Find us on Google+ February 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Thursday 23 February 2012

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்!


அமைச்சர்கள் மாற்றம் ,ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகள் சுழற்றியடிப்பு ..இந்த
ம்யூசிக்கல் சேர் விளையாட்டுக்கு இடையே சற்று ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை
வெளியிட்டுள்ளார் முதல்வர்.இனி ஆண்டு தோறும் கல்லூரி மானவர்களுக்கு
மென்பொருள் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.மின் ஆளுமையை தமிழகத்தில்
ஆழமாக வேறுன்றச் செய்யவும் ,தகவல் தொழில் நுட்பத்தில் தமிழக இளைஞர்களின்
திறனை ஊக்குவிக்கவும் இந்த விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த
முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.ஆனால் அது உண்மையான ,நேர்மையான,மதிப்பு
மிக்க வெற்றியாக வேண்டுமென்றால் சில முடிவுகளை தமிழக அரசு மேற்கொண்டேயாக
வேண்டும்.தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் தொழில் நுட்பம் சார்ந்த
மென்பொருள் உருவாக்கம்,மாற்றுத திறனாளிகளுக்கு பயனளிக்கும் தொழில்
நுட்பங்கள் உருவாக்கம் ,நரம்பியல் வலை யமைப்பைக் கொண்ட தொழில் நுட்ப
உருவாக்கம் ஆகிய பிரிவுகளில் கல்லூரி மானவர்களுக்கு போட்டி
நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளுக்கு ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த தமிழக
அரசு மாணவர்களை வலியுறுத்த வேண்டும்.காரணம் மாணவர்கள் உருவாக்கப்போகும்
மென்பொருள் சுதந்திரமாகவும் ,எந்த ஒரு ஐடி  வியாபாரிகள் தலையீடும்
இல்லாமல் இருக்க வேண்டும்.இல்லையேல் மானவர்களின் உழைப்பால் உருவாகும்
தொழில் நுட்பங்களுக்கு நாங்கள் தான் முதுகெலும்பு என்று அந்த நிறுவனங்கள்
கொக்கரித்து ,தங்கள் ஆதிக்க வலையை விரிக்க தொடங்கி விடும்.

அடுத்து ,அமைச்சர்கள் உள்பட தகவல் தொழில் நுட்ப அறிவு அறவே அற்றவர்களின்
பார்வை கூட தேர்வு குழுவில் பட விடக்கூடாது.தகவல் தொழில் நுட்ப
நிபுணர்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தை தமிழகத்தில்
பரவச் செய்யும் மேற்கொள்ளும் தொழில் நுட்ப செய்தியாளர்கள் அறிஞர்களையும்
தேர்வுக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இதை எல்லாம் செய்தல் தான் அரசின் அறிவிப்பு முழுமை பெறும்,செழுமை பெறும்
! ! இல்லையேல் ,பத்தோடு பதினொன்று தான்! ! !.

Tuesday 21 February 2012

வேற்று கிரக வாசியாக நீங்க ரெடியா?

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்விப்பான் மற்றும் வாகனங்களினால்

வெளியேற்றப்படக்கூடிய புகையினால் ஒவ்வொரு நாளும் ஓசோனின் ஒட்டையை பெரிதாக்கி கொண்டே இருக்கிறோம்.

இந்த நேரத்தில் நாம் இருக்கும் பூமியை விட்டு விட்டு , புதிய பூமிக்குள் அடியெடுத்து வைப்பதற்கான நேரம் தற்போது வந்து விட்டது.


நமது விஞ்ஞானிகள் புதிய பூமியை கண்டறிவதில் அதிக அளவு ஆர்வம் செலுத்தியதன் விளைவாக super-Earth GJ 667Cc

என்ற புதிய பூமியை ஜெர்மனியை சேர்ந்த கில்லன் ஆங்கிலாடா-எஸ்கூட் என்ற விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.

இந்த புதியபூமி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமையை விட பத்து மடங்கு பெரியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் 4.5 மடங்கு அதிகமாக நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.

இந்த புதிய பூமி ஒரு முறை தனைத்தானே சுற்றிவர 28 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

பூமியில் இருந்து 22 ஒளி ஆண்டுகள் அதாவது 209 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் super-Earth GJ 667Cc உள்ளது.


200 முதல் 400 மில்லியன் விண்மீன் கூட்டங்கள் இந்த பேரண்டத்திலே உள்ளன.

அதிலே, இந்த புதிய பூமியானது மூன்று விண்மீன் கூட்டம் இணைந்தாற் போன்று காட்சி அளிக்கிறது.

எனவே இதனை M-CLASS குறுவிண்மீன் வகுப்பில் சேர்த்துள்ளனர்.இந்த கிரகம் பார்ப்பதற்கு ஒரு நீல நிற புள்ளியாக காட்சி அளிக்கிறது.


வான சாஸ்திரிகளுக்கே வியப்பூட்டும் நிலையில் GJ667Cc புதிய பூமி அமைந்துள்ளது.

இதன் புறப்பரப்பு மிகுதியான தண்ணீரை கொண்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் புவியினைப் போன்றே அனைத்து மூலக்கூறுகளும் அமைந்துள்ளதாகவும் கெப்ளரின் விதிகளுக்கு உட்பட்டதாகவும் உள்ளது.

அப்படியே 90 சதவிகிதம் புவியினை ஒத்த வாயு மண்டலத்தைக் கொண்டுள்ளது.


இதில் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் அதிக அளவு அகச்சிவப்பு கதிர்களை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளது ,

அதோடு ஹைட்ரஜன், ஹீலியம், அயர்ன், கார்பன் மற்றும் சிலிக்கானும் போன்ற வேதி பொருட்களும் பூமியில் காணப்படுவது போலவே உள்ளது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த super-Earth GJ 667Cc மனித குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை என்றே சொல்லலாம்.








                                        






Tuesday 14 February 2012

காதலின் இலக்கு எது?


ஒருவர், தனக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் இலக்காக இருக்கிறது. சிலரைத் தவிர, வாழ்க்கையில் காதலிக்காமல் யாருமே இருந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும்.

எப்படி வந்தது:காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். மத நம்பிக்கைக்காக உயிரை துறந்த துறவிகளின் நினைவை போற்ற வேலன்டைன் தினம் தோன்றியதாக கருதப்படுகிறது. எனினும் இந்த கதை 14ம் நூற்றாண்டில் மாறியது. ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்க் களத்திற்கு அழைத்தார். அழைப்பிற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசன், அவருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. பின் அவரது நினைவுநாளையே வேலன்டைன் தினமாக இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தான் வேலன்டைன் தினம் முழுவதுமாக காதலர் தினமாக மாறியது.

காதலருக்கு பிடித்த இடம் எது: காதலர்களுக்கு பிடித்த இடமாக இந்தியாவில் கோவாவும், உலகளவில் பாரீசும் உள்ளன. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "ஸ்கைஸ்கேனர்' என்ற டிராவல் அமைப்பு இந்தியாவில் உள்ள காதலர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 850 பேர் இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். உள்நாட்டில் காதலர்கள் செல்ல விரும்பும் இடமாக கோவாவுக்கு 28 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அடுத்தபடியாக அந்தமான் தீவுகள் (14 சதவீதம்), ஆக்ரா (9 சதவீதம்), கேரளா (8 சதவீதம்) , சிம்லா (8 சதவீதம்), மணாலி, டார்ஜிலிங், ஊட்டி, குல்மார்க், கூர்க் ஆகியவை உள்ளன. இந்திய காதலர்கள், வெளிநாடுகளில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் (24 சதவீதம்) செல்வதையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்த இடங்களில் வெனிஸ் (இத்தாலி), லாஸ் வேகாஸ் (அமெரிக்கா), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), ரோம் (இத்தாலி), ஹவாய் (அமெரிக்கா), நியூயார்க் (அமெரிக்கா), மாலே (மாலத்தீவு), புகாட் (தாய்லாந்து), பாலி (இந்தோனேஷியா) ஆகிய நகரங்கள் உள்ளன.


எதிர்ப்பை மீறி:காதலர் தினம் என்பது மேற்கத்திய பண்பாடு , வியாபார நோக்கங்களுக்காக வர்த்தக நிறுவனங்கள், இத்தகைய கலாசாரத்தை இந்தியாவிலும் பரப்புகின்றனர், எனவே அதை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மைசூரு உள்ளிட்ட சில இடங்களில் காதலர்கள் மீது தாக்குதல்கள் சம்பவங்களும் நடந்தன. இருந்தாலும் காதல் என்றாலே எதிர்ப்பு தான். அது போல, காதலர் தினமும் பல எதிர்ப்புகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது.

Saturday 11 February 2012

இதற்கு பெயர் தான் தேசப்பற்றா?


தமிழன் தேசப் பற்று ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!
பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
... ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!
எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...!
மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன் எல்லைதாண்டி போகிறான் என்றான்...!
முல்லை பெரியாறு பிரச்சனை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர் வருவதில்லை என்றான்...!
இதோ இன்று...!
சபரி மலையில் ...தமிழர்கள் தாக்கப்பட்டனர்..!அழைப்போம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரமாட்டான் ...!
ஏன் என்று கேட்டால் ...யார் அவர்களை கேரள கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!
ஆனால்.......!
இந்திய -மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் ..
எவனும் அழைக்க வில்லை...!
வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..!
ஏன் என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...!
அடேய் ..!
தமிழா வாழ்க உனது தேசப் பற்று..!

தேவாலயம், கோவிலாக மாற்றப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் தான் இந்துக்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாகவும் , முஸ்லீம்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாபர் மசூதி பிரச்சனைக்கு இன்னும் சரியான தீர்ப்பு கூட வழங்க முடியாமல் உள்ளது , மதங்களை மாறுவதிலும், மதப் பிரச்னையை உருவாக்கும் பதப்பிசாசுகலாய் நாம் ஏன் மாற வேண்டும். நம் நாட்டில் தான் இப்படி இருக்கே தவிர வேறு எங்குமே இப்படி இல்லை அதற்கு முன் உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் யாரேனும் இதை ஆதரித்து இருப்போமா? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .....       நமக்குள்ளே நாம் மதமெனும் கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நமை நாமே சிறையில் அடித்துக் கொள்கிறோம்.

இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது. இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் இந்த கோயில் பணிகள் குறித்து கூறுகையில், இப்படி ஒரு கோயில் உருவாவது இந்து மதத்திற்கு இதுஒரு சிறந்த மைல்கல் ஆகும். ஆன்மிகம் பரப்புவதில் சிறந்த பங்காற்றும். இந்த பகுதியில் உள்ள திரை நட்சத்திரங்கள், பாடகர்கள், பேசன் டிசைனர் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து முன்னேறி இருக்கிறது என்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை மட்டுமல்லவா பார்க்கிறார்கள்,
ஆனால் நமக்கு தேவை "மனித உரிமைகள் இல்லையே, மதங்கள் தானே" இப்படி இருக்கையில் எப்படி நாம் முன்னுக்கு வருவது?

Friday 10 February 2012

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


அரசாங்க வேலை பார்த்துக் கொண்டும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டும் இலவசத்திலே இலாக்காக்களை வாங்கி போடுபவர்களுக்கு நமது அரசு தற்போது தான் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளது.

அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்காக இலவசமாக தரப்பட்ட வீடுகளையும்  வைத்துக் கொண்டு அவர்கள் வசதிக் கேற்ப வீடுகளை வாங்கி கொண்டு உள்ள பலபேர்கள் இன்று தஊண்டில் மீனாய் பிடிபட்டனர்.   கோவையில் மட்டும்  1642 பேர் இந்த மோசடி வழக்கில் மாட்டி உள்ளனர். கோவியில் மட்டுமே இப்படி என்றால் மொத்த தமிழகத்திலும் கணக்குப் போட்டு பார்த்தால் .... எத்தனை இலட்சங்களைத் தாண்டுமோ தெரியவில்லை?

சிலர் ஒன்றுக்கு நான்கு வீடு வைத்துக் கொண்டு இருக்க இன்னும் சிலர் குடிசைக்கே வழியில்லாமல் தெருவூரங்களில் வாழ்வாதா? என்ன ஏற்றத்தாழ்வு இந்த சமூகத்தில் ?

இவர்களை எத்தனை "அண்ணா ஹசாரே" வந்தாலும் திருத்த முடியாது போல?  "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தானே? "

அரசாங்க சொத்தை அழித்து இவர்களெல்லாம் நமது நாட்டை மேலும் ஏழை நாடாகவே மாற்றுகின்றனர்.

வொய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறி டி

தீவிரவாதம் பெருகிக் கொண்டிருக்கிறது தான், ஆனால் பிஞ்சிலேயே தீவிரவாதத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் நெஞ்சை உருக்குலைய வைக்கிறது. 

      கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.

பள்ளியில் மாணவர்களை அடிப்பதே தவறு என்கிற சட்டம் வகுக்கப்பட்டு விட்டது, இந்த நிலையில் அவர்களின் குறைகளை திருத்திக் கொள்ள கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் வேணும். அதைதான் இந்த ஆசிரியையும் செய்துள்ளார்.   சாதாரண விசயத்தையே தாங்கிக் கொள்ளமுடியாத மாணவர்கள் இருக்கும் வரையில் இந்த சமுதாயம் எப்படி முன்னுக்கு வரப் போகிறது என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது?

பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி  . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும்