Find us on Google+ March 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Wednesday, 28 March 2012

தகவல் தொழில் நுட்பத்தில் கடைசி இடம் தமிழகத்திற்கா?


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் முளைத்து வந்தன , ஒரு கட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல ஆயிரம் பேர் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு இன்னும் காத்துக் கொண்டே இருக்கும் வேளையில், பொறியியல் படிப்பை நோக்கி மக்கள் பார்வை சென்றது.

ஆனால் , பொறியியல் பட்டதாரிகளில் தற்போதைய நிலை என்ன?

திறமையான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து 22 மாநிலங்களில் நடந்த ஆய்வில், தமிழகத்திற்குத்தான் கடைசி இடம் கிடைத்துள்ளது. 2011 இல் படிப்பை முடித்த 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில் 10% பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மீதமுள்ள 90% பேரின் நிலை என்ன?

தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டு வரும் தி.மு.-வும் அ.தி.மு.-வும் எல்லா வகையிலும் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம் என சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்ட வில்லை என்பதை ஐ.டி. வேலை வாய்ப்புகளில் தமிழகத்திற்க்கு கடைசி இடம் கிடைத்துள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் புற்றீசல் போல 600 பொறியியற் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்மந்தமில்லாதவர்கள் எல்லாம் தாங்கள் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொறியியல் கல்லூரிகளை திறந்து பெயர் தெரியாதவராய் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இதே நேரத்தில் டில்லி முதலிடத்தையும் பீகார் மற்றும் ஜார்கண்ட் இரண்டாம் இடத்தையும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 3000 பொறியியற் கல்லூரிகளில் ஆண்டுக்கு 5 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை !

இவர்களில் வெறும் 17.45% பேருக்கு மட்டுமே தகவல் தொழில் நுட்பத் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும் 70% பேர் கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப்ப்ட்டு வருகின்றனர்.

அரசாங்க வேலைக்காக ஒருபக்கம் எம்ப்ளாய்மெண்ட் செய்திதாளையும், எம்ப்ளாய்மெண்ட் அலுவலக வாசலிலும் காத்திருப்போர் ஒரு பக்கம். மறு பக்கமோ பெருகி கொண்டே போகும் பொறியியல் கல்லூரிகளும் அதற்கேற்ப்ப மாணவர் விகிதமும்.

இதற்கெல்லாம் தீர்வு கண்டால் ஒழிய தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியும்.


Friday, 23 March 2012

அவசர உதவிக்கு !


எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். 

செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் , சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது

இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.

அவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.

இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.


இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்.

Thursday, 22 March 2012

இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ".

இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ".
எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது .
அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் நிலைமை
என்னத்துக்கு ஆகும்
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத்
தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை
கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல
தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 %
சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி
முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம்
மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு மூல
காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் ,
பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு
நாள் குறைந்து வருகிறது . வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா
.
சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக
(http://www.un.org/en/events/iyof2011/index.shtml. )
அறிவித்துள்ளது .

நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம் . நதியின்
பிறப்பிடம் அருவி . அருவியின் பிறப்பிடம் மலை உச்சி . வனம் அதிகம்
இருக்கும் மலை உச்சியில் ஒரு வகையான மண் உள்ளது . அந்த மண் ,அங்கு
மண்ணில் விழும் இலைச் சருகுகளுடன் இணைந்து ஒரு புது வகையான மண்ணாக மாறி
விடுகிறது . அந்த மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் ,
அவ்வளவு மழைநீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது . பிறகு ,பிடித்து
வைத்த மழை நீரை , சொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது . இந்தச் சொட்டுகள்
இணைந்து சிறு நீரூற்றாக மாறுகிறது . சிறு நீரூற்றுகள் இணைந்து அருவியாக
மாறுகிறது . அருவி நதியாகிறது . வனத்தின் முக்கியத்துவம் இதுதான் . வனம்
பாதிக்கப்படும் போது நம் நீராதாரமும் பாதிக்கப்படும் . இது மட்டுமல்ல
,
நிலத்தில் வாழும் உயிரினங்களில் 80 % உயிரினங்கள் வனத்தில் தான்
வாழுகின்றன . மனிதனது அத்துமீறலால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில்
உள்ளன .

வனத்தை உருவாக்குவதில் மரங்கள் பெரும் பங்கு இருக்கின்றன . மரங்கள்
இல்லையென்றால் பூமியில் வனமே இல்லாமல் போய்விடும் . நாம் சுவாசிக்கத்
தேவைப்படும் பிராண வாயு ( oxygen o2) மரங்களில் இருந்தே கிடைக்கிறது .
தண்ணீர் , கிடைப்பதற்கும் மரங்களே முக்கிய காரணம் . நிலச்சரிவைத்
தடுப்பதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன . உணவுப்பொருட்கள் , எரி
பொருட்கள் , பல்வேறு வகையான பொருட்கள் செய்ய என்று நாம் மரங்களில்
இருந்து பெரும் நன்மைகள் ஏராளம் . மரங்கள் இல்லாமல் மனிதனே இல்லை .
இயற்கை இல்லாமல் நம் பூமியே இல்லை . இயற்கையோடு இணைந்து வாழாமல்
நம்மால் நிலையான மகிழ்ச்சியையோ , வளர்ச்சியையோ எந்தக் காலத்திலும் பெற முடியாது .
இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இந்த மாதம் (மார்ச் 22) " உலகத்
தண்ணீர் தினம் ".
இவ்வளவு கதையும் எதற்காக என்றால் , இந்த மாதம் (மார்ச் 22) " உலகத்
தண்ணீர் தினம் ".

Wednesday, 21 March 2012

அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் சி. வி. இராமன் பற்றி தகவல் !!!!


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, 16 வயது தான் நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் 'சர்' பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.

Friday, 16 March 2012

நம்மலுடைய கட்டாய கடமை பூமியை மாசு படுத்தாமல் வைதிருப்பது !!!!

நம்மலுடைய கட்டாய கடமை பூமியை மாசு படுத்தாமல் வைதிருப்பது !!!!
நம்மலுடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம் , அதை போல் நம்
சுற்றத்தையும் சுத்தமாக
வைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும் .நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்கு
நாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர் ,நிலம் .காற்று
.போன்றவற்றை சுத்தமாக வைத்தாயே போதும் .
அடுத்த மாதம் ஏப்ரல் 22 நாள் , உலக பூமி தினம் ( World Earth Day ) . "
ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி
எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய
இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க
நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம்
கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு
விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும்
பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு
நாள் தேவைப்படுகிறது .
பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி
இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை
முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற
பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த
அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான
அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின்
தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் ,
வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு
பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .
இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை .
மிகவும் குறைவு . பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through )
கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம்
பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம்
பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து
விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று
பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது நாமே குப்பைகளை
அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது
மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம்
குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் .
இதற்கு என்ன செய்யலாம் ?
Reduce - குறைக்க வேண்டும் : பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு
மண்ணாக மட்காத அனைத்தையும் .
Reuse - மீண்டும் பயன்படுத்த வேண்டும் : நாம் பயன்படுத்தும் அனைத்து
பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ
அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ போட வேண்டும்
.
Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத
பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய
பொருளாக இருந்தாலும் சரி .
Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப்
பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க
வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட
வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான
வாழ்க்கையை வாழ முடியாது
முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு
வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ?
என்று ஒருபோதும் எண்ண வேண்டாம் . நாம் எல்லோரும் ஒன்று படுவோம் .
பூமியைக் காப்பாற்றுவோம் .
தீதும் நன்றும் பிறர்தர வாரா !

‘டாட்டூ ’ (பச்சை) குத்துவதினால் எய்ட்ஸ் வருமா?

'டாட்டூ' (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய வார்த்தை 'டட்டாவ்'. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து 'டாட்டூ' என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆக்கிவிட்டனர்.

இப்போது லேசுபாசாக விழித்துக் கொண்டு கிராமத்துக்காரர்கள் பச்சையை மறந்து விட்டனர்.

ஆனால், பச்சை அப்படியே டாட்டூவாக்கி மேல்தட்டு நாகரிக நகரவாசிகள் இன்னும் அதை தொடர்கின்றர்.உடம்பில் மறைவிடங்கள் உட்பட எல்லா பாகங்களிலும் பச்சை (டாட்டூ) குத்தி கொள்கின்றனர்.

அதிகளவில் டாட்டூ குத்துவது ஆபத்து என்று தற்போது தெரியவந்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஒரு ஆய்வு. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, பிரேசில் உள்பட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 124 ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரிப்போர்ட் தயார் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பது:

டாட்டூ போடும்போது தோல் ஒரு வினாடிக்கு 80 முதல் 150 முறை பஞ்சர் செய்யப்படுகிறது. மேலும் ரத்தம் உள்ளிட்ட உடல் திரவங்கள் மீது இக்கருவியின் ஊசிமுனை படுகிறது. கருவியை முறையாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பலருக்கும் பயன்படுத்தினால் கிருமிகள் பரவி நோய் ஏற்படும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் நிறமிகளும் பெரும்பாலும் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. நோய்களை பரப்புவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு.

டாட்டூ அகற்றும்போதும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. டாட்டூ அகற்ற தெர்மல் இன்ஜுரி, டெர்மப்ரேன், க்ரயோதெரபி போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதிலும் அதிக கவனம், பாதுகாப்பு அவசியம். சுத்திகரிக்கப்படாத கருவிகளை பயன்படுத்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் வரலாம்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இஸ்லாம் பச்சை குத்துவதை அன்றே முற்றிலும் தடை செய்துள்ளது. நபிகள்  அவர்கள் இவர்களை சபித்துள்ளார்கள்.
அவர்கள் பச்சை குத்திக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!

Tuesday, 13 March 2012

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?

அல்லது

கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...?


இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி
அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.


எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான
ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து
டயல் செய்திடவும்.


இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல்
போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile
Equipment Identity) என அழைப்பார்கள்.


இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல்
கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.


இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-


பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல்
செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும்
மொபைல் போனின் அடையாள எண்.


காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான
கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.


அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது
பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும்
தெரியப்படுத்துவார்கள்.

Friday, 9 March 2012

ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?


தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா?  என்ன அநியாயம் இது?
நம்ம ஊர் காரர்களில் போதைக்கு அடிமையானவர்களை விட இந்த டீக்கு அடிமையானவர்கள் தான் பல கோடி பேர் உள்ளனர். 
இன்று தெருவுக்கு தெரு டீ கடைகளின் ராஜ்ஜியம் கலை கட்டி வருகிறது. 
முன்பெல்லாம் கண்ணாடி குவளைகளை  பயன்படுத்தி வந்த கடைக்காரர்கள்  தண்ணீர் பற்றாக்குறையாலும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும் 
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகித குவளைகளை பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆனால் அந்த காகித குவளை எப்படி உருவாக்கப் படுகிறது தெரியுமா?

திரவங்களினால் நனையாமல்  இருப்பதற்காக காகித குவளையை சுற்றிலும் மெழுகு தடவப் பட்டு தயாரிக்கப்படுகிறது.

நேரடி தகவல்:  ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நீண்ட நாள் வயிற்று வழியால் அவதிப்பட்டு
 பின்னர் மருத்துவரிடம் சென்று பார்த்தால் அவரது வயிற்றில் மெழுகு வளர்வதாக மருத்துவர் சொல்லி விட்டார். 
பின்னர் என்ன காரணம் என அவரது உணவு பழக்க வழக்கங்களை பார்க்கும் போது அவர் அடிக்கடி  காகித குவளையில் டீ குடிப்பதாக தெரிய வந்தது. 

அவசர உலகில் அவசரமாக  வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம் உடலை முழுமையாக பாதுகாத்துக்  கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டால் முடிந்த வரை காகித குவளைகளை தவிர்க்க பாருங்கள்.


Thursday, 8 March 2012

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா !


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திரும் ஈசன்
மண்ணுக்குள்ளே  சில மூடர் நல்
மாதர் அறிவை கெடுத்தார்."

"இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்" என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன. மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள்திகழ் கின்றனர். "உடல்வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்"  என்பதை பெண்கள் சாதித்து கொண்டிருகின்றனர் .

ஒரு பக்கம் பெண்கள் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கமோ பிறரால் தூற்றப் பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.

பெண்களை கொடி என்கிறீர்கள்
ஏன் காற்றில் வீழ்ந்து ஒடிவதர்கா ?

பெண்களை நிலவு என்கிறீர்கள்
ஏன் நடந்து நடந்து தெய்வதர்கா ?

பெண்களை கிளி என்கிறீர்கள்
ஏன் ஆண்கள் சொல்வதை திருப்பி சொல்வதற்கா?

பெண்களை தெய்வம் என்கிறீர்கள்
ஏன் சூடம் காட்டி அணைப்பதற்கா?


இன்றைய நிலையில் ஆட்டோக்களில் கூட  " பெண்புத்தி பின்புத்தி"   ,  "சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே " என்ற வசனங்கள் மனதை உருக்குலைய வைக்கிறது.


இருபத்து நூற்றாண்டு பெண்கள் முன்னேறுகிறார்களா இல்லை பின்னேறுகிரார்களா ?
பெண்கள் முன்னேற்றமடைந்தாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து விடும் என்கின்றனர் குற்றவியல் வல்லுனர்கள். பல வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பல வடிவங்கள

எப்படி தடுப்பது ?
பெண்கள் மீதான வன்முறையை முற்றிலுமாக தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு பல்வேறு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். இதற்கு அதிகார மையங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் இது சாத்தியம். ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் பெண்களுக்கு பார்லிமென்ட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு 49 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்காவிட்டாலும், பார்லிமென்ட் உறுப்பினர்களில் 37 சதவீதத்தினர் பெண்கள். இந்நிலை நம்நாட்டிலும் வர வேண்டும்.

ஆனால் நம் தமிழகத்தில் தற்போது பார்லிமென்டிலும், மத்திய அமைச்சரவையிலும் ஏறத்தாழ 10 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாக உள்ளனர். நாட்டில் ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் நான்கு மாநிலத்தில் முதல்வராக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக இது நிறைவேறாத கனவாகவே உள்ளது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த உரிமையை சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியதாகவே உள்ளது.


Tuesday, 6 March 2012

சுதந்திரமான சமூக வலைத்தளம் வேண்டுமா?சமூகவலைதலங்கள் எதற்காக ஆரம்பத்தில் உருவாகின என்பது தெரியுமா அமெரிக்காவில் 2002 ஆம் ஆண்டு "டீன்-ஏஜ்" மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு கலந்தாய்வின் முடிவில் பல "டீன்-ஏஜ்"மாணவர்களுக்கு எளிதில் பிறருடன் உரையாடவோ, எளிதில் கருத்துகளை வெளிப்படுத்தவோ தெரியவில்லை என்பது அறியவந்தது.

இதற்காக உருவாக்கப்பட்டது தான் சமூக வலைத்தளம். 2002 ஆம் ஆண்டில் இருந்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல சமூக வலைதளங்கள் வெளிவந்தன.  அவைகளில் சில, Orkut , Hi5 , Twiter , Face Book , LinkedIn , Myspace , Mixi, Tagworld , Bebo , Piczo , Tumblr .   

சமூக வலைதளங்கள் உருவாகி
10 ஆண்டுகள்  கூட நிறைவுறாத நிலையில் 800 மில்லியன் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது மிகப்பெரிய சாதனை தான் . ஆனால் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன்  யார் என்று கூட தெரியாத இன்றைய சூழலில் நாம் அண்டை மாநிலத்தாருடனும் சமூக வலைதலங்களில்  மணிக்கணக்காக உறவு பேணுவது எந்த விதத்தில் நியாயம்?

எவ்வளவோ நல்ல வித செயல்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றங்கள் public -ஆக  share   செய்யப்படுகிறது. நாம் விரும்பிய நபருக்கு மட்டும் ஷேர் ஆகினால் போதும் என்ற நிலையில்  private   sharing   முறையை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். பல ஆக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதங்கள் இன்று அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வன்முறைகளையும், தீவிரவாதத்தையும் இன்று சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும் பல லட்சம் பெண்கள் பெண் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கண்ணோடு கண் பார்த்து காதல் மொழிகள் பேசிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று பார்க்காமலே காதல் என்கிற பெயரில் பெண்களை ஏமாற்றிவரும் கள்வர்கள் அதிகரித்துள்ளனர். சமூக வலைதளங்கலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் வன்முறை கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.   ஏன் அரசியல் வாதிகள் கூட த் தவறான  வழிகளில் சமூக வலைத்தளங்களை  உபயோகப் படுத்தியதற்கான  சான்றுகள் ஏராளம் , அதற்கு சான்றாக நமது தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அனுப்பியது போல் twitter  சமூக வலைத்தளத்தில்  இருந்து அவர்கள் அனுப்பியது மாறியான சமூக விரோத தகவல்களை அனுப்பி பின்னர் மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் பல.

ஆனால் நல்ல வழிகளுக்காக உருவாக்கப்பட்ட சமூகவளைதளத்தை இன்று தீவிரவாதத்திற்காகவும் வன்முறை கொடுமைகளுக்காகவும் பலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருவதால் அதன் மதிப்பை படிப்படியாக இழந்து வருகிறது இதனால் சமூக  வலைதளத்தையே close பண்ணிவிட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது.


ஆனால் இவை அனைத்திற்க்கும் தீர்வு காணும் பொருட்டும் , ஆண்களின் தொல்லையை தடுப்பதற்காகவும் மற்றும் பெண்கள் வன்முறையை
தடுப்பதற்காகவும்  பெண்களுக்கென ஒரு சமூக இணைய தளத்தை தொடங்கி உள்ளார்   கனடா வைச் சேர்ந்த ஒரு பெண்மணி அலெக்சாண்ட்ரா ஜோன்ங்.இந்த இணைய தளத்தில் ஆண்கள் சேர தடை
விதிக்கப் பட்டுள்ளது. லிங்க்டு இன் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற   இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய தளம்: https://www.luluvise.com/


இதில் உறுப்பினர் ஆவதற்கு Face Book  Twitter  ,  LinkedIn வழியாக  பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்து உள்ளே செல்லலாம். ஆனால் LULUVISE.COM மிகுந்த பாதுகாப்புக்குரிய தகவல் பரிமாற்ற வலைதளம். பிரைவேட் முறையில் நமது தகவல்கள் சேகரித்து வைக்கப் படுவதே இந்த வலைதளத்தின் சிறப்பம்சம்இந்த பிரைவேட் முறையால் எவராலும் நமது தகவல்களை காண முடியாது. சமூக வலைதளங்களில் பாதுகாப்பான வழிகளில் உறுப்பினராய் இருக்க ஆசைப்படுபவர்கள் LULUVISE.COM இல் உடனே இணையுங்கள்.     சுதந்திரமாக சமூகவலைதலங்களை உபயோகப்படுத்துங்கள்.

Monday, 5 March 2012

நூலகங்களுக்கும் மூன்றாண்டு உறக்கம் தேவையா ?


இணையத்திலே முழ்கிக்  கிடக்கும் நம் இளைஞர்களுக்கு புத்தகத்தை புரட்டிப் பார்க்க நேரமிராது என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர் . இன்று எத்தனையோ இளைஞர்கள் பல கவிஞர்களின்  பெயர்களை புனைப் பெயர்களாகவும் அவர்களது வழியை பின்பற்றியும்  சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாத அவந்தியில் உள்ளனர். இதன் விளைவாகத் தான் நூலகங்களை
கண்டு கொள்ளாமல் மூன்றாண்டு உறங்க விட்டு விட்டனர் போல!!.

நூலக வரியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வரை நூலக வரி செலுத்துகின்றன. மாவட்ட, கிளை மற்றும் கிராம நூலகங்களின் பராமரிப்பு, ஊழியர் சம்பளம் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு, நூலக வரி தொகை பயன்படுகிறது. இந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 450 கோடி ரூபாயை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தியும், நூலகங்களுக்கு ஒரு புத்தகத்தைக் கூட வாங்காத அவல நிலை உள்ளது.

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க தனி கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், நூலக சங்க செயலர் பல்கலை மற்றும் கல்லூரி நூலகர்கள் உறுப்பினர்கள். இவர்களோடு, பொதுநூலகத் துறை இயக்குனகரம் ஆலோசித்து, நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வாங்கும் புத்தகங்களை முடிவு செய்வர். கடந்த 2009க்கு பின், மூன்றாண்டுகளாக நூலகங்களுக்கு ஒரு புத்தகம் கூட வாங்கப்படாதது குறித்து, நூலக சங்க செயலர், எம்.முத்துசாமி கூறுகையில், ""நூலகத் துறை இயக்குனரகத்துக்கு பல கோரிக்கைகள் விடுத்தும் பலனில்லை. நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம், பதிப்பாளர்களுக்கு கிடைத்து வந்த வருமானம் தடை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாண்டுகளில், 450 கோடி ரூபாய் நூலக வரி செலுத்தப்பட்டு உள்ளது. அது அனைத்தையும் முடக்கியே வைத்துள்ளனர்'' என்றார்.

பொதுநூலகத் துறைக்கு, ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாயை புத்தகங்கள் வாங்குவதற்காக, மத்திய அரசு அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில், இந்த தொகையும் முடங்கி கிடக்கிறது. இதுபற்றி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலர், வைரவன் கூறும்போது, ""புதிய நூல்கள் கிடைப்பதில்லை என்பது நூலகம் சென்று வாசிப்பவர்களுக்கு பெரும் நஷ்டமே. மாவட்ட அளவிலும், கிராமங்களிலும் தனியாக புத்தகம் வாங்கி வாசிப்பவர்களை விட, நூலகம் சென்று வாசிப்பவர்களே மிக அதிகம்'' என்றார். மேலும், ""கடந்து மூன்றாண்டுகளாக புத்தகங்களை ஏன் வாங்கவில்லை என்பதற்கு, நூலகத் துறை காரணங்களைக் கூறவில்லை. புத்தக விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் நூலக இயக்குனரகத்தை பல முறை அணுகியும் பலனில்லை'' என்றார்.

  "எதில் எல்லாமோ ஊழல் நடந்து வருகிறது என்று பார்த்தால் தற்போது அறிவை புகட்டும் புத்தகங்களின் வீடான நுலகங்கலிலும் ஊழலா???"
என்பது தான் தாங்கிக் கொள்ள முடியாத விசயமாக  உள்ளது.

Saturday, 3 March 2012

குறைந்த விலையில் நிறைந்த தரம்


யாவரும் விரும்பி வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் இரண்டு மொபைல் போன்களை  ஜி5 மொபைல் நிறுவனம்
விற்பனைக்குஅறிமுகப்படுத்தி உள்ளது.இவற்றில் ஜி303 என்ற மொபைல்
,புதிய வகையாக வடிவமைக்க்ப்பட்டு ,
டச் அண்ட் டைப் போனாக உள்ளது. இரண்டு சிம் இயக்கத்துடன் 2.8 அங்குலரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.
இரண்டு ஸ்பீக்கர் கள் மற்றும் இரண்டு காமிராக்கள் உள்ளன.1.3 எம்‌பி திறனுடன் பிளாஷ் கொண்ட காமிரா பின்புறமும்
,இன்னொன்று
வீடியோ அழைப்பிற்காக முன்புறமும் தரப்பட்டுள்ளது.அனலாக் டி‌வி
U2Beஇணைந்த புளுடூத் ,எல்‌இ‌டி ,Torch ,8 ஜி‌பி வரை
அதிகப்படுத்தக் கூடிய நினைவகம் ஆகியவை இதன் சிறப்புஅம்ஸங்களாகும் .இதில் 850 எம்‌ஏ‌எச் திறனுடன் கூடிய
பேட்டரிஇணைக்கப்பட்டுள்ளது.கூடுதலாக இந்த போனுடன் தரப்படும் பையில் 700 எம்‌ஏ‌எச் திறன்கொண்ட பேட்டரி யும் தரப்படுகிறது.
இதனால் தொடர்ந்து நாம் தங்கு தடை இன்றி பேசமுடிகிறது
,இந்த போனின் அதிக பட்ச விலை ரூ 3900.

ஜி5 மொபைல் வழங்கும் அடுத்த போன் ஜி616 ,கூடுதல் சிறப்பு அமசங்கள்-யை விரும்பும் இளைஞர்களை குறி வைத்துதயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று ஜி‌எஸ்‌எம் சிம்களைப் பயன்படுத்தலாம் என்பது ஒரு தனிச்சிறப்பு.க்வார்டி கீ போர்டு கொண்ட பிசினஸ் போனாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் திரை2.6 ஐ‌பி‌எஸ் டச் ஸ்கிரீன் கொண்டது.டிஜிட்டல் காமிரா
,எஃப்‌எம் ரேடியோ ம்யூசிக் மற்றும்
வீடியோப்ளேயர்
,32 ஜி‌பி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ,அனலாக் டி‌வி ஏ2டி‌பி இணைந்த புளுடூத் ,எல்‌இ‌டிடார்ச் ,900 எம்‌ஏ‌எச்
திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதில்தரப்படுகிறது.2 ஜி‌பி மெமரி கார்ட் இதனுடன் தரப்படுகிறது.இதன் அதிக பட்ச விலை ரூ3000 மட்டுமே.


குறைந்த விலையில் நிறைந்த சேவைகளை பெற விரும்புவர்கள் உடனே முந்துங்கள்......