Find us on Google+ April 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Monday, 30 April 2012

அழிந்து வரும் தபால் நிலையங்களை ஆக்கத்தின் பாதைக்கு கொண்டு வரும் ATM


தமிழகத்தில், 92 உட்பட நாடு முழுவதும் ஆயிரம் ஏ.டி.எம்., களை
(தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்), அமைக்க தபால் துறை திட்டமிட்டுள்ளது என, மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:தபால் துறை மூலம் நாடு முழுவதும்
ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக,
820 தலைமை தபால் அலுவலகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஏ.டி.எம்.,களை எந்தெந்த தபால் அலுவலகங்களில் அமைப்பது
என்பது விரைவில் கண்டறியப்படும்.


ஆந்திராவில் 100, தமிழகத்தில் 92, உத்திர பிரதேசத்தில் 73,
மகாராஷ்டிராவில் 61, கர்நாடகாவில் 60, கேரளா மற்றும்
ராஜஸ்தானில் தலா 51 என்ற அளவில் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட உள்ளன.
நவீனமயமாக்க திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 969 தபால் அலுவலகங்களை,
தபால்துறை கணினி மயமாக்கியுள்ளது. மேலும், 2013ம் ஆண்டுக்குள் 1.55 லட்சம் தபால் அலுவலகங்களை கணினி மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தபால் நிலையங்களில் பணம் சேமிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு ATM சேவை  இல்லாத ஒரு மிகப் பெரிய குறைபாடும்  தபால் நிலையங்களின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாய் இருந்தது. அதனை  தற்போதாவது அறிந்துள்ளனரே ! இனிமேலவது தபால் நிலையங்களின் சேமிப்பு கணக்கு உயருகிறதா என பார்க்கலாம் !!!!!!!!!!!

Friday, 27 April 2012

அரசியலிலும் இனி சிக்சர் தான் அசத்த வருகிறார் சச்சின்


இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பி.,யாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும். சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன் சந்தித்தார் சச்சின். அது முதலே பற்றிக்கொண்டது பரபரப்பு.

சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்வதாக மீடியாக்கள் கொளுத்திப்போட்டன.தொடர்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சச்சின் அரசியல் பிரவேதத்தை வரவேற்கத்துவங்கின. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதற்கு வரவேற்பு தெரிவித்தன. தொடர்ந்து சச்சினை  ராஜ்யசபா எம்.பி-யாக பரிந்துரை செய்து மத்திய அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட சச்சினை ராஜ்யசபா எம்.பி.-யாக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சச்சின் விரைவில் ராஜ்யசபா எம்.பி-யாக பதவியேற்பார்  என தெரிகிறது.


மேலும், சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதை காந்தியவாதி அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, சச்சின் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.


ஆட்ட நாயகனாக இருந்து  ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்த சச்சின், தற்போது அரசியலில் களம் இறங்கி இருப்பது ஒருபக்கம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் , ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா விருதளித்து பாராட்டுவது போதாதா? அதற்காக அரசியலில் எம்.பி பதவி கொடுத்து தான் பாராட்ட வேண்டுமா என்ன? 


சினிமா நட்சத்திரங்களே இன்றைய அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் புதுவிதமாக விளையாட்டு வீரரை அரசியலுக்குள் கொண்டு வருவது தவறில்லையே என்றும் சிந்திக்க தொனுகிரதல்லவா ?


அவர் அரசியலை ஆடுகளமாக நினைக்கப் போகிறாரா ? இல்லை ஆட்டுவிக்கப் படப்போகிறாரா ?   எது எப்படியிருப்பினும் அரசியலில் முன் அனுபவமே இல்லாத சச்சின் என்ன செய்ய போகிறார் என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.


Wednesday, 25 April 2012

கடலுக்கடியில் பூம்புகார்..

 

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

 

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்"

 

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?

உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

 

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

 

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்'சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

 

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது"

 

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

 

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

 

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

 

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

 

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது" என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

 

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

 

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

 

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

 

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

 

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன" என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி "புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்" என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

 

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

 

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

 

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் 'சுநாமி கண்காணிப்பு மையங்கள்' ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

 

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

Monday, 23 April 2012

பிரெய்லி முறையால் ஒரு வழக்கின் தீர்ப்பே தள்ளி போனதா !உடல் உறுப்புகள் நன்கு செயல்பட்டும், நல்ல எழுத்து  வடிவம் கொண்ட மொழிகள் இருந்துமே  நம்மால் அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று மொழிகளுக்கு மேல் கற்றுக் கொள்ள முடியவில்லை என்பது உண்மை.

 இந்த நிலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் படிக்கும் பிரெய்லி முறையிலும் இரண்டு பிரிவுகளா? 

 

ஒன்று ஆங்கில பிரெய்லி முறை  மற்றொன்று பிரெஞ்சு பிரெய்லி  முறை.
 
இந்த இரண்டு தனிப்பட்ட மொழிகளால்  ஒரு வழக்கின் தீர்ப்பே தள்ளி  போனது   என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
 
சமீபத்தில் நடந்த ஒரு கொலையை நேரடியாக பார்த்த வாய்பேசாத  முடியோதவரை சாட்சி சொல்வதற்காக  நீதி மன்றத்திற்கு அழைத்திருந்தனர். அவர் கூறும் தகவல்களை பிரெய்லி முறையில் மொழிபெயர்த்து சொல்வதற்காக ஒரு  மொழிபெயர்ப்பாளரை வழக்கறிஞர் அழைத்து வந்திருந்தார் .  இறுதியில் வாய் பேச முடியாதவர் சொன்ன சாட்சியை மொழிபெயர்பாலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் நீதி மன்றமே சலசலப்புடன்  இருந்தது. இறுதியாக தான் தெரிந்தது அவர் பேசியது பிரஞ்சு பிரெய்லி முறை என்பது. ஆனால் நமது மொழிபெயர்பாளருக்கு தெரிந்ததோ ஆங்கில பிரெய்லி முறை. ஒரு மொழி மாற்றத்தால் அன்றைய விசாறனையே தள்ளி வைக்கப்பட்டது.
 
இரண்டு மொழிகளில்  ஒன்றை மட்டும் ஆக்க பூர்வ மொழியாக கொண்டு வந்தால்  உலகம் முழுதும் இருக்கும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர்கள் தங்களுடைய கருத்துகளை எளிதில் பரிமாறிக் கொள்ள வழியாக அமையுமே சற்று சிந்தித்துப் பாருங்கள் .

மாம்பழப் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

 
'முக்கனியில் முதல் கனி' மாம்பழம். சுவை தான், அதன் மீதான ஆர்வத்திற்கு காரணம் என்பதால், சில வியாபாரிகள் செய்யும் தில்லு முல்லுக்கு எல்லையே இல்லை. முந்தைய காலங்களில் மாம்பழம் உண்டால், நாக்கு தித்திக்கும். தற்போது வரும் மாம்பழங்களை உண்டால், நாக்கு புண்ணாகிறது.

வெளித்தோற்றத்தில் பழத்தின் சாயல் இருக்கும், சுவைத்தால் சுண்ணாம்பு ருசி.
முன்னர் எத்தனாலை பயன்படுத்தி மாங்காய்களை  பழுக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் , முந்தைய ஆண்டில்  கார்பைடு  கற்களை பயன்படுத்தி வந்தனர் . ஆனால் தற்போது
"கார்பைடு' கற்களை விட மலிவாக கிடைக்கும், திரவம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மூன்று லிட்டர் நீரில், 100 மி.லி., திரவத்தை சேர்த்தால், மூன்று டன் மாங்காய்களை, பழத்தின் தோற்றத்திற்கு கொண்டு வந்துவிடலாம். இது போன்ற பழங்களை வாங்கி உண்பதால், உடல் நலத்திற்கு பாதிப்பே.
ஒவ்வொரு ஆண்டும், மாம்பழம் சீசனின் போது, அதிகாரிகள்
"ரெய்டு' நடத்தி செயற்கை முறை பழங்களை அழிக்கின்றனர். அதன் பிறகும், "பழஉற்பத்தி' தொடர்ந்து கொண்டே தான்  இருக்கிறது.
 
செயற்கை மாம்பழங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
 
வெளித்தோற்றத்தை வைத்து கண்டுபிடிப்பது சிரமம் தான். கருப்பு நிற புள்ளிகள் இருந்தால், அவை செயற்கை முறையில் பழுக்க வைத்தவையாகும். அவற்றை தவிர்ப்பது நல்லது. மாம்பழம் சீசனுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதன் பின் பழங்கள் வாங்கினால் சந்தேகத்தை தவிர்க்கலாம். "சீசனுக்கு முன் பழம் எப்படி கிடைக்கும்,' என்பதை, மக்கள் சிந்திக்க வேண்டும்,
 
ஆகவே சீசன் தொடங்கி பத்து பதினைந்து நாட்களுக்குப் பின்னர் நீங்கள் மாம்பழம் சாப்பிட தொடங்குங்கள் அதுவரை வாயை கொஞ்சம் கட்டிக் கொள்ளுங்கள் முடிந்தவரை பழ மார்க்கெட் பக்கம் செல்லாமல் இருங்கள்.
 

Friday, 20 April 2012

ஆவின் பாலா ? ஒட்டக பாலா?


பாலின் விலை அதிகரித்து வரும் நிலையிலும் அதே சமயம்
 பசு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தினாலும்
தற்போது ஒட்டகப் பாலுக்கு மாறி வருகிறது  ஒரு டிரென்ட்.
 
ஒட்டகப் பாலில் விட்டமின் சி மற்றும் இரும்பு  சத்து அதிகமுள்ளதால்
அதை துபாய் போன்ற நாடுகளில் பயன் படுத்தி வருகின்றனர். 
ஆனால் இதில் என்ன ஒரு கொடுமை ஒட்டக பால் சற்று
உப்பு தன்மையுடையாதாக உள்ளதாம்.
 
பால் கோவா பிரியர்களே இனி நீங்கள் "உப்பு கோவா"
தான் சாப்பிட வேண்டும் .
 
உப்புத் தன்மையை போக்க அதிக அளவு சர்க்கரையை பயன்படுத்
த பின்னர் சர்க்கரைக்கு பஞ்சமாகி
விட  போகிறது !
 
தமிழகத்திற்கும் இந்த நிலை வந்து விடுமோ என்ற
பயத்தின் பீதியில் இருக்கின்றனர் தமிழக மக்கள் .--
Thanks and Regards
S.Jeyapriya
Journalist Of Puthiya Thalaimurai
Web Site:http://ennavazhkai.blogspot.com

Wednesday, 18 April 2012

தொடர் தற்கொலையா?


பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்
தற்கொலைகளின் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே தான் போகிறது.
 
"சாவதற்கு தைரியம் இருப்பவர்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா" ? என்பது சிந்தனைக்கு சவாலாகவே  இருக்கிறது. 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் , ஐ.ஐ.டி-யிலும் வருடந்தோறும் இரண்டுக்கு மேற்பட்ட தற்கொலைகலாவது  நடந்து விடுகின்றது. சென்னை ஐ.ஐ.டி-யில் மட்டும்  2008 - இல் 5 மாணவர்களும்,
2009 - இல் 4 மாணவர்களும், ௨௦௧௦ -இல்  2 மாணவர்களும் 2011 -இல் 9  மாணவர்களும் தற்கொலை செஉது கொண்டு இறந்துள்ளனர் .  
 
தற்போது  அண்ணா பல்கலைக்கழக மாணவன் மணிகண்டன் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து, நேற்று தற்கொலை செய்து கொண்டார்  முதலாமாண்டு சிவில் துறையை சேர்ந்த மாணவி தைரிய லெட்சுமி. இந்த மாணவியின் பெயரில் மட்டும் தான் தைரியம் இருக்கிறதே தவிர அவளுக்குள் இல்லை.
 
இவர்களின் சாவிற்கு காரணம் என்ன?
 
அவர்களுக்குள் எழுகிற  தாழ்வு மனப்பான்மையும், பெற்றோர்களின் கட்டாயமும் தான்.
பள்ளியில் முதல் மாணவனாக இருந்து அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் , கல்லுரியில் மற்ற மாணவர்களுக்கு முன்னால் தங்களை குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு படிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் தாழ்வு மனப்பான்மை என்னும் கூண்டுக்குள் அடைபட்டு விடுகிறனர்.
 
இதற்கான தீர்வு தான் என்ன?
 
ஒன்று தமிழக அரசு முதலாமாண்டு பொறியியல் படிப்புகளின் பாடசுமையை பாதிக்கு பாதியாக
12 -இல் இருந்து 6 -ஆக குறைக்க வேண்டும். அதோடு முதல் செமஸ்டரில் மாணவர்களுக்கிடையே நல்ல ஒரு நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும்  படியாகவும் அவர்களுக்கிடையே எல்லோரும் சமம் என்று உணருகிற நிலை  வருகிற அளவுக்கு பல கலந்துரையாடல்களை வாரம் மூன்று முறை ஏற்படுத்தி தரலாம். அதோடு படிப்புடன் நின்று விடாமல் பொழுது போக்கு அம்சத்திலும் அவர்களை  ஈடுபடுத்தி மனப்பாரத்தை குறைக்கும் படியாக வகுப்புகளை கொண்டு சென்றால் இந்த மாதிரியான உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். 
 
 

Tuesday, 17 April 2012

கிணற்றுத் தண்ணீரில் விளக்கெரிகிறதா?

என்ன ஆச்சரியம் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கும்
இன்றைய கால கட்டத்தில் கிணற்றுத் தண்ணீரில் விளக்கெரிகிறது.
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்  தான்  இந்த ஆச்சரியம்
 600 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும்
அந்த ஊரின் கோவில் கும்பாபிசேகத்திற்காக இந்த கிணற்று
தண்ணீரையே விளக்கேற்றுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.   
தொடந்து 8 மணி நேரம்  தண்ணீர் காலியாகும் வரை அந்த விளக்கு
அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.   
 
இதுவரை எந்த ஒரு விஞ்ஞானியின் கண்ணிலும் படாமல்
தப்பித்திருக்கிறது இந்த எரிபொருள் கிணறு.
எதையேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
இருக்கும் விஞ்ஞானிகள் இந்த தகவலை படித்தால்
 உடனே ராசிபுரம் சென்று ஆராய்சியில் இறங்குங்கள் .
 
வெறும் விளக்கை மட்டும் எரிய வைத்து கொண்டிருக்கும்
 அந்த தண்ணீரை  வாகனங்களுக்கு பவன்படுத்தும்
எரிபொருளாக கூட பயன்படுத்தலாமே !
 

 

Monday, 16 April 2012

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கசகசாவால் ஆறு மாதகால சிறை தண்டனையா?

 
நமது வீடுகளில் சமைக்கும் உணவிற்கும்  மனத்திற்கும் காரணமே
அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பதினோரு வகையான நறுமணப் பொருட்களே
 என்று கூறினால் அது மிகையாகாது.
 
இதன் அடிப்படையில் நான் படித்த ஒரு விநோதமான செய்தியை
 உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
 
தன் மனைவி வாங்கி வர சொன்னாலே என்ற காரணத்தால் துபாயில்
 இருந்து புறப்பட்ட கணவர் ஒரு கிலோ கசகசா-வை வாங்கிக் கொண்டு
விமான நிலையத்தை அடைந்தார். விமான நிலையத்தில் நடந்த
பரிசோதனைக்குப் பின்னர் அவர் துபாய் போலிசால்
'போதை பொருள் கடத்தல் ' குற்ற சாட்டின் கீழ் கைது செய்யப் பட்டார் .
 
எதுவுமே புரியாத நிலையில், தமிழரை சிறை பிடித்ததற்கான காரணத்தை
 கேட்டறிந்த போது தங்கள் நாட்டில் போதைப் பொருட்களுள் ஒன்றாக
கருதப்படுவது கசகசா. அதை எடுத்து சென்ற காரணத்தினால்
 இவரை  'போதை பொருள் கடத்தல் ' பிரிவில் கைது செய்துள்ளோம்
என்று ஆணை பிறப்பித்தனர்,.
 
அடடா இந்த சாதாரண அஞ்சறைப் பெட்டி சமாசாரத்துக்கு  
ஆறு மாத கால சிறை தண்டனையா என உங்களுக்குள்ளே தோனுகிறதல்லாவா?
 
இனிமேலாவது வெளி நாடுகளில் இருந்து பொருட்களை
வாங்கி வரும் போது அந்த நாட்டின் ஏற்றுமதி பட்டியலை தெரிந்து வைத்து
கொண்டு பொருட்களை எடுத்து செல்லலாமே.