Find us on Google+ November 2011 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Wednesday, 30 November 2011

ரெயின் ரெயின் கோ அவே


மழை வந்தாலும் வந்துச்சு எப்படா மழை நிக்கும்னு தோனுதுல.....  மழையே வா வா-ன்னு  கூப்பிட்டு கழுதைக்கு கல்யாணம் பன்னி வச்சாலும் மழை வராது. ஆனால் இந்த ஆண்டு என்னவோ ஊத்து மழை கொட்டுது. எப்படியோ ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மறு பக்கம் நல்ல விளைச்சல் கிடைத்தால் போதும்.

    ஆனால் மழை இல்லாமல் நாம் எவ்வளவோ நாள் கஷ்டப்பட்டிருக்கிறோம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் மழை இல்லாமல் பஞ்சத்தில் அடிபட்ட காலங்கள் எல்லாம் இருந்தன. ஆகவே தற்போது வர்ணபகவான் நமக்கு அருள் பாலித்ததாக நினைத்து மழையை அன்போடு ஏற்றுக் கொள்வோம்.


    ஆங்கில நாட்டில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருப்பதால் இவர்கள் "ரெயின் ரெயின் கோ அவே" என்ற பாடலை பாடினர். ஆனால் நமது மெட்ரிக் குழந்தைகளிடம் பாட்டு பாட சொன்னால் முதல் பாடலாக ரெயின் ரெயின் கோ அவே தான் பாடுகின்றனர். வராத மழையே இப்பத்தான் வந்திருக்கும் அதற்குள் சின்ன குழந்தைகள் ரெயின் ரெயின் கோ அவே பாடலைப் பாடி வருகிற மழையையும் கலைத்துக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளின் பாடல் சத்தம் கேட்ட வர்ணபகவான் மழையை மூட்டை கட்டிக்கொண்டு போய் விடுகிறான்.


    அதற்கு அடுத்தபடியாக கருப்புக் குடை காட்டி மழைக்கு எதிராய் கருப்புக் கொடி பிடிப்பதைப் போன்று வர்ணபகவானையே பயமுறுத்துகிறோம். இயற்கையின் நிகழ்வுகள் எல்லாமே நாம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை தான். இயற்கையின் போக்கிற்கு நாம் ஒத்துழைத்து வாழ்ந்தால் எந்த அழிவுகளும் நேராது.Tuesday, 29 November 2011

மாருதிக்கே இந்த மாற்றமா?ஆரம்பத்தில் இருந்தே கார்கள் என்றால் அதில் முன்னனியைப் பிடிக்கும் நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாகவும் மினி சைசில் இருக்கும் மாருதிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது.

பெட்ரோலால் இயங்கக் கூடிய கருவிகளைக் கொண்டு செய்யப்பட்ட மாருதி கார்கள் தற்போது டீசல் என்ஜின்களுக்கு மாற்றப்படுகின்றன. காரணம் என்ன வென்று பார்த்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மாருதிகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது தான்.


இதற்கெல்லாம் ஒரே காரணம் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது தான். பெட்ரோலால் இயங்கும் இன்ஜின் பாகங்களைக் கொண்டு செய்யப் பட்ட கார்கள் இன்று சோக்கேஸ் பொம்மைகளைப் போன்று பயனற்று இருக்கிறது.


இந்த நேரம் டீசல் கார்களுக்கு ஓர் வசந்த காலம் போல...........  அப்படி யென்றால் பெட்ரோல் கார்களுக்கு இந்த நேரம் ஓர் இலையுதிர் காலமோ ? மீண்டும் எப்பத்தான் உதிர்ந்த இலைகளையெல்லாம் ஒட்ட வைத்து பெட்ரோலின் நேரத்தை நல்ல நேரமாக்கப் போகிறார்களோ தெரியவில்லையே.......?


நமது நாடே உணவிச்சங்கிலியை நாடித்தான் இருக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு உணர முடிகிறது. ஒன்றின் விலை உயர்ந்தால் அது மேல் தட்ட மக்கள் என அடித்தட்டு மக்கள் என்ன என்று பாரபட்சமே பார்க்காமல் எல்லோரையும் தாக்கி விடுகிறது.  

பிறர் கூற்று புறங்கூற்று


சிலருக்கு அடுத்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதே பிடிக்காது, வகுப்பில் முதல் ரேங்க் வாங்குபவர்களை சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காது ஆசிரியர் அடிக்கடி அந்த மாணவனை மட்டும் புகழ்ந்து பேசுவதை  இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லையே ஆனால் அவர்களை பழிக்காமலாவது இருக்கலாமே!

இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஒருவரை தனக்கு மிகவும் பிடித்திருக்கும் அவள் அழகாக இருக்கிறாள் என நினைத்து இருப்போம் ஆனால் அவள் முன்னாடியே அவளை இவளாம் ஒரு ஆளா ஓவரா சீன் போடுறானு சொல்றது. அவள் அழகா இருக்கான்னு நீங்க அவள் கிட்ட சொல்லனும்னு கூட அவசியம் இல்லை ஆனால் நீ ஒரு ஆளுன்னு சீன் போடாதா இது போன்ற வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்தாதீர்கள்.


பிறர் நம்மை காயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் நம்மிடம் எல்லாம் இருக்கு என்பதால் பொறாமைக்காரர்கள் வயிற்று எரிச்சலில் அப்படி பேசி விடுவர். அடுத்தவர் பேச்சுக்கு நாம் இடமளிப்போமாயின் நம்மை நாம் இழப்பதோடு நம் குறிக்கோளினையும்  இழந்து விட வேண்டியது தான்.


ஒருத்தன் பல்வகை திறனில் நாட்டம் கொண்டிப்பான், எந்த நேரமும்  துறுதுறுன்னு ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பான் அதனை விரும்பாத சிலர் மட்டுமே அவனை பற்றி புறம் பேசுவார்கள்.


ஒரு பெண் அழகான ஆடை அணிந்து வருகிறாள் என வைத்துக் கொள்வோம், சிலருக்கு மட்டும் நல்லா இருக்குன்னு சொல்ல மனசே இருக்காது இப்படிப்பவர்கள் பொறாமையால் இதெல்லாம் ஒரு ஆடையா நல்ல செலக்‌ஷனே உனக்குத் தெரியாத என்பார்கள்.  அவள் பிறர் கூற்றுக்கு இடமளிப்பவளாக இருந்தால் அந்த நேரம் அவள் மனமுடைந்து போய்விடுவாள்.


வாழ்க்கையில் நாம் சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் மூளையிலே இடம் கொடுத்தால் நாளை நமது மூளையே குப்பைத்தொட்டியைப் போல நிரம்பி வழியும். இதனால் பெரிய விசயங்களில் நமது நாட்டம் செல்ல முடியாமலே போய்விடுகிறது.


விமானத்தை கண்டறிந்த ரைட் சகோதரர்களை ஆரம்பத்தில் இந்த உலகம் கேலி செய்தது. அப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார்கள் என்பது சரியாகத் தான் இருக்கு. வீணா காசையெல்லாம் எப்படி கரியாக்குறாங்க பாருன்னு ரைட் சகோதரர்களை பழி தூற்றினார்கள்.


ஆனால் அவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் வென்று காட்டினார். பிறரின் கருத்துக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே நாம் நமது வாழ்க்கையில் இலக்கை அடைய முடியும்.


Monday, 28 November 2011

பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசமா?பஞ்சத்தில் அடிபட்டு கிடக்கும் பாமர மக்கள் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரங்களில் பூக்கடை நடத்தி வந்தால் அவர்களிடம் போயி பேரம் பேசி விலையை குறைக்க வைத்து பூவை வாங்கி வைப்பதில் நம்ம ஊர் காரர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோசம். இதை பெருமையாக வேற எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது.

இதோடு மட்டுமா தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்களோ அல்லது பிளாஸ்டிக் பொருள் விற்பவர்களோ வந்து விட்டால் போதும் அந்த தெருவில் உள்ள எல்லா பெரியவர்களும் தள்ளுவண்டியை சுற்றி கூடிக் கொண்டு அசலை விட குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி விடுவர். அதில் அந்த தெருக்காரர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோசம்.


ஆனால் இறுதியில் அந்த கூலித் தொழிலாளியின் நிலை என்ன?  அனைத்தையும் விற்று விட்டு கணக்கு பார்த்தால் அசல் கூட மிஞ்சாது. அவருடைய உழைப்பு எல்லாம் வீணாகி போயிற்று தானே கடும் வெயில், மழை பாராது தள்ளுவண்டியை தள்ளி நடந்தே பிளைப்பு நடத்தும் மக்களிடம் நாம் இது போன்று பேரம் பேசலாமா?      சிந்தித்து பாருங்கள்..........

ஒரு பெரிய ஏழு மாடி அங்காடிக்கு போகிறோம் அங்கே மட்டும் பேரம் பேசாமல் நாம் சொன்ன விலைக்கு சில்லரையுடன் சேர்த்து கொடுத்து விட்டு வந்து விடுகிறோம். பணக்காரரை மென்மேலும் வளர வைக்கும் நாம், ஏன் கூலித் தொழிலாளிகளின் லாபத்தை மட்டும் பறித்துக் கொள்ள வேண்டும்???........  


இனிமேலாவது கூலித்தொழிலாளர்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் பேரம் பேசாமல் அவர்களுக்கு லாபம் ஈட்டித் தருவோம்.........   

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும், நடுத்தர குடும்ப பெண் வசதி படைத்த பையனை பார்த்து காதலிப்பதும், நடுத்தர குடும்ப பையன் வசதி படைத்த பெண்ணை பார்த்து காதலிப்பதும் இன்றைய சூழலில் அதிகரித்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணக்கார வீட்டில் சம்பந்தம் முடிக்க விரும்புவர். அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது தான். ஆனால் வசதி இருந்தால் மட்டும் நாம் நினைக்கும் வசந்தமான வாழ்க்கை வந்து விடுமா என்ன? வசதி படைத்த வீட்டில் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா?  ஏனெனில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பரம்பரை பணக்காரராக இருப்பார், அவரது முன்னோர்கள் பரம்பரையாக பரம்பரையாக சொத்து சேர்த்து வைத்துவிட்டு மறைந்திருப்பர்.  அவர்களுக்கென்று எந்த தேவையும் இருக்காது.உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற நிலையும் கிடையாது.என்ன பொருள் வேண்டும் என்று நினைத்தாலும் எல்லாமே வீட்டுக்குள் வந்து விடும்.


இவர்களுக்கு ஒரு சமயத்தில் வாழ்க்கையே போரடித்து விடும். தேவையானவை எல்லாமே நம்மிடத்தில் இருக்கும் தருணத்தில் வாழ்க்கையில் நமக்கு சவால்களே இல்லாமல் போய் விடுகிறது. கொஞ்ச நாட்களிலேயே வாழ்க்கை போரடித்து விடுகிறது. இது மனோதத்துவ அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மை, நம்முடைய தேவைகள் அனைத்தும் அருகிலேயே இருக்கும் தருணத்தில் நாம் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சோம்பேறிகளாய் வாழ்க்கையை ரசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று விடுகிறோம்.


சரி, ஒரு மிடில் கிளாஸ் தம்பதியினரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என பார்ப்போம்!

இவர்கள் தான் புதிதாக விதைக்கப்பட்ட விதைகள் இவர்கள் வளர்ந்து கிளை,இலை விட்டால் மட்டுமே நல்ல மரமாக வளர முடியும். இவர்களுக்கென்று

எந்த பரம்பரை சொத்தும் இருக்காத நிலையில் அவர்களே உழைத்து சேர்க்க வேண்டிய நிலையில் இருப்பர். உண்மையில் இது மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்....


கணவன் மற்றும் மனைவியின்  ஒவ்வொரு மாத சம்பளத்திலும்  ஒரு தொகையை சேமித்து வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் வாங்கி மகிழ்வதோடு அவர்கள் உழைப்பால் கிடைத்த அந்த பொருளோடு வாழ்கிற ஒரு பரிபூரண சந்தோசம் கிடைக்கும். மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ வெளியே உல்லாசப்பயணம் சென்று வருவது, இது போன்ற மிடில் கிளாஸ் குடும்பங்களின் சந்தோசங்களுக்கு அளவேதும் இல்லை. அடுத்த மாதம் எங்கே போகலாம் என இந்த மாதமே திட்டமிட்டு வைத்திருக்கும் மிடில் கிளாஸ் தம்பதியினரின் எதிர்பார்ப்புக்கும் அவர்களது வாழ்க்கை சுவாரஸ்யத்திற்கும் மிகை ஏதும் இல்லை.


அப்படியானால் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மட்டும் தான் சந்தோசம் வருமா? நான் அப்படி சொல்லவில்லை. இன்றைய நிலையில் பெரும்பான்மையானோர் பணக்கார வாழ்க்கை தான் வேணும் அதில் தான் வசந்தம் இருப்பதாக நினைக்கின்றனர். அது தவறான எண்ணம் என சுட்டிக்காட்டவே இந்த  கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று.

நம்மில் பலர் வாழைப்பழ சோம்பேறிகளாக இருப்பர், உழைக்காமலே நமக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என நினைப்பர். அப்படிப்பட்டவர்கள் தான் பணக்கார வாழ்க்கையை தேடி போகிறார்கள்.. நாம் நினைத்த பணக்கார வாழ்க்கையை அடைந்ததும், கொஞ்ச நாட்களிலேயே அலுத்துப் போகும் வாழ்க்கையால் மன அழுத்த நோய்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர். உலக சுகாதார கணக்கெடுப்பின் படி 2010 ஆண்டு முடிவில் இருத நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்க்கையை அலுப்புடன் வாழ்ந்தவர்கள் தான்.


நமது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் சுவாரஸ்யத்துடனும் சந்தோசமாகவும் ஏற்றுக் கொண்டு வாழப் பழகுவோம் அது எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் நம்மால் இனிமையான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடியும்.Saturday, 26 November 2011

வேற்று கிரகங்களை வேடிக்கை பார்க்க போகலாமா?


பூமித்தாயே பொறுக்க முடியாமல் பிளவடைந்து பூகம்பத்தை உண்டாக்கும் அளவுக்கு பூமியின் பாரம் தாங்க முடியாமல் மக்கள் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சனையைப் போக்கவே வேற்று கிரகங்களுக்கு மக்களை வழியனுப்ப வாய்ப்புகளை எதிர் நோக்கியுள்ளனர்.

கிரகங்களில் இரண்டாவது பெரிய கிரகமான சனி கிரகத்தைப் பற்றி ஆராய காசினி செயற்கைக்கோளை அனுப்பி தோல்வி அடைந்தோம்.மீண்டும் சிறிய கிரகமான பூளூட்டோ கிரகத்தைப் பற்றிய ஆராய நீயூ ஹாரிசான் என்ற செயற்கைக்கோளை அனுப்பி மறுபடியும் தோல்வி அடைந்தோம்.


அடுத்த படியாக மீடியம் சைசில்  உள்ள செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய 1940-ஆம் ஆண்டு நாசா விண்வெளிமையம் வைகிங் என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பி பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டனர். மனிதன் வாழத் தேவயான அனைத்து வசதிகளும் அங்கே இருப்பதாக அறிவித்தனர்.


மீண்டும் பல ஆராய்சிகளுக்குப் பின்னர் தற்போது ரேயர் இயந்திரம் பொருத்தப்பட்ட செயற்கைக்கோளை அனுப்பி வெளியான சோதனையில் பனி உறைந்த நிலையில் தண்ணீர் உள்ளதாக அறிவித்தனர். இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததால் மக்களை அனுப்பி வாழ வைப்பதற்கு ஏற்ற சூழலை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது நாசா நிறுவனம்.


எப்படியோ நாடு கடத்தலாம்னு நினைக்காம வேற்று கிரகங்களுக்கு கடத்தும் முயற்சியானது வெற்றிப் பாதையில் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.. ஆனால் தற்போது எவரை அனுப்புவது எவர் செவ்வாய் கிரகத்தில் போய் வாழ்வதற்கு ரெடியாக இருக்கிறார் என்று பார்த்தால் நிச்சயம் எவருமே இல்லை. அனைவருக்குள்ளும் ஒருவித இனம் புரியாத பயம்.


இந்த பயத்தைப் போக்குவதற்கு பொது மக்கள் சிலரை தேர்வு செய்து அவர்களை மட்டும் ஒரு மாதம் சுற்றுலா அழைத்துச் செல்லலாம் செவ்வாய் கிரகத்துக்கு. இதில் பொதுமக்களை தேர்வு செய்வதற்க்கான காரணம் என்னவென்றால் அவர்களின் பீட்பேக் மட்டுமே அனைத்து மக்களாளும் ஏற்றுக்கொள்ளப்படும்.


அவர்களிடம் இருந்து வரும் பீட்பேக்கின் மூலம்  இன்னொரு உலகத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கும் காலம் நெருங்கி விட்டது. புதுமணப்பெண் இல்வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைக்கும் போது தோன்றும் கனவுகளை விடவும் மேலானது நாம் இன்னொரு கிரகத்தில் வாழப்போவது.


இனி வருங்காலத்தில் உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமானால் கூட நாம் செவ்வாயிலிருந்து பூமிக்கு வந்து நலம் விசாரித்துச் செல்ல வேண்டும். பிரபஞ்சத்தைப் பற்றி அறிய விரும்பும் பலருக்கும் இது ஒரு சவாலாக இருக்கும். பூமிக்கு நாம் எப்படி வந்தோம் கடல்,மலை,மணல்,கல்,வீடுகள்,நிலங்கள் இவைகள் எல்லாம் எப்படி வந்தன என்ற கேள்விகளில் குழம்பிக் கொண்டிருந்த நமக்கு நாமே விடை காணும் நேரம் செவ்வாய் கிரகத்தில் தெரியப்போகிறது.....


………இதற்கெல்லாம் அடித்தளமிட்ட நாசாவுக்கு ஒரு ஜே போட்டு முடிக்கிறேன்…………..


Friday, 25 November 2011

கற்காலத்தை நோக்கி மீண்டும் படையெடுப்பா?


அனைத்து நாடுகளும் வளர்ச்சியின் பாதையில் வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் மட்டும் கற்காலத்தை நோக்கி படையெடுக்க தயாராக இருக்கிறோம். என்ன நண்பர்களே புரியவில்லையா? கற்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?

மின்சாரமே இல்லாத இருண்ட உலகத்தில் தங்களது மொத்த வாழ்க்கைப் பயணத்தையும் கடந்தனர். நமது தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? எல்லாம் இருந்தும் இல்லாதது மாதிரி தான். தற்போதைய  பல மணி நேர மின்வெட்டினால் நாமும் இருண்ட உலகில் வாழ அடியெடுத்து வைத்துள்ளோம்.


இன்றைய இயந்திர உலகில் "சம்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது".அத்தனை தேவைகளுக்கும் நாம் மின்சாரத்தின் உதவியை நாடிச் செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டு வேலை முதல் விவசாயம் வரையிலும் மின்சாரத்தை சார்ந்தே நமது வாழ்க்கை அமைகிறது.

 

இதற்கெல்லாம் காரணம் என்ன……..? தமிழகத்தின் மின்சார தேவையானது ஆண்டுக்கு 11,500 மெகாவாட், ஆனால் பிற வளங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 8600 மெகாவாட் தான். மீதம் 3000 மெகாவாட் மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்வதற்காக அண்டை மாநிலங்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். "வரவு எட்டணா செலவு பத்தணா "என்று இருப்பதினால் தமிழக மின்சார வாரியத்தின் மொத்த கடன் தொகை 42,175 கோடி. தற்போது வட்டி கட்டுவதற்கே கடன் வாங்கும் நிலையில் நமது தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.


நீர் ,காற்றாலை ,சோலார் ,பயோ டெக்னாலஜி,அனல் மின்சாரம் போன்ற வகையில் நமக்கு கிடைத்த மின்சாரத்தேவைகள் பெருகிவரும் மக்கள் தேவைக்கு போதாத காரணத்தினால் அணுமின் நிலையங்களின் மீது நாட்டம் அதிகரித்தது. இதற்கு தீர்வு கட்டுவதற்காகவே கூடங்குலம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. அதுவும் தொடங்கப்பட்டதோடு சரி தமிழகத்தின் மின்சார தேவையினை உணராத மக்கள் இன்னும் போராட்டத்தில் இருந்து மீளாமல் இருக்கின்றனர்.


நாம் உபயோகிக்கும் மின் இஸ்திரி பெட்டி, மற்றும் குளிரூட்டியால் அதிக அளவு மின்சாரம் விரயமாகிப் போகிறது. இவைகளின் தேவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் ஓரளவு மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும். மின் இஸ்திரியை நாம் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் மின்சாரக் கட்டணத்தை குறைக்க சலவைக்காரர்களிடம் நாம் இஸ்திரிக்கு துணிகளை கொடுத்தால் அவர்களையும் வாழவைப்பதோடு மின்சார தேவையினையும் குறைக்கலாம்.


கடன் சுமையை சமாளிக்க முடியாத நிலையால், ஒரு யூனிட்டுக்கு 38 சதவிகிதம் வீதம் மின்சாரக்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது நமது தமிழகம். இதே நிலை நீடித்தால் நமது எதிர்கால சந்ததியினர்கள் மின்சாரப் பற்றாக்குறையால் கற்கால வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட கூட வாய்ப்புகள் அதிகம்.

          

          கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்....................................Tuesday, 22 November 2011

வளமையான தமிழகத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் வறுமையான தமிழகத்தை உருவாக்கிவிடுவார்கள் போலவே

பெட்ரோல் விலையை குறைக்கச் சொன்னால் அதற்கு எதிராக, அனைத்து தரப்பு மக்களும் செல்லக்கூடிய வாகனக் கட்டணத்தை கூட்டிவிட்டார்களே.


இது எந்த விதத்தில் நியாயம்? பெட்ரோல் போட வசதியில்லாமல் வண்டியே வாங்க முடியாமல் இருந்த அடித்தட்டு மக்களிடையேயும் பெட்ரோல் விலை உயர்வால் வண்டியை மூலையிலே நிறுத்தி விட்டு பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்த நடுத்தரவாழ் மக்களும் இன்று பெரிய அளவில் துன்பப்பட்டு வருகின்றனர்.


பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தி வரும் இவர்களைப் போன்றவர்களின் நிலை என்ன? மேல்தட்டு மக்கள் எவருமே பேருந்துகளில் செல்வதேயில்லை அவர்களுக்கு எப்படி தெரியப் போகிறது பேருந்துப் பயணங்கள். அது மட்டுமா?


மக்கள் அதிகமாக உபயோகிக்கும் பொருள் என்ன என்று பார்த்தால் பால் தான். தெருவுக்குத் தெரு இரண்டு மூன்று டீக்கடைகளின் பெஞ்சுகளில் எப்போதும் மக்களைக் காண முடிகிறது. மக்களின் அன்றாடத் தேவைகளில் பால் ஒன்று அவசியமானது அதோடு பேருந்தில் ஏறித் தான் இடம் பெயர வேண்டும் என்ற இன்னொரு கட்டாயத்துடனும் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?


இந்த அவசிய தேவைகளை மக்கள் கடைபிடிக்காமல் இருக்க முடியாது என்ற ஒரே ஒரு காரணத்தினால் இவ்வளவு விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளீர்களே ! இதனால் தமிழகம் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் நேரம் வெகு விரைவில் வந்து விட்டது……….


இதற்கெல்லாம் காரணம் கேட்டால் தமிழகத்தின் கஜானா காலியாக இருக்கிறது என்று காரணம் வேறு சொல்கின்றனர். இங்கே கஜானா காலியாக இருப்பது தமிழகத்தின் சொத்திலா?  அல்லது  5 வருட ஆட்சியில் இழந்த சொத்தை ஒரே வருடத்தில் சுரண்டி எடுப்பதற்கா........?Monday, 21 November 2011

மல்கோவாவின் மாந்திரீகம்

மாங்காய் சீசனில் மாணவர்களின் கொண்டாட்டமும் அதிலும் மாங்காய் மரம் எங்கேனும் கண்ணில் பட்டால் விட்டு வைப்பார்களா? திருட்டு மாங்காய் தான் என்றும் சுவை தரும். மாங்காயால் மாணவர்களுக்கு மட்டுமா கொண்டாட்டம்? பெரியவர்களும் மாங்காய்களை ஊறுகாயாக்கி சீசாக்களில் அடைத்து உண்பதே இந்த சீசனின் ஸ்பெசாலிட்டி தான். "மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்" என்ற பல மொழியே உள்ளதல்லவா.....?

    பிஞ்சு பழுத்து பழமாகியதும் மாம்பழம் மணத்திலே நம்மை மனம் கவிழ வைக்கிறது. மாம்பழம் என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு தித்திக்கும் சுவை நம்மை அறியாமலே வந்து போகிறது. அப்படிப்பட்ட மாம்பழத்திற்கு பெயர் பெற்றது நமது சேலம். ஒரு மாம்பழத்திற்காக பரமசிவன் குடும்பமே துண்டானது.

    மல்கோவா மாம்பழம் தான் மாம்பழத்தின் முதல் வெரைட்டி மாம்பழம் அதன் சுவையை நாம் உணரமுடியாமல் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மல்கோவாவின் ஒரு சதவிகிதத்தை கூட தமிழர்களுக்காக கொடுக்காமல் அப்படி என்ன ஏற்றுமதி தேவைப்படுகிறது?

    நாமெல்லாம் எத்திலீன் போட்டு பழுக்க வைத்த பழங்களை உண்டு வயிற்று வழியை சுமந்து கொள்ள நமது நாட்டு மல்கோவாவை வெளிநாடுகள் அல்லவா சுமந்து செல்கின்றன. சிங்கப்பூர் சென்ற ஒரு தமிழர் பழரசக் கடைக்குச் சென்று மாம்பழ பானத்தை வாங்கி குடித்தார். அவர் இதுவரை குடித்திராத ஒருதனி சுவை அதில் இருந்தது. எங்கே இருந்து இந்த மாம்பழம் கொண்டுவரப் படுகிறதென்று கடை முதலாளியிடம் கேட்டார் ,

    அதற்கு அவர் சொன்னார் இது மல்கோவா மாம்பழம் இந்தியாவில் இருந்து தான் கொண்டு வரப்படுகிறது என்று. நாமெல்லாம் ஏமாளிகளாகத் தான் இருக்கிறோமா? இவை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தரம் வாய்ந்த பொருட்கள் எல்லாம் இந்தியாவில் உற்பத்தியாவதோடு சரி ஆனால் இந்தியனின் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறது.
Saturday, 19 November 2011

வெளிநாடுகளின் கழிவு நமது நாட்டில் மலிவு

செல்போன்கள் இன்று மனிதனின் ஆறாவது விரலாகத் தான் செயல்பட்டு வருகின்றன. நாம் தனியாக இருந்தாலும் தனிமையில் நம்மை தவழவிடாமல் நண்பனாக தோள் கொடுக்கும் ஒரு அன்புத் தோழன் தான்  செல்போன்.
   
      சூரியன் பிறந்து சந்திரன் மறைவது வரை இன்று வீட்டுக்கு வீடு செல்போன்களின் சிணுகல்கள் தான் அதிகம். ஐந்து வயது குழந்தைகள் கூட தனியாக தங்களுக்கென்று ஒரு செல்போன்களை பயன்படுத்துகின்றன.

    இந்த நிலையில் நாம் கவனிக்க வேண்டியவை செல்போன்களின் தரத்தை மட்டுமே. செல்போன்களின் அளவுக்கதிகமான வரவேற்பினால் மக்கள் கண்ணு முண்ணு தெரியாமல் கவர்ச்சியான வடிவத்தை பார்த்து வாங்கி வந்து விடுகின்றன. ஆனால் இறுதியில் ஆறு மாதத்திற்குள் ஆறு செல்போன்களை வாங்கும் நிலைக்கு ஆட்கொள்ளப்படுகிறோம்.  

    தற்போது விருவிருப்பாக விளம்பரம் செய்து கொண்டிருக்கும் நோக்கியோ சி-2 மற்றும் "டச்-அண்ட்-டைப்" போன்றவகள் 2500 முதல் 5000 வரை விற்பனைக்கு உள்ளன. இவைகள் எல்லாம் வெளிநாடுகளின் பெயிலியர் மாடல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களால் ஒதுக்கப்பட்ட கழிவுகளான பெயிலியர் மாடல்களையே நாம் மலிவான விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.
       
            கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.Friday, 18 November 2011

மரணத்திற்கு பின்னால்?          பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது.  எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன்  மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர்.

                எவ்வளவோ
அறிவியல் வளர்ந்திருக்கிறது. பல தொழில் நுட்பங்களை கண்டறிந்து விட்டோம். ஆனால் மரணத்திற்கு பின்னர் மனிதன் என்ன ஆகிறான் என்பதை மட்டும் எவராலும் அறிய முடியவில்லை. இது பிரபஞ்சத்தின் உண்மையாகக் கூட இருக்கலாம். "சாகு நாள் தெரிந்து விட்டால் வாழுகிற நாள் நரகமாகிவிடும் என்பார்கள்". அது உண்மை தான். வாழும் வரை நாம் மகிழ்ச்சியாக ஒவ்வொரு நொடியையும் வாழக் கற்றுக் கொள்வோம்.

                நாம்
ஏழையோ, பணக்காரனோ எப்படி இருந்தாலும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தீர்வு காண முடியாத பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும். சிலர் பிரச்சனைகளின் மேலே ஏறி ஓடிக்கொண்டிருப்பர். இன்னும் சிலர் மூளையிலே முடங்கி எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல் சோதனை என இடிந்து விடுவர். இவர்களைப் போன்றவர்களுக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.


                இந்தப்
பிறவி , இந்த உடல் எதுவுமே நமக்கு நிரந்தரம் இல்லாதவை, நமது பிரச்சனைகளும் கூட அப்படித்தான் நமக்கு நிரந்தமானவை அல்ல. நீங்கள் அளவுக்கதிகமான பிரச்சனையில் சிக்கித் தவிப்பதாக நினைத்தால் அதற்கு ஒரே தீர்வுகாக உங்கள் மரணத்திற்கு பின்னால் எதுவுமே இல்லை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஏழையோ, பணக்காரனோ அல்லது  அறிவாளியோ, முட்டாளோ எப்படி இருந்தாலும் மரணத்திற்குப் பின் ஒரு வெற்றிடமே.

                பலர் மிகப்பெரிய
பிரச்சனையில் இருந்து மீள முடியாமலோ, வேறு செயல்களில் ஈடுபாடு செலுத்த முடியாமலோ இருப்பார்கள். நீங்கள் அந்த வேளையில் அதை மறப்பதற்கு உங்கள் மரணத்திற்கு பின்னால் உள்ள ஒரு யூகிக்க முடியாத வாழ்க்கையை யோசித்து பாருங்கள்.  இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, போராடி பல பிரச்சனைகளை கடந்து இறுதியில் மரணத்திற்கு பின்னால் நாம் அனைவரும் மாயமாய் மறைந்துவிடத்தானே போகிறோம்.

                ஆகவே
எதையும் பெரிதென நினைக்காமல் வாழ்க்கை செல்லும் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமாக அமைத்துக் கொள்ளுங்கள்.