அதில் தவறு இல்லை எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் இருக்கலாம் அதுவும் தப்பு இல்லை. ஆனால் நமது கனவு பலிக்காத போது அதை ஏற்றுக் கொள்ள கூடிய மனப் பக்குவம் இருந்தால் நாம் நிகழ்காலத்தை வென்று விடுவோம். ஆகவே அரேஞ்சுடு மேரேஜிலும் அனுசரிப்புடன் நடந்து கொண்டால் அமுதமாய் இனிக்கும். இல்லையேல் கரும்பாய் இருந்தாலும் கசக்கவே செய்யும்