Find us on Google+ அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 17 November 2011

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது


   இந்தியாவில்  பல மாநிலங்களில் இருந்து  வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் எல்லாம் தமிழகத்தில் படிக்க முடியாமல் வெளி நாடுகளில் போயி படிப்பதை பெருமையாக நினைத்துள்ளனர்.

    நாம் மூன்று வருட படிப்பை வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கப் பேனால் அவர்களது பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளவே 2 ஆண்டுகள் கடந்து விடும். மீதம் ஓர் ஆண்டில் நாம் படிக்க நினைத்ததை ஏதோ அறை குறையாக படித்து விட்டு திரும்புவது தான் மிச்சம்.

    ஒரு அந்தஸ்துக்காகவும் ஆங்கில மோகத்துக்காகவும் நாம் தேடிச் சென்ற வெளிநாட்டுப் படிப்புகளால் நம்மை நாமே கல்வியில் குறைத்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க கல்லூரிகளில் சேர ஏராளமான விண்ணப்பங்கள் மலை போல குவிந்துள்ளன.  

    அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கழைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர வெண்டுமானால் 'சாட்' என்ற தகுதித் தேர்விலும், 'டோபல்' என்று அழைக்கப்படும் ஆங்கில மொழித்திறன் தேர்விலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதே போல் பொறியியல் பாடப்பிடிவில் மேற்படிப்பு படிக்க ஜி.ஆர்.இ என்ற தகுதி தேர்விலும், நிர்வாகம் சம்பந்தப்பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு 'ஜிமேட்' தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

    அத்துடன் விசா கண்டிப்பாக இருக்க வேண்டும். இத்தனை தேர்வுகள் எழுதி வங்கியில் கடன் வாங்கி நாம் அமெரிக்கா சென்று படிக்க வேண்டுமா?

நம் நாட்டை நோக்கி அன்னியர்கள் படையெடுத்த காலம் மாறி இன்று நாம் படையெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.  அனைத்துக்கும்  பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நாம் எப்படி வல்லரசாகப் போகிறோம் 2020 இல் ?



1 comments:

Very good question. We never appreciate what we have till outsiders make us realise it. This year apparently the number of Americans coming to India for higher studies has gone up by 44% and the number of Indians has come down by 1.2%. But in sheer numbers how can one compare a mere 3500 of the former to over a lakh of the latter?

Post a Comment