Find us on Google+ கற்காலத்தை நோக்கி மீண்டும் படையெடுப்பா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 25 November 2011

கற்காலத்தை நோக்கி மீண்டும் படையெடுப்பா?


அனைத்து நாடுகளும் வளர்ச்சியின் பாதையில் வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் மட்டும் கற்காலத்தை நோக்கி படையெடுக்க தயாராக இருக்கிறோம். என்ன நண்பர்களே புரியவில்லையா? கற்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?

மின்சாரமே இல்லாத இருண்ட உலகத்தில் தங்களது மொத்த வாழ்க்கைப் பயணத்தையும் கடந்தனர். நமது தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? எல்லாம் இருந்தும் இல்லாதது மாதிரி தான். தற்போதைய  பல மணி நேர மின்வெட்டினால் நாமும் இருண்ட உலகில் வாழ அடியெடுத்து வைத்துள்ளோம்.


இன்றைய இயந்திர உலகில் "சம்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது".அத்தனை தேவைகளுக்கும் நாம் மின்சாரத்தின் உதவியை நாடிச் செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டு வேலை முதல் விவசாயம் வரையிலும் மின்சாரத்தை சார்ந்தே நமது வாழ்க்கை அமைகிறது.

 

இதற்கெல்லாம் காரணம் என்ன……..? தமிழகத்தின் மின்சார தேவையானது ஆண்டுக்கு 11,500 மெகாவாட், ஆனால் பிற வளங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 8600 மெகாவாட் தான். மீதம் 3000 மெகாவாட் மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்வதற்காக அண்டை மாநிலங்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். "வரவு எட்டணா செலவு பத்தணா "என்று இருப்பதினால் தமிழக மின்சார வாரியத்தின் மொத்த கடன் தொகை 42,175 கோடி. தற்போது வட்டி கட்டுவதற்கே கடன் வாங்கும் நிலையில் நமது தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.


நீர் ,காற்றாலை ,சோலார் ,பயோ டெக்னாலஜி,அனல் மின்சாரம் போன்ற வகையில் நமக்கு கிடைத்த மின்சாரத்தேவைகள் பெருகிவரும் மக்கள் தேவைக்கு போதாத காரணத்தினால் அணுமின் நிலையங்களின் மீது நாட்டம் அதிகரித்தது. இதற்கு தீர்வு கட்டுவதற்காகவே கூடங்குலம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. அதுவும் தொடங்கப்பட்டதோடு சரி தமிழகத்தின் மின்சார தேவையினை உணராத மக்கள் இன்னும் போராட்டத்தில் இருந்து மீளாமல் இருக்கின்றனர்.


நாம் உபயோகிக்கும் மின் இஸ்திரி பெட்டி, மற்றும் குளிரூட்டியால் அதிக அளவு மின்சாரம் விரயமாகிப் போகிறது. இவைகளின் தேவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் ஓரளவு மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும். மின் இஸ்திரியை நாம் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் மின்சாரக் கட்டணத்தை குறைக்க சலவைக்காரர்களிடம் நாம் இஸ்திரிக்கு துணிகளை கொடுத்தால் அவர்களையும் வாழவைப்பதோடு மின்சார தேவையினையும் குறைக்கலாம்.


கடன் சுமையை சமாளிக்க முடியாத நிலையால், ஒரு யூனிட்டுக்கு 38 சதவிகிதம் வீதம் மின்சாரக்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது நமது தமிழகம். இதே நிலை நீடித்தால் நமது எதிர்கால சந்ததியினர்கள் மின்சாரப் பற்றாக்குறையால் கற்கால வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட கூட வாய்ப்புகள் அதிகம்.

          

          கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்....................................



0 comments:

Post a Comment