Find us on Google+ June 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Sunday, 17 June 2012

உலகப் பணக்காரர்களில் ஒருவர் நித்தியானந்தா !!!


2009 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற   முகேஷ் அம்பானியின் அந்த ஆண்டு வருமானம் 14 கோடி மட்டுமே.
ஆனால் அதே ஆண்டில் உலகம் அறியாத பணக்காரர் பட்டியலில் ஒளிந்து கொண்டிருந்தவர் மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா தான்.
2009-ஆம் ஆண்டில் மட்டும் இவருடைய ஓராண்டு வருமானம் 90 கோடி. அதுவும் கிடைத்த ஆவணங்களின் மூலம் அலசி பார்த்ததிலே 90 கோடி என்றால் அதையும் மீறி எவ்வளவு சொத்து சேர்த்திருப்பாரோ தெரியவில்லை.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு 2ஜி வழக்கில் கொள்ளை அடித்த பணத்தை விட அதிகமாகும் போல.
இந்த பணத்தையெல்லாம் அவர் எப்படி சம்பாதித்தார் என்று பார்த்தால்
21 நாள் தியான பயிற்சி சொல்லி கொடுப்பதற்கு, ஆள் ஒருவரிடம் 3 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பாரம் அமெரிக்காவில்.
ஒருவரிடம் 3 லட்சமா என்கிறீர்களா ? இங்கே இந்தியாவில் மூளையை கசக்கி மென்பொருளிலே வேலை பார்ப்பவனுக்கு வருட சாம்பளமே 3 இலட்சம் தானே கிடைக்கிறது.  அப்படி இருக்கையில் அமெரிக்கர்களின் ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து அவர்கள் தியானம் கற்க முன்வருகிறார்கள்.
தியானப் பயிற்சி மட்டுமல்லாது சாமி சிலைகள் மற்றும் ருத்ராட்ச மாலைகள் செய்தும் அதனை வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்று வருகிறார்.
இன்னொரு பக்கம் அவருடைய சீடர்கள் பலர் மூலமும் அவருக்கு பணம் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.
சுவிஸ் வங்கியில் இருப்பது கருப்பு பணம் என்றால் நித்தியானந்தாவின் மொத்த சொத்து மதிப்பை எந்த கணக்கில் சேர்ப்பது?

நடுத்தர குடிமகன்‌களைக் காக்க “குடிமகன்களுக்கு” விலை உயர்வு !


எரியும் அடுப்பில் இருந்து ஒடும் வாகனம் வரையிலும் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.  இந்த நிலையை எப்படி நடுத்தரவர்க்க குடிமகனால் சமாளிக்க முடியும்.
அரசின் கல்லாப்பெட்டியை நிறைப்பதற்கு நடுத்தரவர்க்க குடிமகன்‌கள் தான் கிடைத்தோமா?  இதற்கு மாற்று வழி யோசிக்கலாமே !

தினமும் எந்த கடை வெறிச்சோடி கிடக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த டாஸ் மார்க் கடைகள் மட்டும் வெயிலானாலும், குளிரானாலும் விடுமுறையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் 6804 மதுபானக்கடைகள் உள்ளன.
இவற்றின் மூலம் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் மட்டும் கோடியை தொட்டு விடுகிறது. இப்படிப் பட்ட குடிமகன்‌கள் குடிக்கும் குடிபானத்தின் விலையை ஏற்றம் செய்தாலே போதும் நாட்டின் கல்லாவையும் நிரப்பி விடலாம்.  
விலை உய்ர்வினால் சில குடிமகன்‌களையும் நல் வழிப்பாதையில் கொண்டு சென்று விடலாம்.  இதற்கு பெயர் தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காவோ??

லண்டன் ஒலிம்பிக்கில் வெறும் 76 இந்தியர்கள் தானா?

120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 76 பேர் தான் ஒலிம்பிக்கிற்கு தகுதி படைத்துள்ளனர் என்பது நமது இந்திய விளையாட்டு வீரர்களின் திறமையை தவிடு பொடியாக்கியதைப் போன்று உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று கூடுதல் தான் .  சீன ஒலிம்பிக்கில் 56 பேர் தேர்வாகியிருந்தனர். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கிற்கு ஆண்கள் 56 பேரும் பெண்கள் 20 பேரும் தேர்வாகியுள்ளனர்.
இருப்பினும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பதக்கங்களை வென்று குவித்தவர்களால் கூட ஏன் ஒலிம்பிக்கில் தேர்வாக முடியவில்லை என்பது இன்றளவும் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
அப்படியே தேர்வாகினாலும் ஒரு சிலர் மட்டுமே பதக்கங்களைப் பெறுகிறார்கள். அதிலும் வெண்கலப் பதக்கங்களே முதலிடம் பிடிக்கிறது. அத்திப் பூத்தார் போல் எப்போதாவது ஓரிரு தங்கத்துடனே நாம் சாதனை படைக்கிறோம்.  
இத்தனை கோடி மக்கள் தொகையில் ஒரே ஒரு தங்கம் பெறுவதற்கான வீரர் மட்டுமே உள்ளாரா என்ற கேள்விக்கு இன்றளவும் சரியான பதில் கிடைக்கவில்லை.
சிறுவயது முதல் வாலிபவயது வரை விளையாட்டில் ஆர்வம் காட்டாத இளைஞர்களே நம் இந்தியாவில் இல்லை எனலாம்.  பெண்களின் விளையாட்டு திறனுக்கு ஓரளவிற்கு மேல் முட்டுக்கட்டை போடும் மாநிலங்களே இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன.
விளையாட்டில் ஆர்வம் இருந்தும் ஊக்கப்படுத்த பெற்றோரும் இருந்தும் விளையாட மைதானங்கள் சரிவர இல்லாமமையால் இன்னும் பல
வீரர் / வீராங்கனைகளை நாம் இழந்து வருகிறோம்.
அந்நிய நாடுகளில் ஏதுவான தகவமைப்பு அவரவர்  விருப்பத்திற்கும் குறிக்கோளுக்கும் ஏற்றார் போல அமைந்திருப்பது அவர்களின் ஒலிம்பிக் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக உள்ளது.
இந்தியாவிலும் அதே தகவமைப்பும், பெண் அடிமைக் கட்டுப்பாடும் தகர்ந்தால் நிச்சயம் நம்மாலும் பல தங்கங்களைப் பெற முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வளர்ந்து வரும் கலாச்சாரம் நிச்சயம் நம் இந்தியாவின் தகவமைப்பை மாற்றிக்காட்டுமாதலால் நிச்சயம் அடுத்த இரண்டு மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்கள் வாங்கப் போகும் தங்கம் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது.
                                                   

ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை.
1997 ஆம் ஆண்டு அமல் படுத்த பட்ட இந்த திட்டத்தில் ஏற்பட்ட பல குளறுபடியால் இந்த திட்டம் பாதியிலையே கைவிடப் பட்டது. மீண்டும் பல புதிய திருத்ததுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தினமும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்க்கு வந்து போகின்றனர்.  120 அதிவேக இரயில்களும், 273 எலெக்ட்ரிக் இரயில்களும் வந்து போகின்றன. 
பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவோர்களை அங்கிருக்கும் ஆட்டோக்காரர்கள் அதிக பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றவே சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 204 இடத்திற்கு ப்ரீபெய்ட் ஆட்டோ சேவையை அறிமுப்படுத்தியுள்ளது தமிழக அரசு..
ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை கட்டண சீட்டில் ஆட்டோவின் பதிவெண், செல்லும் இடம், கட்டண ரூபாய் என அனைத்தும் இடம் பெற்று இருப்பது சிறப்பம்சமாக இருக்கிறது.
இதன் மூலம் தவற விட்டுச் சென்ற பொருட்களையும் ஆட்டோவின் என்னை வைத்து மீட்டு விடலாம்.
கட்டண சீட்டில் இருக்கும் தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த நம்பருக்கு 9962500500 தொலைபேசி அழைப்பு விடுக்கலாம். அல்லது சென்ட்ரல் இரயில் நிலைய அலுவரின் கைபேசிக்கும் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.அவரது கைபேசி எண்-7598000099.
சென்னை வரும் புது பயணிகள் ஏமாற்றமடையாமல் தமிழக அரசின் சேவையை பயன்படுத்திக் கொள்வடற்காகவே இந்த திட்டத்தை எண் வலை தளத்தில் உங்களுக்காக்காக பகிர்ந்துள்ளேன்.

Saturday, 16 June 2012

ஒரு விஞ்ஞானியை உருவாக்கிய அம்மா சென்டிமெண்ட்


காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து செல்போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான் என்பவர் .
பரமக்குடி அரசு  .டி.-யில் படிப்பை முடித்து விட்டு தற்போது
எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.   இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம்.   இந்த ஆர்வம் அவருக்கு இளம் வயதிலையே இருந்ததா என்று கேட்டதற்கு இல்லை என்று  பதிலளித்த அவர்  , அவருக்குள் ஆர்வம் வந்தது  எப்போது என்பதை  புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஓராண்டுக்கு முன்னர் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்தோம். என் அம்மாவை பரிசோதித்த மருத்துவர் உன் அம்மாவுக்கு இருதய நோய் இருக்கிறது எனவும் அதனால் பெரிய வேலைகள் ஏதும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.  மறுநாள் என் அம்மா வழக்கமாக செய்யும் வேலைகளை கவனிக்கும் போது , அவர் கஷ்டப்பட்டு நல்ல தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த அந்த நொடி தான் எனது முதல் கண்டுபிடிப்பிற்கான அஸ்திவாரத்தை நான் போட்டேன்.
அதனை தொடர்ந்து எலெக்ட்ரிகல் மோட்டார் மூலம் தன்னிச்சையாக தண்ணீர் வரும் கருவியை  கண்டுபிடித்தேன். 12 வோல்ட்  மின்சாரத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிகல் மோட்டரை   ஜனவரி 1 - ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம்  செய்து காட்டினேன். தன் சாதனையைப்  பாராட்டிய அவர் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டுமென ஊக்குவித்தார்.

அதற்கு அடுத்த  படியாக எனக்கு கண்டுபிடிப்பின் மீது இருந்த ஆர்வம் அதிகமானதாகையால் , அடுத்த கண்டுபிடிப்பில் களம் இறங்கிய நான் காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளேன்.

இன்றைய நிலையில் மனிதனின் ஆறாவது விரலாக செயல்படும்  செல்போன்களை, நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக நாம் ஜார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காகவே நான் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளேன். 


இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடை பயன்படுத்தியுள்ளேன்.

தொடக்கத்தில் 4.5 வோல்ட்  மின்சாரம் தேவைப்பட்டதால் டையோடுகளை பலமுறை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்தேன் . இறுதியாக டையோடு(4007 )- ஐ பயன்படுத்தும் போது செல்போன் சார்ஜ்  ஆனது.இதனை  தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.

சில செல்போன்களை  ஜார்ஜ் செய்வதற்கு   5   வோல்ட் மின்சாரம் தேவைப்படுவதால் அதற்கான முறையில் சில மாறுதல்களை எனது கண்டுபிடிப்பில் புகுத்தி வருகிறேன்.

தற்போது இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு ( பைக் )  ஜார்ஜ் தீர்ந்து போனாலும் காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கி  பேட்டரியை   ரீஜார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடுத்து வருகிறேன்.

இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறைப்படுத்த  அதிக செலவு ஆவதால் அரசிடம் இருந்து ஊக்கத்  தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்கிறார் பீட்டர் ஜான்.

குறிப்பு:

தென் மாவட்ட விஞ்ஞானி பற்றிய இந்த கட்டுரையை இந்த வார “புதிய தலைமுறை”(15.06.2012) இதழில் எனது எழுத்தாக பிரசுரமாகி இருக்கிறது.

Wednesday, 13 June 2012

விளைநிலங்கள் எல்லாம் தமிழகத்தில் "விலை நிலங்களாகின்றன".


தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நின்ற நம் தமிழர்கள் தற்போது காய்கறிகளுக்காவும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


இதற்கெல்லாம் என்ன காரணம் ?


தற்போது தமிழகத்தில்  விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில்  விளைவிக்க இடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 


தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து 5000 டன் காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்தும் 800 டன் காய்கறிகள் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன.


ஒரு வழியாக எவ்வளவோ போராடி காவிரி குடிநீர் பிரச்சனையில் நாமும் கர்நாடாகவும் சமரசம் ஆகிவிட்டோம்.

தற்போது நாங்கள் தான் மொத்த காய்கறியும் தருகிறோமே இனி எதற்கு தேவைக்கு அதிகமான தண்ணீர் உங்களுக்கு? -என கர்நாடக அரசு இதையும் ஒரு காரணமாக கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்காமல் இருக்க நாம் தான் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக பணத்தையே

உண்டு நம்மால் வாழ்ந்துவிட முடியுமா?இந்த நிலை நீடித்தால் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.......


Monday, 11 June 2012

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?


இந்த கட்டுரையை Facebook இல் படித்தது. . உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். .

.......PLEASE SHARE THIS......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...


கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??


கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.

இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!


நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...


இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???


1 )
ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.


2 )
ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..


கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...


LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE


BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE:-

வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.


TOOTH BRUSH:-

வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B


SHAVING CREAM:-

வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.


BLADE:-

வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.


TALCUM POWDER:-

வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.


MILK POWDER:-

வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO:-

வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.


MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.


Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.


BUY INDIAN TO BE INDIAN...


நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

நன்றி- Abdul Majith

பேஸ்புக் நண்பர்.