நலம், நலமறிய ஆவல் என்று கடிதம் எழுதி பதிலுக்கு காத்திருந்த காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. கடிதங்களை மறந்து தொலைபேசிகளின் மூலம் தொலைதூர உறவினை மேற்கொண்ட நாம் இன்று ஆறாவது விரலாக கைபேசியினை உபயோகித்து வுருகிறோம்.
இணையத்தின் மூலம் இன்று உலகமே பேஸ்புக்கின் இயக்கத்தில் சுழன்று கொண்டிருக்கும் வேலையில், 11.11.2011 ஆம் ஆண்டுக்கான சிறப்புத் திட்டத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 1111 சேவை திட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில், இந்திய தபால் துறை சார்பாக சிறப்பு தபால் உறையை வெளியிட்டனர்.
தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியினாலும், இணையத்தின் அமோக வாடிக்கையாளர்களினாலும் கடிதங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. இன்லேண்ட் லெட்டர், மஞ்சள் அட்டை போன்றவைகளே அழிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா தேவை தானா?
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், புத்தாண்டுகளுக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கம் இருந்தது. நடைமுறையில் அதுவும் அழியத் தொடங்கியது. தற்போது இருக்கும் நேரப் பற்றாக்குறையால் தபால் அலுவலகம் சென்று வாழ்த்து மடல் அனுப்ப எவரும் முன் வருவதில்லை. வாழ்த்து மடலையும் இணையத்தில் இணைத்திடும் மக்களே இன்று பெரும்பாலானோர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகளை தபால் காரர்களிடம் இருந்து வாங்கி படிப்பதற்கும் இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இப்படி தபால் நிலையமே அழிந்து வரும் நிலையில் தபால் உறை வெளியீடு தேவை தானா?????
3 comments:
///முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், புத்தாண்டுகளுக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கம் இருந்தது. நடைமுறையில் அதுவும் அழியத் தொடங்கியது. தற்போது இருக்கும் நேரப் பற்றாக்குறையால் தபால் அலுவலகம் சென்று வாழ்த்து மடல் அனுப்ப எவரும் முன் வருவதில்லை. வாழ்த்து மடலையும் இணையத்தில் இணைத்திடும் மக்களே இன்று பெரும்பாலானோர். ////
நிதர்சன உண்மை..!! பகிர்வுக்கு நன்றி..!!!!
I think this function is waste.........
Thanks & Regards,
Isai Selvan S
இந்த பதிவில் நீங்கள் சொன்ன கருத்துக்கு நான் மாறுபடுகிறேன். தபால் தலைகள் மிக அவசியம் என நான் கருதுகிறேன். வாழ்த்துகளை அனுப்பவாவது நாம் தபால் தலையை உபயோகப்படுத்த வேண்டும். இங்கு நான் வசிக்கும் அமெரிக்காவில் தபால் முலம் வாழ்த்துக்களை அனுப்பினால் அதற்குள்ள மரியாதையே தனிதான். எனக்கு யாரவது இமெயிலில் வாழ்த்து அனுப்பினால் அதை நான் படிக்காமல் டெலிட் செய்து விடுவேன்.
Post a Comment