Find us on Google+ இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday 19 May 2012

இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா?



 இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா? நிச்சயம் அனைவருக்கும் கவலை இருக்கிறது ஆனால் நேரம் தான் இல்லை, நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

நாம் குடியிருக்கும் தெருவில் குடிதண்ணீர் வரவில்லையா? தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவும் பயணம் பாதுகாப்பின்றி உள்ளதா? அல்லது சாலைகள் பழுதடைந்துள்ளதால் மழைத் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறதா?


இதற்கெல்லாம் தீர்வு கட்டுவதற்காக கவுன்சிலரிடம் மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருந்தும் ஏமாந்தவர்கள் தான் அதிகம்.இறுதியில் அந்த மனு மாவட்ட ஆட்சியர் பார்வைக்குச் செல்லாமலே நிராகரிக்கப்படும் சந்தர்பமும் உண்டு. இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் நேரமின்மையையும் தவிர்ப்பதற்காக ஆன்லைன் பெட்டிசன் என்ற முறையை 15 மாவட்டங்களான சென்னை கடலூர் தர்மபுரி கன்னியகுமரி கிருஷ்ணகிரி நாமக்கல் பெரம்பலுர் சிவகங்கை தஞசாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருச்சி திருவாரூர் விழுப்புரம் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றனர்.


மற்ற மாவட்டங்களுக்கும் இந்தமுறையை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்ய்யப்பட்டு வருகின்றனர். உங்கள் ஊரில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே உங்கள் மாவட்ட ஆட்சியருடன் நேரடியாக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.



ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை:


இதற்கு முதலில் http://www.tn.gov.in/services/GDP/index.asp என்ற தளத்திற்கு செல்லுங்கள்.ஒரு விண்டோ வரும்.


அதில் வலது பக்க சைடு பாரில் Select என்ற சிறிய கட்டம் இருக்கும்.அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓப்பன் ஆகும்.


அந்த விண்டோவில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதை குறித்துக் கொண்டும் இமெயில் அனுப்பலாம்.


அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.


இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள்.


அந்த எண்ணை குறித்துக் கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உங்களின் அறியலாம்.


கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால்,அந்த கோரிக்கை எண்ணை வைத்து நீதி மன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.


நீங்களும் புகார் கொடுக்க தயார் தானே?

0 comments:

Post a Comment