Find us on Google+ May 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Tuesday, 29 May 2012

மின்பற்றாக் குறையைப் போக்க இப்படியும் ஒரு திட்டமா?


 இன்று முதல் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது

இன்று இரவு 11 மணியில் இருந்து ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது.

இரவு 11 மணி ஆனதும் வங்க தேசத்தில் உள்ள எல்லா கடிகாரத்திலும் மணியை 12 என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா. ஒரு மணி நேரம் காணாமல் போய்விடும். அப்படித்தானே நினைக்கிறீர்கள். அதுவும் கரெக்ட்தான். ஆனால் இதில் அந்நாட்டுக்கு ஒரு லாபம் இருப்பதாக அது அறிவித்திருக்கிறது. எப்படி என்றால், நாளை காலை நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கூடம் போக வேண்டும், அலுவலகத்துக்கு, மற்ற நிறுவனங்களுக்கு, கடைகளுக்கு செல்ல வேண்டும்.

இன்று வரை காலை எட்டு மணிக்கு தான் எட்டு மணி என்று இருந்திருக்கும். நாளையோ ஏழு மணிக்கே எட்டு மணி என்று கடிகாரம் காட்டப்போகிறது. எனவே இன்று இரவு ஒரு மணி நேரம் குறைந்தது ( 11 முதல் 12 ), நாளை பகல் ஒரு மணி நேரம் கூடுதலாக இருப்பது போல தோன்றும்.

நாடு முழுவதும் இப்படி இருக்கப்போவதால் ஒரு மணி நேர மின்சார உபயோகம் மிச்சமாகிறது. எனவே பகலிலேயே ஆபீஸ் முடிந்து விடும். கடைகள் கூட ஓரளவு பகலிலேயே அடைக்கப்பட்டு விடும். இதன் மூலம் ஒரு மணி நேர மின் உபயோகத்தை மிச்சப்படுத்தலாம் என்று வங்காளதேச அரசு கருதுகிறது.

பல நாடுகள் ஏற்கனவே இந்த மாற்றத்தை செய்திருக்கிறது என்றும் இப்போதுதான் நாங்கள் இதனை செய்ய இருக்கிறோம் என்றும் வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.


அப்பாடா நினச்சு பாத்தாலே  நம்ம தமிழக மக்களுக்கு கண்ண கட்டுதுள்ள, "கரென்ட் இல்லாம கூட இருந்துருவோம் நாங்க ஆனா காலையில ஒரு மணி நேரம் முன்னால  எழுந்திறிக்கிறது எங்கனால முடியாதப்பா".........

Saturday, 19 May 2012

இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா? இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா? நிச்சயம் அனைவருக்கும் கவலை இருக்கிறது ஆனால் நேரம் தான் இல்லை, நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

நாம் குடியிருக்கும் தெருவில் குடிதண்ணீர் வரவில்லையா? தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவும் பயணம் பாதுகாப்பின்றி உள்ளதா? அல்லது சாலைகள் பழுதடைந்துள்ளதால் மழைத் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறதா?


இதற்கெல்லாம் தீர்வு கட்டுவதற்காக கவுன்சிலரிடம் மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருந்தும் ஏமாந்தவர்கள் தான் அதிகம்.இறுதியில் அந்த மனு மாவட்ட ஆட்சியர் பார்வைக்குச் செல்லாமலே நிராகரிக்கப்படும் சந்தர்பமும் உண்டு. இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் நேரமின்மையையும் தவிர்ப்பதற்காக ஆன்லைன் பெட்டிசன் என்ற முறையை 15 மாவட்டங்களான சென்னை கடலூர் தர்மபுரி கன்னியகுமரி கிருஷ்ணகிரி நாமக்கல் பெரம்பலுர் சிவகங்கை தஞசாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருச்சி திருவாரூர் விழுப்புரம் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றனர்.


மற்ற மாவட்டங்களுக்கும் இந்தமுறையை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்ய்யப்பட்டு வருகின்றனர். உங்கள் ஊரில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே உங்கள் மாவட்ட ஆட்சியருடன் நேரடியாக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை:


இதற்கு முதலில் http://www.tn.gov.in/services/GDP/index.asp என்ற தளத்திற்கு செல்லுங்கள்.ஒரு விண்டோ வரும்.


அதில் வலது பக்க சைடு பாரில் Select என்ற சிறிய கட்டம் இருக்கும்.அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓப்பன் ஆகும்.


அந்த விண்டோவில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதை குறித்துக் கொண்டும் இமெயில் அனுப்பலாம்.


அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.


இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள்.


அந்த எண்ணை குறித்துக் கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உங்களின் அறியலாம்.


கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால்,அந்த கோரிக்கை எண்ணை வைத்து நீதி மன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.


நீங்களும் புகார் கொடுக்க தயார் தானே?

Thursday, 10 May 2012

திருந்த வேண்டியது மடங்களா ? மனங்களா ?


தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோல பட்டனர்

32
வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்..


லிங்கம் எடுத்தல் விபூதி எடுத்தல் என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு விடைக் கொடுத்துவிட்டு சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்ட வசீகரத்திற்கு வசியப்பட்டுப்போன பக்தகோடிகள் கோடிகளை கொட்ட சாமியாருக்கு ஜோடியும் தேவைப்பட்டது.

குமுதத்தில் கதவைத் திற காற்று வரட்டும் கட்டுரையை எழுதியவரின் அந்தரங்க கதவை திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனை படம் பிடித்து தொலைக்காட்சிக்கும் அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால் சிற்றின்பத்தை தகாத முறையில் உய்த்து உணர்ந்தார். பாவம் பக்தகோடிகள் இவரின் கட்டுரையை படித்து பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள்.காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா காஞ்சிக்குஎம்’ ’எஸ்நடிகைகளின் சேவைகள். கூடவே அனுவில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்ஆனதாலோ!

அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா?காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர்.

மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.

இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்?அவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல பல புல்லுருவிகளும் புரோகித வேடம் பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல் சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு விடுகின்றனர். இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு கடவுளை மறுக்கிறோம் எனக்கூறும் கூட்டம் ஒன்று ஒழிக்கப்பட வேண்டியவை எவை மடங்களா? மதங்களா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

கடவுளின் பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும், அநியாயங்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தனது அறிவுக்கு சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம் தயாராகவேண்டும்.

இயற்கை புறம்பான நிலையில் பிரம்மாச்சரியத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித் தனத்திலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக முடியும் என்று கூறும் மனிதத் தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள் தயாராக வேண்டும். மனித உள்ளங்கள் இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப் படைத்த உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம் காணாமல் போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின் மனங்களேயாகும்..இப்படி நாம் இன்னும் விளிக்காமல் இருந்தால் இவர்களை போன்றவர்கள் மதுரை ஆதினதுக்கு மட்டும் வர மாட்டார்கள் . நாளை அரசியலுக்கு கூட வர வாய்ப்பு உள்ளது

சிந்தி ! செயல் படு !!

இந்த நிலை நீடித்தால்..... இருண்ட தமிழகம் தான்........

 நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பவர் கட் ஒரு வழியாக முடிவுக்கு வர போகிறதென்று
பேராசைப் பட்டுக் கொண்டிருந்த வேலையில் இன்னொரு அணுகுண்டா  தமிழகத்திற்கு !

 நேற்றைய இரவில் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தே
மீண்டும் பவர் கட்டிற்கு சாபமாக அமைந்து விட்டது. 
40 கோடி  ரூபாய் சேதத்தை ஏற்படுத்தி தந்த இந்த இழப்பை சரி செய்து மீண்டும்
மின் உற்பத்தி  செய்வதற்கு குறைந்த பட்சம் 2 மாதங்களாவது ஆகும் நிலை உள்ளது.

இப்படி அடி மேல் அடி விழுந்து கொண்டே இருந்தால்  என்ன தான் செய்ய போகிறது நமது  தமிழக  அரசு ?

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12 ,500 மெகாவாட் ஆகும் . ஆனால் தற்போது 8500 மெகாவாட் மின்சாரம்
மட்டுமே கிடைக்கும் நிலையில் ,மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட 840  மெகா  வாட்  
மின்சாரமும் கிடைக்கப் போவதில்லை என்றால் நிச்சயம் இருண்ட தமிழகத்தில் தான் நாம் வாழ இருக்கிறோம் . 

Wednesday, 9 May 2012

வருவாய் அதிகரிக்க, வருவாய் வட்டங்களும் அதிகரிக்க போகின்றன


தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள வருவாய் வட்டங்களை பிரித்து புதிதாக 9 வட்டங்கள் உருவாக்கப்படும்

என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில்

மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் வருவாய்த் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், தற்போதைய மக்கள் தொகையின் எண்ணிக்கை, மக்களின் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, வருவாய் வட்டங்களை சீரமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தினை பிரித்து திருப்புவனத்தில் ஒரு புதிய வட்டமும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தினை பிரித்து கலசப்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தினை பிரித்து ஆலத்தூரில் ஒரு புதிய வட்டமும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து கிணத்துக்கடவில் ஒரு புதிய வட்டமும், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தினை பிரித்து திருப்போரூரில் ஒரு புதிய வட்டமும், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தினை பிரித்து அன்னூரில் ஒரு புதிய வட்டமும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கராபுரம் வட்டங்களை சீரமைத்து புதியதாக சின்னசேலத்தில் ஒரு வட்டமும், ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களை சீரமைத்து அந்தியூரில் ஒரு புதிய வட்டமும், நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலையில் ஒரு புதிய வட்டமும் என ஆக மொத்தம் 9 வட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும்.

இது தவிர, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 62 வருவாய் வட்டங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, காலவிரயம் இன்றி மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், வட்டாட்சியர் அலுவலகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, நான்கு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வருவாய் வட்டங்களைப் பிரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசுக்கு பரிந்துரை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரைக் கொண்ட ஒரு அலுவலர் குழு அமைக்கப்படும்.

இக்குழு இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். இக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அரசு தக்க முடிவினை அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் பல்வேறு உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், அரசு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கும், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறாம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெறுவர்.

மேலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னர் உரிய நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பொருட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்பதையும், இந்த நிலையம் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி நிலையமாகவும் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

எப்படியோ புதிய வருவாய் வட்டங்கள் அமைக்கப்படுவதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்தால் மகிழ்ச்சி தான்.


Thursday, 3 May 2012

எலிப்பொறி இல்ல ஓர் கணிப்பொறியாஎந்த ஒரு கணினி பாகத்துடனும் இணைக்கப் படாமல், எப்படி இந்த கம்பியில்லா சுட்டி இயங்குகிறது?

சுட்டி மிகவும் முக்கியமான கணினி உதிரிபாகங்களுள் ஒன்று. சுட்டியின் மூலமாகவே நாம் விரும்பும் வேலைகளை கணினித் திரையில் குறிப்பான்களின் உதவியோடு செய்ய முடியும்.

இந்த சுட்டியில் இருக்கும் பித்தான்களை கொண்டு எழுத்துகள் மற்றும் படங்களை பெரிது படுத்தி காட்டலாம். அதனோடு சுருள்களை ஏற்ற இறக்கத்துடன் செயல்படுத்தவும் செய்யலாம். மற்றும் அரம் , உரைகளை திறக்கவும் இந்த சுட்டி பயன் படுத்தப்படுகிறது. .

கம்பிமுறையில் , சுட்டியிடம் இருந்து தகவல்கள் CPU-க்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் கம்பியில்லா இணைப்பு முறையில், சுட்டியிடம் இருந்து தகவல்கள் ரேடியோ அலைகள் மூலமாக நேரடியாக CPU-க்கு அனுப்பப்படுகின்றன.

இந்த தொழில் நுட்பத்தில் ரேடியோ டிரான்ஸ்மிட்டரை சுட்டியிலும், அந்த ரேடியோ அலைகளை பெறும் வாங்கியை கணிப் பொறியிலும் இணைத்துள்ளனர்.

ரேடியோ அதிர்வெண் வாங்கிகள் சுட்டியின் வாங்கி வழியாக பெறப்பட்ட ரேடியோ அலைகளை , குறிவிலக்கு செய்து அதனை நேரடியாக கணிப்பொறிக்கு அனுப்புகிறது. சில நேரங்களில் தனிப்பட்ட அட்டைகளையும் கணினிகளுடன் இணைத்துக் கொள்கின்றனர்.

அதிகளவு, கம்பியில்லா இணைப்பு முறையானது ஒருங்கிணைக்கப்பட்ட வாங்கிகளாக , மிக சிறிய அளவில் கணினிகளில் உள்ளீடாக செருகிகளின் மூலம் இணைக்கப் பட்டுள்ளது.

இந்த கம்பியில்லா சுட்டி முறையில் 2 .4 ஜிகா ஹெட்ஸ் அளவிலான ரேடியோ அதிர்வெண்களை பயன்படுத்தி தகவல்களை அதிவேகத்துடன் திரைக்கு அனுப்புகிறனர் . அதோடு எந்த ஒரு இடையுறும் இல்லாத இடமாக சுற்று சூழல் இருக்க வேண்டும்.

இந்த தகவல் பரிமாற்றமானது மிக சிறப்பாக 100 மீட்டர் தூரம் வரை செயல்படக் கூடியது. இன்னொரு புதிய தொழில் நுட்பம், இந்த கம்பியில்லா சுட்டி முறையை
Blue tooth
ரேடியோ அலைகள் தொழில்நுட்பத்திலும் \பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தொழில் நுட்பத்திலும் 2 .4

ஹெட்ஸ் அளவிலான ரேடியோ அதிர்வெண்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த Blue tooth முறை தகவல் பரிமாற்றமானது 2 - 3 மீட்டர் தூரம் வரை மட்டுமே தகவல்களை பரிமாற்றிக் கொள்ளக் கூடியது.