Find us on Google+ Jeyapriya Online !: Jp's Info

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Showing posts with label Jp's Info. Show all posts
Showing posts with label Jp's Info. Show all posts

Saturday, 3 March 2012

குறைந்த விலையில் நிறைந்த தரம்


யாவரும் விரும்பி வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் இரண்டு மொபைல் போன்களை  ஜி5 மொபைல் நிறுவனம்
விற்பனைக்குஅறிமுகப்படுத்தி உள்ளது.இவற்றில் ஜி303 என்ற மொபைல்
,புதிய வகையாக வடிவமைக்க்ப்பட்டு ,
டச் அண்ட் டைப் போனாக உள்ளது. இரண்டு சிம் இயக்கத்துடன் 2.8 அங்குலரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.
இரண்டு ஸ்பீக்கர் கள் மற்றும் இரண்டு காமிராக்கள் உள்ளன.1.3 எம்‌பி திறனுடன் பிளாஷ் கொண்ட காமிரா பின்புறமும்
,இன்னொன்று
வீடியோ அழைப்பிற்காக முன்புறமும் தரப்பட்டுள்ளது.அனலாக் டி‌வி
U2Beஇணைந்த புளுடூத் ,எல்‌இ‌டி ,Torch ,8 ஜி‌பி வரை
அதிகப்படுத்தக் கூடிய நினைவகம் ஆகியவை இதன் சிறப்புஅம்ஸங்களாகும் .இதில் 850 எம்‌ஏ‌எச் திறனுடன் கூடிய
பேட்டரிஇணைக்கப்பட்டுள்ளது.கூடுதலாக இந்த போனுடன் தரப்படும் பையில் 700 எம்‌ஏ‌எச் திறன்கொண்ட பேட்டரி யும் தரப்படுகிறது.
இதனால் தொடர்ந்து நாம் தங்கு தடை இன்றி பேசமுடிகிறது
,இந்த போனின் அதிக பட்ச விலை ரூ 3900.

ஜி5 மொபைல் வழங்கும் அடுத்த போன் ஜி616 ,கூடுதல் சிறப்பு அமசங்கள்-யை விரும்பும் இளைஞர்களை குறி வைத்துதயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று ஜி‌எஸ்‌எம் சிம்களைப் பயன்படுத்தலாம் என்பது ஒரு தனிச்சிறப்பு.க்வார்டி கீ போர்டு கொண்ட பிசினஸ் போனாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் திரை2.6 ஐ‌பி‌எஸ் டச் ஸ்கிரீன் கொண்டது.டிஜிட்டல் காமிரா
,எஃப்‌எம் ரேடியோ ம்யூசிக் மற்றும்
வீடியோப்ளேயர்
,32 ஜி‌பி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ,அனலாக் டி‌வி ஏ2டி‌பி இணைந்த புளுடூத் ,எல்‌இ‌டிடார்ச் ,900 எம்‌ஏ‌எச்
திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதில்தரப்படுகிறது.2 ஜி‌பி மெமரி கார்ட் இதனுடன் தரப்படுகிறது.இதன் அதிக பட்ச விலை ரூ3000 மட்டுமே.


குறைந்த விலையில் நிறைந்த சேவைகளை பெற விரும்புவர்கள் உடனே முந்துங்கள்......

Thursday, 23 February 2012

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்!


அமைச்சர்கள் மாற்றம் ,ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகள் சுழற்றியடிப்பு ..இந்த
ம்யூசிக்கல் சேர் விளையாட்டுக்கு இடையே சற்று ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை
வெளியிட்டுள்ளார் முதல்வர்.இனி ஆண்டு தோறும் கல்லூரி மானவர்களுக்கு
மென்பொருள் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.மின் ஆளுமையை தமிழகத்தில்
ஆழமாக வேறுன்றச் செய்யவும் ,தகவல் தொழில் நுட்பத்தில் தமிழக இளைஞர்களின்
திறனை ஊக்குவிக்கவும் இந்த விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த
முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.ஆனால் அது உண்மையான ,நேர்மையான,மதிப்பு
மிக்க வெற்றியாக வேண்டுமென்றால் சில முடிவுகளை தமிழக அரசு மேற்கொண்டேயாக
வேண்டும்.தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் தொழில் நுட்பம் சார்ந்த
மென்பொருள் உருவாக்கம்,மாற்றுத திறனாளிகளுக்கு பயனளிக்கும் தொழில்
நுட்பங்கள் உருவாக்கம் ,நரம்பியல் வலை யமைப்பைக் கொண்ட தொழில் நுட்ப
உருவாக்கம் ஆகிய பிரிவுகளில் கல்லூரி மானவர்களுக்கு போட்டி
நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளுக்கு ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த தமிழக
அரசு மாணவர்களை வலியுறுத்த வேண்டும்.காரணம் மாணவர்கள் உருவாக்கப்போகும்
மென்பொருள் சுதந்திரமாகவும் ,எந்த ஒரு ஐடி  வியாபாரிகள் தலையீடும்
இல்லாமல் இருக்க வேண்டும்.இல்லையேல் மானவர்களின் உழைப்பால் உருவாகும்
தொழில் நுட்பங்களுக்கு நாங்கள் தான் முதுகெலும்பு என்று அந்த நிறுவனங்கள்
கொக்கரித்து ,தங்கள் ஆதிக்க வலையை விரிக்க தொடங்கி விடும்.

அடுத்து ,அமைச்சர்கள் உள்பட தகவல் தொழில் நுட்ப அறிவு அறவே அற்றவர்களின்
பார்வை கூட தேர்வு குழுவில் பட விடக்கூடாது.தகவல் தொழில் நுட்ப
நிபுணர்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தை தமிழகத்தில்
பரவச் செய்யும் மேற்கொள்ளும் தொழில் நுட்ப செய்தியாளர்கள் அறிஞர்களையும்
தேர்வுக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இதை எல்லாம் செய்தல் தான் அரசின் அறிவிப்பு முழுமை பெறும்,செழுமை பெறும்
! ! இல்லையேல் ,பத்தோடு பதினொன்று தான்! ! !.

Tuesday, 21 February 2012

வேற்று கிரக வாசியாக நீங்க ரெடியா?

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்விப்பான் மற்றும் வாகனங்களினால்

வெளியேற்றப்படக்கூடிய புகையினால் ஒவ்வொரு நாளும் ஓசோனின் ஒட்டையை பெரிதாக்கி கொண்டே இருக்கிறோம்.

இந்த நேரத்தில் நாம் இருக்கும் பூமியை விட்டு விட்டு , புதிய பூமிக்குள் அடியெடுத்து வைப்பதற்கான நேரம் தற்போது வந்து விட்டது.


நமது விஞ்ஞானிகள் புதிய பூமியை கண்டறிவதில் அதிக அளவு ஆர்வம் செலுத்தியதன் விளைவாக super-Earth GJ 667Cc

என்ற புதிய பூமியை ஜெர்மனியை சேர்ந்த கில்லன் ஆங்கிலாடா-எஸ்கூட் என்ற விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.

இந்த புதியபூமி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமையை விட பத்து மடங்கு பெரியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் 4.5 மடங்கு அதிகமாக நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.

இந்த புதிய பூமி ஒரு முறை தனைத்தானே சுற்றிவர 28 நாட்களை எடுத்துக் கொள்கிறது.

பூமியில் இருந்து 22 ஒளி ஆண்டுகள் அதாவது 209 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் super-Earth GJ 667Cc உள்ளது.


200 முதல் 400 மில்லியன் விண்மீன் கூட்டங்கள் இந்த பேரண்டத்திலே உள்ளன.

அதிலே, இந்த புதிய பூமியானது மூன்று விண்மீன் கூட்டம் இணைந்தாற் போன்று காட்சி அளிக்கிறது.

எனவே இதனை M-CLASS குறுவிண்மீன் வகுப்பில் சேர்த்துள்ளனர்.இந்த கிரகம் பார்ப்பதற்கு ஒரு நீல நிற புள்ளியாக காட்சி அளிக்கிறது.


வான சாஸ்திரிகளுக்கே வியப்பூட்டும் நிலையில் GJ667Cc புதிய பூமி அமைந்துள்ளது.

இதன் புறப்பரப்பு மிகுதியான தண்ணீரை கொண்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் புவியினைப் போன்றே அனைத்து மூலக்கூறுகளும் அமைந்துள்ளதாகவும் கெப்ளரின் விதிகளுக்கு உட்பட்டதாகவும் உள்ளது.

அப்படியே 90 சதவிகிதம் புவியினை ஒத்த வாயு மண்டலத்தைக் கொண்டுள்ளது.


இதில் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் அதிக அளவு அகச்சிவப்பு கதிர்களை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளது ,

அதோடு ஹைட்ரஜன், ஹீலியம், அயர்ன், கார்பன் மற்றும் சிலிக்கானும் போன்ற வேதி பொருட்களும் பூமியில் காணப்படுவது போலவே உள்ளது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த super-Earth GJ 667Cc மனித குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை என்றே சொல்லலாம்.








                                        






Tuesday, 14 February 2012

காதலின் இலக்கு எது?


ஒருவர், தனக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் இலக்காக இருக்கிறது. சிலரைத் தவிர, வாழ்க்கையில் காதலிக்காமல் யாருமே இருந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும்.

எப்படி வந்தது:காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். மத நம்பிக்கைக்காக உயிரை துறந்த துறவிகளின் நினைவை போற்ற வேலன்டைன் தினம் தோன்றியதாக கருதப்படுகிறது. எனினும் இந்த கதை 14ம் நூற்றாண்டில் மாறியது. ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்க் களத்திற்கு அழைத்தார். அழைப்பிற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசன், அவருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. பின் அவரது நினைவுநாளையே வேலன்டைன் தினமாக இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தான் வேலன்டைன் தினம் முழுவதுமாக காதலர் தினமாக மாறியது.

காதலருக்கு பிடித்த இடம் எது: காதலர்களுக்கு பிடித்த இடமாக இந்தியாவில் கோவாவும், உலகளவில் பாரீசும் உள்ளன. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "ஸ்கைஸ்கேனர்' என்ற டிராவல் அமைப்பு இந்தியாவில் உள்ள காதலர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 850 பேர் இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். உள்நாட்டில் காதலர்கள் செல்ல விரும்பும் இடமாக கோவாவுக்கு 28 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அடுத்தபடியாக அந்தமான் தீவுகள் (14 சதவீதம்), ஆக்ரா (9 சதவீதம்), கேரளா (8 சதவீதம்) , சிம்லா (8 சதவீதம்), மணாலி, டார்ஜிலிங், ஊட்டி, குல்மார்க், கூர்க் ஆகியவை உள்ளன. இந்திய காதலர்கள், வெளிநாடுகளில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் (24 சதவீதம்) செல்வதையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்த இடங்களில் வெனிஸ் (இத்தாலி), லாஸ் வேகாஸ் (அமெரிக்கா), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), ரோம் (இத்தாலி), ஹவாய் (அமெரிக்கா), நியூயார்க் (அமெரிக்கா), மாலே (மாலத்தீவு), புகாட் (தாய்லாந்து), பாலி (இந்தோனேஷியா) ஆகிய நகரங்கள் உள்ளன.


எதிர்ப்பை மீறி:காதலர் தினம் என்பது மேற்கத்திய பண்பாடு , வியாபார நோக்கங்களுக்காக வர்த்தக நிறுவனங்கள், இத்தகைய கலாசாரத்தை இந்தியாவிலும் பரப்புகின்றனர், எனவே அதை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மைசூரு உள்ளிட்ட சில இடங்களில் காதலர்கள் மீது தாக்குதல்கள் சம்பவங்களும் நடந்தன. இருந்தாலும் காதல் என்றாலே எதிர்ப்பு தான். அது போல, காதலர் தினமும் பல எதிர்ப்புகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது.

Saturday, 11 February 2012

இதற்கு பெயர் தான் தேசப்பற்றா?


தமிழன் தேசப் பற்று ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!
பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
... ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!
எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...!
மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன் எல்லைதாண்டி போகிறான் என்றான்...!
முல்லை பெரியாறு பிரச்சனை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர் வருவதில்லை என்றான்...!
இதோ இன்று...!
சபரி மலையில் ...தமிழர்கள் தாக்கப்பட்டனர்..!அழைப்போம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரமாட்டான் ...!
ஏன் என்று கேட்டால் ...யார் அவர்களை கேரள கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!
ஆனால்.......!
இந்திய -மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் ..
எவனும் அழைக்க வில்லை...!
வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..!
ஏன் என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...!
அடேய் ..!
தமிழா வாழ்க உனது தேசப் பற்று..!

தேவாலயம், கோவிலாக மாற்றப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் தான் இந்துக்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாகவும் , முஸ்லீம்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாபர் மசூதி பிரச்சனைக்கு இன்னும் சரியான தீர்ப்பு கூட வழங்க முடியாமல் உள்ளது , மதங்களை மாறுவதிலும், மதப் பிரச்னையை உருவாக்கும் பதப்பிசாசுகலாய் நாம் ஏன் மாற வேண்டும். நம் நாட்டில் தான் இப்படி இருக்கே தவிர வேறு எங்குமே இப்படி இல்லை அதற்கு முன் உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் யாரேனும் இதை ஆதரித்து இருப்போமா? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .....       நமக்குள்ளே நாம் மதமெனும் கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நமை நாமே சிறையில் அடித்துக் கொள்கிறோம்.

இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது. இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் இந்த கோயில் பணிகள் குறித்து கூறுகையில், இப்படி ஒரு கோயில் உருவாவது இந்து மதத்திற்கு இதுஒரு சிறந்த மைல்கல் ஆகும். ஆன்மிகம் பரப்புவதில் சிறந்த பங்காற்றும். இந்த பகுதியில் உள்ள திரை நட்சத்திரங்கள், பாடகர்கள், பேசன் டிசைனர் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து முன்னேறி இருக்கிறது என்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை மட்டுமல்லவா பார்க்கிறார்கள்,
ஆனால் நமக்கு தேவை "மனித உரிமைகள் இல்லையே, மதங்கள் தானே" இப்படி இருக்கையில் எப்படி நாம் முன்னுக்கு வருவது?

Friday, 10 February 2012

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


அரசாங்க வேலை பார்த்துக் கொண்டும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டும் இலவசத்திலே இலாக்காக்களை வாங்கி போடுபவர்களுக்கு நமது அரசு தற்போது தான் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளது.

அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்காக இலவசமாக தரப்பட்ட வீடுகளையும்  வைத்துக் கொண்டு அவர்கள் வசதிக் கேற்ப வீடுகளை வாங்கி கொண்டு உள்ள பலபேர்கள் இன்று தஊண்டில் மீனாய் பிடிபட்டனர்.   கோவையில் மட்டும்  1642 பேர் இந்த மோசடி வழக்கில் மாட்டி உள்ளனர். கோவியில் மட்டுமே இப்படி என்றால் மொத்த தமிழகத்திலும் கணக்குப் போட்டு பார்த்தால் .... எத்தனை இலட்சங்களைத் தாண்டுமோ தெரியவில்லை?

சிலர் ஒன்றுக்கு நான்கு வீடு வைத்துக் கொண்டு இருக்க இன்னும் சிலர் குடிசைக்கே வழியில்லாமல் தெருவூரங்களில் வாழ்வாதா? என்ன ஏற்றத்தாழ்வு இந்த சமூகத்தில் ?

இவர்களை எத்தனை "அண்ணா ஹசாரே" வந்தாலும் திருத்த முடியாது போல?  "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தானே? "

அரசாங்க சொத்தை அழித்து இவர்களெல்லாம் நமது நாட்டை மேலும் ஏழை நாடாகவே மாற்றுகின்றனர்.

வொய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறி டி

தீவிரவாதம் பெருகிக் கொண்டிருக்கிறது தான், ஆனால் பிஞ்சிலேயே தீவிரவாதத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் நெஞ்சை உருக்குலைய வைக்கிறது. 

      கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.

பள்ளியில் மாணவர்களை அடிப்பதே தவறு என்கிற சட்டம் வகுக்கப்பட்டு விட்டது, இந்த நிலையில் அவர்களின் குறைகளை திருத்திக் கொள்ள கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் வேணும். அதைதான் இந்த ஆசிரியையும் செய்துள்ளார்.   சாதாரண விசயத்தையே தாங்கிக் கொள்ளமுடியாத மாணவர்கள் இருக்கும் வரையில் இந்த சமுதாயம் எப்படி முன்னுக்கு வரப் போகிறது என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது?

பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி  . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும்

Tuesday, 31 January 2012

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்


உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?


1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.

2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்

5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.



என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

1.மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

2.மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

3.இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.

4.இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.

5.நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.


" எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"


Friday, 27 January 2012

மறவாத மம்தா பானர்ஜி

இப்படியும் ஒரு முதல்வரா?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,"மறக்க முடியாத நினைவுகள்'என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தன் குழந்தை பருவம் குறித்து அவர் எழுதியுள்ளதாவது: பள்ளியில் படிக்கும்போது, எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, எனக்கு துரோகம் செய்தாள். கணித தேர்வின்போது, தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், நான் எழுதி முடித்து விட்டேன். அருகில் அமர்ந்திருந்த தோழிக்கு உதவுவதற்காக, அவளுடைய விடைத் தாளை நானும், என்னுடைய விடைத்தாளை அவளும் மாற்றிக் கொண்டோம். மீதமிருந்த நேரத்தில் என் தோழிக்காக சில கணக்குகளை பூர்த்தி செய்தேன். மணி அடித்தபோது, என்னுடைய விடைத்தாள், தோழியிடம் தான் இருந்தது. தேர்வு கண்காணிப்பாளரிடம், என்னுடைய விடைத் தாளை, என் தோழியே கொடுத்து விட்டாள்.

தேர்வு முடிவுகள் வெளியான போது, எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கணிதத்தை தவிர, மற்ற அனைத்து தேர்வுகளிலும் நல்ல மார்க் எடுத்து, தேர்ச்சி அடைந்திருந்தேன். கணித தேர்வில் தவறியதை என்னால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து, உரிய முறையில் விண்ணப்பித்து, விடைத்தாளை மறு ஆய்வு செய்யும்படி கோரினேன். அப்போது என்னுடைய விடைத்தாளில், என் தோழி, குறுக்கே கோடிட்டு அடித்திருந்தது தெரியவந்தது. மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, என் முதுகில் குத்திய சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அதோடு மட்டுமா என்ன?

தற்போது அனைவரும் "பாய் பிரண்ட்' பற்றி பேசி வருகின்றனர். ஆனால், என்னுடைய பள்ளி பருவத்தில், இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. பெற்றோர் என்னை கண்டிப்புடன் வளர்த்தனர். பள்ளி, வீடு, இதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. இவ்வாறு அந்த புத்தகத்தில் மம்தா எழுதியிருந்தார்.

ஒரு மாநிலத்தையே தற்போது ஆட்சி செய்து கொண்டு இருக்கும் திறமை உடையவருக்கு , இளம் வயதில் சமூகத்தின் மீதான தாக்கம் இல்லை என்பது வியப்பிற்கு உறிய விசயமாக இருப்பதோடு அப்படிப்பட்டவர் எப்படி  முன்னாள் மத்திய இரயில்வே துறை நிர்வாகியாகவும் தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் விளங்க முடிகிறது.....? 


Wednesday, 25 January 2012

மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியா பின்னடைவு

            கடந்தாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாதது குறித்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கடந்தாண்டில், 90 நாடுகளில் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று "உலக அறிக்கை 2012' என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவைக் குறித்து அந்த அமைப்புக் கூறியிருப்பதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விஷயத்தில் கடந்தாண்டு ஏமாற்றமே அளிக்கிறது. விசாரணைக் காவல் சாவுகள், போலீஸ் அத்துமீறல்கள், விளிம்பு நிலை மக்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவதில் தோல்விகள் என, கடந்தாண்டு அவநம்பிக்கையையே அளிக்கிறது. ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என, அரசியல் தலைவர்களும், ஆலோசகர்களும் கூறிய போதும் அவற்றைப் புறக்கணித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், காஷ்மீரில் கடந்தாண்டு வன்முறைகள் குறைந்துள்ளன. குற்றம் செய்த வீரர்களை விசாரிப்பது, போலீஸ் துறையில் சீர்திருத்தம், சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது போன்றவற்றில் இந்தியா போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றிருந்தும், தனது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய வாய்ப்புகளைத் தவற விட்டது. வெளிநாடுகளில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கும் தலைமை வகிப்பதற்கு, இந்த இரு அமைப்புகளில் உள்ள தனது உறுப்பினர் அந்தஸ்தை சரியான முறையில் பயன்படுத்த இந்தியா தவறி விட்டது. அதேநேரம், சிரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த கொடூரங்கள் விஷயத்தில் இந்தியா மவுனமாகவே இருந்துவிட்டது.

Saturday, 21 January 2012

ஒரு ரூபாய் அரிசிக்கு 400 ரூபாய் எரிவாயுவா?


விறகடுப்பை பயன்படுத்திய முந்தைய சமூகத்தை நோக்கியே மீண்டும் நாம் படையெடுக்க ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. இந்த நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்குவதற்குத் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தது நமது அரசு? நல்ல மாற்றங்கள் என்று நம்மை ஆதரவு அளிக்க வைத்து நியாயவிலைக்கடைகளின் நியாயமாக கோரிக்கைகள் என அவர்களை நியாயப்படுத்திக் காட்டிக் கொண்டனர்.

ஆரம்பம் முதலே மாதவருமானத்தின் அடிப்படையில் மனிதர்களை தரம் பிரிக்க ஆரம்பித்தர், மாதவருமானம் 5000-க்கு அதிகாமானோருக்கு ஒரு அட்டை எனவும் 5000-க்கு குறைவானவர்களுக்கு ஒரு அட்டை எனவும் தரம் பிரித்தனர். பின்னர் அந்த அட்டையின் அடிப்படையில் மேல்தட்ட மக்களான 5000 வருமானம் வாங்குபவர்களுக்கு பாதி சலுகைகளை கொடுக்க மறுத்தனர். காரணம் கேட்டால் கீழ்தட்டு மக்களுக்கு அதிகமாக வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் என்றார்கள்.

அதோடு மட்டுமா? அதிக அளவு சீனி வாங்கினால் அவர்களுக்கு அரிசி கிடையாது இது என்ன புதிய சட்டமோ? அடுக்கடுக்கான அவலங்களின் பாதையில் தொடர்ந்து..., வாயு சிலிண்டர்கள் வைத்து இருந்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு மண்ணெண்ணெய் என்று புதிய சட்டம் பிறப்பிக்க ஆரம்பித்தனர் மீண்டும் விடாத கருப்பாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது இந்த ஊழல்.

சென்ற ஆட்சியிலாவது வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எரிவாயுவான மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. வருடத்திற்கு 52கோடி லிட்டர் கண்டிப்பாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினாலும் 400 ரூபாய்க்கு எரிவாயுவின் விலையை கூட்டியதோடு நிறுத்திக் கொண்டது. ஆனால் இந்த ஆட்சியில் வாயு சிலிண்டர்களின் விலை முந்தைய ஆட்சியைவிட கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மண்ணென்ணெய்யையும் வருடத்திற்கு 48 கோடி லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகின்றனர்.

மீதமுள்ள 4 கோடி லிட்டர் மண்ணெண்ணெய்யை எங்கே கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லை? இப்படியே போனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து விடும் தருணம் மிக தொலைவில் இல்லை.



Friday, 20 January 2012

பணமா? பதவியா?


எத்தனையோ தாலுகாக்களில் இன்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் தான் இருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்திவிட்டால் மட்டும் போதுமா? லட்சங்களை வாங்கிக் கொண்டும், ஆட்சிக் கோட்டாவிலும் பலரை கிராம நிர்வாகத் துரை அதிகாரியாக அமைத்து விட்டு உண்மைக்கும், கடின உழைப்பிற்கும் முன்னுரிமை அளிக்கமாலே சென்று கொண்டிருக்கிறது நமது சமுதாயம் ............

இதனால் பதவிக் காலம் முடிவடைந்து பணி ஓய்வு பெற்ற பல கிராம நிர்வாக அதிகாரியின் இடம் காலியாகவே உள்ளது. எத்தனை இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற்றும் பணம் என்ற ஒரே காரணத்தினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு உதாரணமாக ஒரு சான்றை உங்கள் முன் வைக்கிறேன்.

        பதவி ஓய்வு பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரங்கோட்டை பகுதியில் இன்னும் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப் படவில்லை. எவருமே லஞ்சம் கொடுக்க முன்வராத சூரங்கோட்டை பகுதியில் இன்னும் அந்த பணியிடம் காலியாகவே உள்ளது. ஆகவே மாற்று ஏற்பாடாக தற்போது சூரங்கோட்டை பகுதியில் உள்ள காலியிடத்தையும் சேர்த்து பக்கத்து பகுதியான கேணிக்கரையில் தற்போது பணியாற்றி வரும் கிராம பஞ்சாயத்து அலுவலரை நியமித்துள்ளனர்.

இவர் காலையில் கேணிக்கரை பகுதியிலும் மதிய வேளையில் சூரங்கோட்டை பகுதியிலும் பணியாற்றி வருகிறார். அப்படியென்றால் இவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல இரண்டு சம்பளமா என்றால் அதுவும் கிடையாது.

நம் தமிழகத்தில் என்ன மக்கள் தொகைக்கா பஞ்சம்இல்லை!

வேலையில்லா பட்டதாரிகளுக்குத் தான் பஞ்சமா?

அப்படி இருக்கையில் லஞ்சம் கொடுக்க முன் வராத காரணத்தினால் ஒருத்தர் இரண்டு கிராம நிர்வாகத்தை ஆண்டு கொண்டிருப்பது இந்த தமிழகத்திற்கே சாத்தியமா?????????????




Wednesday, 4 January 2012

எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு


முன்பெல்லாம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கடிதங்களைப் பரிமாறி வந்தோம். கடிதங்களின் வாயிலாக கிடைக்கப் பெறும் நலம் நலமறிய ஆவலுக்கு இணை வேறு எதுவுமே இல்லை. தபால் காரர் வந்து ஐய்யா போஸ்ட் என்று ஒரு சத்தம் கொடுத்தால் போதும் அனைவரும் பறந்து வந்து தபாலை வாங்குவர். அதோடு பண்டிகை காலங்களில் வாழ்த்து மடல்களின் வரவேற்பு அனைவரது இல்லத்தையும் ஆனந்தமாய் அலங்கரிக்கும். ஆனால் தற்போதைய நிலை தலை கீழாக மாறியுள்ளது. என்றைக்கு தொலைபேசிகள்   மற்றும் கைபேசிகளின் வரவேற்பு அதிகமானதோ அன்றே கடிதங்களுக்கும் வாழ்த்து மடல்களுக்கும் நாம் குட் பாய் சொல்லி விட்டோம்.  இந்த நிலையில் அறிவியலின் வளர்ச்சியை மேலும்  ஆக்கப் பூர்வமாக்கும் நோக்கத்தில்  கொரியர்களுக்கும் ஒரு ஆப்பு வைத்து வட ஏற்பாடு செய்து விட்டனர்.

அப்படி என்ன அந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்கிறீர்களா?  எலெக்ட்ரானிக் கிப்ட்  கார்டு முறை தான் இந்த புதிய உலகை ஆள தற்போது அடியெடுத்து வைத்துள்ளது. 

அதாவது நமக்கு மிக தொலைவில் இருப்பவர்களுக்கு நாம் நினைத்தவுடன் நம்மால் பரிசு பொருட்களைக் கொடுக்க முடியாது. ஆனால் இந்த எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு வசங்கும் சேவையின் மூலம் இணையத்தில் நமக்கு தேவையான பொருட்களை டெபிட் கார்டு மூலம்  வாங்கி அந்த பொருளுக்கான  ரசீதை நேரடியாக எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு முறையில் பெறுபவரின் பெயர் மற்றும் முகவரியுடன் மின்னஞ்சலையும் இணைத்து கொடுக்கவும் அதை  சில நிமிடங்களில் சலானாக கிடைக்கப்பெறுகிறார் பெறுனர். அந்த சலானை அவர் உடனடியாக மாற்றி பொருளை பெற்று கொள்ளலாம்.  அதில் அவருக்கு ஒரு சந்தோசம் கிடைக்கப் பெறுகிறார். அனுப்புனருக்கும், பெறுனரிடம்  பொருள் கிடைத்தவுடன்  தகவல் அனுப்பப் படுகிறது.

இப்படி அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும் காத்திருந்து பரிசுகளை தபால் மூலமோ அல்லது கொரியர் மூலமோ கிடைக்கப் பெறும் சுகமே தனி தான் .



Tuesday, 3 January 2012

அழியாச் செல்வங்கள் கனிமவளங்கள்



இன்னும் 20 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி கிடைக்காது என கட்டுக்கட்டாக பீதிகளை கிளப்பி வருகின்றனர். நம் நாட்டில் கடலோரப்பகுதியில் எப்படி தோண்ட தோண்ட தண்ணீர் வருகிறதோ அதைப் போன்று சவுதி அரேபியாவில் தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கிறது. இன்னும் தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் பல பெட்ரோலியப் பேரல்கள் உள்ளன. இவைகளைக் கொண்டு இன்னும் 70 ஆண்டுகள் இந்த உலகமே பற்றாக்குறை இல்லாமல் எண்ணெய் வளங்களை பயன்படுத்தலாம்.


அதோடு பிரேசிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி லிட்டர் அளவிலான பெட்ரோலிய பேரல்களின் மூலம் இந்த உலகமே இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் எண்ணைய் வளங்கள் இல்லாமல் செழிப்புடன் வாழலாம் என சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பிரேசிலும் பெட்ரோலிய உற்பத்தியில் கொடிகட்டி பறக்கப் போகிறது.


அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இன்னும் பயன்படுத்தப்படாமல் இயற்கையின் பாதுகாப்புக்காக தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் நிலக்கரிகள் ஏராளம். ஆகவே இன்னும் 200 ஆண்டுகளுக்கு நமக்கு எண்ணெய் வளங்களைப் பற்றிய பயம் தேவையில்லை. இவ்வளவு பெட்ரோல் வளம் இருந்தும் நமது அரசு ஏன் இன்னும் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது ??


தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைப்பதற்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு 53 ஆக உயர்ந்து விட்டதாலும் பெட்ரோலிய எண்ணெய் பொருட்களின் விலையை 2.10 பைசா அதிகரித்துள்ளனர். பெட்ரோல் விலை கூடினால் ஒட்டு மொத்தமாக அன்றாட தேவை பொருட்களின் விலையும் தானாக கூடி விடுகிறது அல்லவா?

இதைத் தான் தலையில் அடித்தால் பாதம் வரை அதன் வீரியம் பரவும் என்பார்கள். இதனால் அடித்தட்டு மக்களின் நிலை இன்னும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரசின் கடன் சுமையை குறைப்பதற்காக மக்கள் அனைவரையும் கடன் காரர்கள் ஆக்கும் சமுதாயமாகவே இன்றைய சமுதாயம் உள்ளது.


உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு


மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது .பி.எம் நிறுவனம்.

இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது.

ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். வரலாறு,புவியியல், பொழுதுபோக்கு,இலக்கியம்.அரசியல்,சமூகம்,கணிதம்,அறிவியல் என எந்த துறையிலிருந்தும் கேள்விகள் வரலாம். கேள்விகள் நேரடியாகவோ அல்லது துப்புகள் மூலமாகவோ அல்லது அனுமானமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்கப்பட்ட கேள்விகளை, அதனுடைய சூழல் புரிந்து சரியான பதிலை விரைவாக சொல்ல வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனிதர்களின் பேச்சு மொழி வழக்கிலேயே கேள்விகள் கேட்கப்படும். இந்த போட்டியில் வெல்வது குதிரைக் கொம்பு தான்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் முதன் முறையாக ஒரு கம்ப்யூட்டர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. மனிதனுக்கும் ,ஒரு இயந்திரத்திற்கும் நடக்கும் போட்டியாகவே கருதப்பட்ட இந்நிகழ்ச்சி பலரையும் ஆச்ச்சரியத்தில் வாய் பிளக்க வைத்தது உண்மை தான். ஒவ்வொரு பதிலும் துல்லியமானதாகவும், வேகமானதாகவும், நம்பிக்கையுடனும் தெரிவிக்க வேண்டும். மனிதர்களை போல சிந்திக்கும் திறனும், தகவல் திரட்டுகளை சரியாகப் பயன்படுத்தும் திறனும், கேள்வியின் நோக்கையும், சூழலையும் புரிந்து கொள்ளும் திறமையும் கொண்டதாக வாட்சன் படைக்கப்பட்டது. இது ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் துறையில் முற்றிலும் ஒரு புதிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வாட்சன் கணினி, மொத்தம் 90 .பி.எம் பவர் 750 சர்வர்களின் குழுமத்தினையும், 16 டெராபைட் ரோம் திறனையும், மொத்தம் 2880 பவர், 7 பிராசசர் சக்தியும் கொண்ட ஒரு பிரமாண்ட படைப்பாகும். ஒவ்வொரு பவர் 750 சர்வரும், 3.5 ஜிகா ஹெட்ஸ் பவர் 7 கொண்ட 8 கோர் ப்ராசசரை கோரும் நான்கு த்ரெட்களை உபயோகப்படுத்துகின்றது.

வாட்சன் கணினி, 500 ஜிகாபைட்ஸ் தகவல்களை செயல் கட்டுப்பாடு செய்யும் திறமை கொண்டது. அதாவது, ஒரு நொடியில் பத்து லட்சம் புத்தகத்தை வாசிக்கும் திறனைக் கொண்டது. இதனை வடிவமைப்பதற்கு மட்டும் 3 மில்லியன் டாலர் செலவானது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்சனின் தகவல்

திரட்டிற்காக, வெவ்வேறு வகையான மூலாதாரங்கள் பயன்படுத்தப்பட்டன. வெவ்வேறு என்சைக்ளோபீடியா, டிக்சனரி , தெசாரஸ் , டேட்டாபேஸ்கள் , டாக்ஸானமி, ஆன்டாலாஜி போன்றவற்றால் அறிவூட்டப்பட்டது. பின்ன என்னங்க, நொடிப்பொழுதில் பதில் சொல்ல வேண்டும் என்றால் சும்மாவா.

இப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணம் , மனிதர்களின் மிக முக்கிய காரணம், மனிதர்களின் மூளையை அப்படியே வடிவமைக்க வேண்டுமென்பதல்ல. மாறாக, மனிதர்களின் நடைமுறை மொழியை அதன் இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும்

ஆற்றலுடன் ஒரு இயந்திரத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை இலக்காகும். ஏனென்றால், மனிதர்களுக்காக மனிதர்களே படைப்பது தானெ ஒரு இயந்திரம்..... அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் .... இப்படியே போனால் வருங்காலத்தில் மனிதனே தேவையில்லை இயந்திரங்களே போதும் என்ற நிலைக்கு இந்த உலகமாகவே மாறிவிடப்போகிறது!!!!!!!!!!.




Thursday, 29 December 2011

கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஓர் விழிப்புணர்வு

உலக வரலாற்றின் பக்கங்களில் ரசாயன நெடி பூசிய செர்னோபில் கொடூரம் அரங்கேறி, 25 வருடங்கள் ஆகிவிட்டன. ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து நடந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் அந்த இடத்தில் கதிர் வீச்சின் வீரியம் குறையவில்லை. ஆனால், அந்தக் கொடூர அனுபவத்தில் இருந்து இந்த உலகம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை... அல்லது கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது இன்னும் உறையச் செய்யும் அதிர்ச்சி!


அதிலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள்... அவற்றில் கூடுதலாக இன்னும் சில அணு உலைகள் என விபரீதங்களுக்கு வரிசையாகக் கால்கோள் விழா எழுப்பிக்கொண்டு இருக்கிறோம்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் தமிழகத்துக்கு விளைந்த நன்மை, தீமைகள் என்னென்ன

புவனேஸ்வரி. துறுதுறுவென விளையாடித் திரிய வேண்டிய நான்கு வயதுச் சிறுமி. குடிசையின் ஒரு மூலையில் சுருண்டுகிடந்தாள். ஒரு கையும் காலும் இல்லை. முகத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள். குடிசையை விட்டு வெளிச்சத்துக்கு அவளைத் தூக்கி வந்தாலே... அழுகிறாள்.

தொடக்கப் பள்ளியில் நான்காவது படிக்கிறாள் பவித்ரா. படிப்பில் படு சுட்டி. டாக்டர் கனவு காண்கிற பவித்ராவுக்கு, கால்களில் வலு இல்லை. சுயமாக நடக்க முடியாது. நடக்கிற போது கால்கள் இரண்டும் பின்னிக்கொள்கின்றன. தாய் மட்டுமே துணை. துணை இன்றி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது. ஓடும் கால்கள், நடக்கும் கால்கள், குதிக்கும் கால்கள் என விளையாடும் நண்பர்களின் கால்களை, மைதானத்துக்கு வெளியே இருந்து ஏக்கத்துடன் பார்க்கிறாள்.

விஜிக்கு 22 வயது. தன் வயதுப் பெண்கள் எல்லாம் குழந்தை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்க, இவருக்கோ மூன்று முறை கரு கலைந்து போனது. 6 மாதங்கள் வரை வயிற்றில் கரு தங்கி, கலைந்துபோனது மூன்று முறையும். மருத்துவர் களால் என்ன காரணம் எனக் கண்டறியப்பட வில்லை.

இப்படி அந்தக் கிராமங்களில் பத்து வீடுகளுக்கு நான்கு வீடுகளில் ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தை இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்னைகள்பற்றி ஆய்வு செய்திருக்கிற அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி சில முக்கியத் தகவல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.ல் நான் ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, அதில் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பங்களில் உள்ளவர்கள் Multiple Myeloma எனும் எலும்பு மஜ்ஜைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது, மூன்று பேர் 21 நாள் இடைவெளியில் இந்தப் புற்றுநோயால் அடுத்தடுத்து இறந்துபோனார்கள். எனவே, புள்ளியியல் அடிப்படையில் மிக முக்கியத்துவம் (Statistically Highly Significant) வாய்ந்தது என்று அந்த மரணங்களைப் பதிவு செய்தேன்.

அதை எதிர்த்து, 'அப்படி எல்லாம் ஒன்றும் பாதிப்பு இல்லை' என்று அணு மின் நிலையத்தார் அப்போது ஓர் ஆய்வை மேற்கொண்டதாகச் சொன்னார்கள். அந்த ஆய்வு அறிக்கை நகல் ஒன்றைத் தாருங்கள் எனப் பல ஆண்டுகளாகக் கேட்டும், அவர்கள் தரவில்லை. கதிர் வீச்சின் பாதுகாப்பான அளவு (Safe Dose) குறித்து நான் அந்தப் பகுதி முழுக்க ஆய்வு மேற்கொள்ள முற்பட்டேன். அதற்காக, எங்களுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்த சில தொண்டு நிறுவனங்கள், என்ன காரணத்தினாலோ கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டன. மிரட்டல் காரணமாக இருக்கலாம். அணு மின் பணியாளர்கள் உள்வாங்கும் External & Internal Dose பற்றி நான் ஆய்வு நடத்தவும் அவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை.

2010-
ம் ஆண்டில் டிராஃபிக் ராமசாமி என் ஆய்வுகளை அடிப்படையாகவைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை புற்று நோயால் இறந்தவர்களின் பட்டியலைக் கேட்டு இருந்தார். அணு மின் நிலையத்தார், 10 வருடக் காலகட்டத்தில் இதுவரை 244 பேர் புற்று நோயால் இறந்திருக்கிறார்கள் என்றுதெரிவித்தார்கள். அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஓம் பால் சிங்கின் மகன் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவர் Ewig Sacome எனும் எலும்பு மஜ்ஜை நோயால் தாக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி, அவர் இறந்துவிட்டார். அணு சக்தித் துறையில் மிக முக்கியமானவராக இருக்கும் ஒருவரின் மகன் இறந்ததைக்கூட, அவர்கள் தந்த புள்ளிவிவரத்தில் பதிவு செய்யவில்லை. 244 கேஸ்களில் இந்த இறப்புபற்றி ஒரு செய்தியும் இல்லை.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நியூஸிலாந்து நாட்டில் கிறிஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 65 பேர் உயிரிழந்தனர். நில நடுக்கப் பதிவேடுகளில், அந்த இடத்தில் நில நடுக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனப் பதிவு செய்யப்பட்டு இருந்தபோதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை Blind Fault என்று அழைப்பர். கல்பாக்கம் பகுதியிலும் Blind Fault ஏற்பட வாய்ப்பு இல்லையா? முன்பு சென்னை நில நடுக்க அளவு 1-ல் இருந்தது. அதனால், நில நடுக்க அளவு 2-க்கு ஏற்றாற்போல, அணு உலையைக் கட்டி இருப்பார்கள். இன்று சென்னையின் நில நடுக்க அளவு 3-க்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு ஏற்றபடி அணு உலையில் என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்? 'நிச்சயமாக நாங்கள் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வோம்' என்கிறார்கள் அணு நிலையத்தார். ஆனால், அந்த ஆய்வு யாரால் நிகழ்த்தப்படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்கிறார் புகழேந்தி.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அணு மின் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தியும், 'கிரீன் பீஸ்' அமைப்பின் அணு சக்திக்கு எதிரான செயல்பாட்டாளர் கருணா ரெய்னாவும், 'அணு மின் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு' பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள். கருணா முன்வைத்த எந்த ஒரு கருத்தையும் ராமமூர்த்தி மறுக்கவில்லை. அவர் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் தெரிவிக்கவில்லை.நிகழ்ச்சியில், ''பாதுகாப்பான அளவு கதிர் வீச்சு பற்றிப் பேசுகிறீர்களே... உங்கள் பணியாட்கள் உள் வாங்கும் கதிர் வீச்சின் அளவு என்ன?'' என்று நான் கேட்டதற்கு, ''அதுபற்றி எனக்குத் தெரியாது. அது தொடர்பான நிபுணர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்!'' என்றார். அணு மின் நிலையத்தின் இயக்குநராக இருப்பவருக்கு, இந்த சாதாரணத் தகவல்கூடத் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு நடை முறைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே, உதறலாக இருக்கிறது!

மேலும் தன் உரையில் அவர், ''ஒருவேளை விபத்து ஏற்பட்டால், நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ. வரை என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்கேற்றபடி நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பிட்ட கி.மீ-க்கு மேல் சென்றால், அது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும். விபத்து ஏற்பட்டவுடன் நான் அவருக்குத் தகவல் தெரிவிப்பேன். அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார் 'பொறுப்பாக'!

ஒருவேளை அப்படி விபத்து ஏற்பட்டால், மக்களை வெளியேற்ற என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ''நிலைய அலுவலர்களுக்கு, பணியாளர்களுக்கு எனத் தனித்தனியாக வாகனங்கள் வைத்திருக்கிறோம். அதில் அவர்களை ஏற்றி பத்திரமான இடங்களுக்குக் கொண்டுசெல்வோம்!''

''
எத்தனை வாகனங்களை வைத்திருக்கிறீர்கள்?''

''
ஏறக்குறைய 54 பேருந்துகள்!'' பேருந்துக்கு சுமார் 100 பேரை அமுக்கித் திணித்தாலும் அதிகபட்சம் 5,400 பேரை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியும். ஆனால், அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 10,000-க் கும் மேல்!

''
உங்கள் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீங்கள் 'ரிஸ்க் அலவன்ஸ்' தருவது இல்லையாமே?'' என்ற கேள்விக்கு, ''ஆம், தருவது இல்லை. காரணம், நாங்கள் அவர்களுக்கு எந்த ரிஸ்க்கும் தருவது இல்லை!'' என்றார் ஜோக் அடித்த தொனியில்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்காக, நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் நகரியம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். 5 கி.மீ. தூரத்துக்குள் உள்ள ஐந்து கிராமங்களில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

1986,
மார்ச் மாதம் இந்த நிலையத்தில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்துபோனது. ஜூன் மாதத்தில் 15 டன் கன நீர் கசிந்து வழிந்தது. 1999, மார்ச் 26 அன்று, அணு மின் நிலையம் 2-ல் ஏற்பட்ட கன நீர் கசிவு காரணமாக, ஏழு பேர் அதிகபட்சக் கதிர் வீச்சுப் பாதிப்புக்கு ஆளானார்கள். 2011, மார்ச் 19 அன்று அணு உலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார்த்திக் என்ற பணியாளர் இறந்துபோனார்.

கடந்த ஏப்ரல் மாதம் இரவு தோன்றிய மின்னல் காரணமாக, கல்பாக்கம் முதல் அணு உலை மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப் பல விபத்துகள் நடந்து இருக்கின்றன.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் எப்போதும் ரசாயன நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு கையும், காலும் இல்லாத குழந்தையின் அம்மாவிடம் கேட்டேன், ''ஏம்மா... ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனீங்களா? டாக்டர் என்ன சொன்னார்?''

''
எதனால இப்படி ஆச்சுன்னு எங்களையே கேட்கிறாங்க. என்ன பிரச்னை இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. என் குழந்தைக்கு விடிவுக் காலமே பொறக்காதா?''

மின்சாரம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வல்லரசு என்று கதைப்பவர்கள்... இந்தக் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். மக்களை ஊனமாக்கிவிட்டு, தன்னிறைவு பெற்று என்ன செய்யப்போகிறீர்கள் விஞ்ஞானிகளே?

உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!


அணு மின் நிலையத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்!

அமெரிக்காவில் கதிர்வீச்சால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு Energy Employees Occupational Illness Compensation Program Act இருப்பதுபோல இங்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.

நில நடுக்க அளவு 3-க்கு ஏற்றாற்போல அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த வேண்டும்!

''மாற்றி யோசிக்கலாமே!''


அணு மின்சாரத்துக்கு மாற்றாகச் சில யோசனைகளை முன்வைக்கிறார் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன்.


''
இந்தியாவிலேயே இரண்டு அணு உலைகள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டும்தான். மின்சாரத்துக்காக அணு உலை என்று சொல்வது, பீரங்கியைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிப்பது போன்றது! இந்தியாவின் மின்சாரத் தேவை தற்சமயத்தில் 1,70,000 மெகாவாட். ஆனால், நாடு முழுக்க இருக்கும் 20 உலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ வெறும் 4,780 மெகாவாட் மட்டும்தான்!

தமிழகத்தில் மட்டுமே குண்டு பல்புகளை நீக்கி விட்டு சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்தினால், சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தினால், பெருமளவு மின்சாரம் மிச்சமாகும்! 2030-ல் நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நம் மின்சாரத் தேவை 6 முதல் 8 லட்சம் மெகாவாட் ஆக இருக்கும். அணுவைப் பயன்படுத்தி அதில், 6 முதல் 12 சதவிகித மின்சாரத் தேவையைத்தான் பூர்த்திசெய்ய முடியும் என்று அணு சக்தி ஆணையமே தெரிவித்து இருக்கிறது.

மின்சாரத்தை உற்பத்தி செய்து அதைப் பகிர்ந்து அளிக் கும்போது, குறிப்பிட்ட சதவிகிதம் இழக்கிறோம். அதாவது, Transmission & Distribution Loss. உதாரணமாக: 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரித்தால், இறுதிப் பயன்பாட்டுக்கு 8,000 மெகாவாட்தான் நம்மிடம் இருக்கும். 2,000 மெகாவாட் பகிர்ந்தளிக்கும்போது வீணாகிவிடும். 2008-ல் 'வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்' நடத்திய ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக மின்சார இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 27 சதவிகிதம் வீணாகிறது. இதைக் குறைப்பதில், கவனம் செலுத்தலாம்!

அணு மின் நிலையம் மூலமாக மின்சாரம் தயாரித்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்பது, அதை ஆதரிப்பவர்களின் முக்கிய வாதம். ஆனால், அது முற்றிலும் தவறு. இயற்கையாகவே யுரேனியம் 238 கிடைக்கிறது. இதைச் செறிவூட்டினால் யுரேனியம் 35 கிடைக்கும். இதைத் தயாரித்தால்தான், அணு உலையின் செயின் ரியாக்ஷன் நடக்கும். இந்த யுரேனியத்தை எடுக்கும்போது கரியமில வாயுக்கள் வெளியேறும். ஆகவே, அணு மின்சாரம் மூலமாகவும் சூழல் கெடத்தான் செய்யும்.

காற்றாலைத் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின்சாரம், பயோமாஸ் எனப்படும் உயிர்த்திரள், புவிவெப்பச் சக்தி என மரபு சாரா முறையில் மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஆபத்து அதிகமான அணு சக்தி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே உலகை நேசிக்கும் அனைவரின் கேள்வி!'' என்கிறார் சுந்தர்ராஜன்.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் குறைபாடுகளாக அந்தப் பகுதி மக்கள் முன் வைக்கும் பிரச்னைகள்!


அணு சக்திக் கழிவைக் கடலில் கலக்கிறார்கள். அதனால், கடல் நீர் உஷ்ணமாகி, மீன் வளம் குறைகிறது. நிலத்தடி நீர் வளமும் குறைந்துவிட்டது.

அணுக் கழிவுகள் கலப்பதால், கடலில் உள்ள பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. அதனால், கடல்சார் சுற்றுச்சூழல் கெடுகிறது.

தைராய்டு புற்று நோய், கரு கலைதல், மூளை வளர்ச்சி இன்றிப் பிறக்கும் குழந்தைகள், கை-கால் போன்ற உறுப்புகள் இன்றி குழந்தைகள் பிறத்தல் போன்றவை கதிர்வீச்சாலும் ஏற்பட்டு இருக்கலாம். மேலும், கதிர்வீச்சுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பணியாற்றுபவர்களுக்கு உயிரணுக்களும் குறைவாக இருக்கின்றன.

அணு மின் நிலையத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில், நிலையத்தில் பணியாற்றுபவர் களுக்கு மட்டுமே அனுமதி. அங்கு யாருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் கொடுப்பது இல்லை.

அந்த மருத்துவமனையில் அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி, கதிர்வீச்சு தொடர்பான விபத்துக்களைக் கையாள்வதற்கான சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை. உதாரணம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு நடவடிக்கை பயிற்சி நடத்த வேண்டும் என்பது சட்டம். ஒரு முறை அந்த நடைமுறையின்போது மக்களை அவசரமாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றும் வாகனம் பஞ்சராகி நின்றது. வாக்கி-டாக்கி வேலை செய்யவில்லை!

கதிர்வீச்சு மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சில தகவல்கள்...


கதிர்வீச்சைப் பொறுத்தவரை மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை!

2005-
ம் ஆண்டு ஜனவரியில் எக்ஸ் கதிர்கள், காமா கதிர் கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது!

அணுசக்தித் துறையில் மிகவும் முக்கியப் பிரச்னை, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் கடல்வாழ் தாவரங்களில் எந்த அளவு இருக்கிறது என்பதை கல்பாக்கம் அணு நிலையத்தார் அளப்பதே இல்லை!

கதிர்வீச்சினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாகக் கண்டறியவே முடியாது என்பதுதான் இன்று நிதர்சனம்! உதாரணமாக, உடலில் கதிர்வீச்சு நேரடியாக ஸ்பரிசிக்காத உறுப்புகளிலும் ஏற்படும் பாதிப்பை By Stander Effect என்பார்கள். கதிர்வீச்சுப் பாதையில் உள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும் பிரச்னை இது!

கூடங்குளம் நிலவரம் என்ன?


நாடெங்கும் அணு மின் நிலையங்கள் அமைப்பதுபற்றி விவாதங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், திருநெல்வேலி கூடங்குளத்தில் வருகின்ற ஜூன் மாதம் முதல் அணு மின் நிலையம் இயங்க இருப்பதாகச் செய்தி! அதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப. உதயகுமாரன்...


இந்த அணு மின் நிலையத்தை கடல் மணல் கலந்து கட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் நான் ஜெய்தாபூர் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, தாராபூரில் ஒரு ஒப்பந்தக் காரரைச் சந்தித்தேன். அவர் கூடங்குளத்தில் எட்டு ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்த்தவர். அங்கு நிறுவப்படும் பைப்கள் எல்லாம் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. எளிதில் உடைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவித்தார். கூடங்குள அணு மின் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.கே.அகர்வால், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்வதாக முன்பு ஒருமுறை தெரிவித்தார். இந்தத் திட்டம் ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிச் செயல்படுத்துகிற திட்டம். இதுவரை எத்தனை முறை கடன் வாங்கி இருக்கிறார்கள்? அத்தனை கோடி ரூபாய்களுக்கு என்னென்ன செலவுகள் செய்து இருக்கிறார்கள்? ஏற்கெனவே நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் கட்டு மானப் பணிகள் நடைபெறுகின்றனவா? இல்லை தாண்டி விட்டதா? எல்லாம் கேள்விகள்தான்!

ஒரு வருடத்துக்கு முன்பு எஸ்.கே.அகர்வால், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். அணு மின் நிலைய இயக்குநராக இருந்தவரை, பதவி உயர்வு கொடுத்து, அணு சக்தி தொடர்பான பல்வேறு திட்டங்களில் நல்ல பதவி கொடுத்து, அவரை மாற்றல் செய்தார்கள். அப்படிப்பட்டவர் இறந்துபோன தகவல் குறித்து இதுவரையில் தகவல் வெளிவரவில்லை!

சர்வதேச அணு சக்தி வல்லுநர்கள் குழு (World Association of Nuclear Operators - WANO) சில வருடங்களுக்கு முன்பு கூடங்குள அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் அந்த அணு மின் நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் கூட இருக்கவில்லை. அவர்கள் என்ன வகையான பரிசோதனைகளைச் செய்தார்கள், எதையேனும் ஆய்வு செய்து விளக்கம் அளித் தார்களா என்பதுபற்றி விவரங்கள் கேட்டு நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப் பித்து இருந்தேன். இதுவரைக்கும் பதில் இல்லை.

இப்போதைய அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி, ஜப்பானில் நடந்த அணு மின் நிலைய விபத்து பற்றி ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறார். சுனாமிக்குப் பிறகான கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் இந்த நிலையத்தைக் கட்டி இருக்கிறோம் என்கிறார். ஆனால், யார் அதை அளந்து பார்த்தது, அணு சக்தித் துறை நீங்கலாக, தன்னாட்சி அமைப்புகள் எதுவும் பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதைப்பற்றி எந்தக் கருத்தும் கூற மறுக்கிறார்!'' என்கிறார் உதயகுமாரன்!