அலகாபுரி என்ற ஒரு அழகான கிராமம்.அங்கே அனந்தன்
என்ற மன்னர் மிகச் சிறந்த முறையில்
அலகாபுரியை ஆட்சி செய்து வந்தார்.
அனந்த மன்னருக்கு மிகவும் பிடித்தமான விசயம்
போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெருபவர்களுக்கு பரிசளிப்பது தான். ஒரு நாள் மாலை வேலையில் அவர் தனியாக
ஊரை வலம் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சூறாவளி. சுமார் மூன்று
நிமிடங்கள் மட்டுமே நீடித்த அந்த சூறாவளிக் காற்று மண்ணைப் புரட்டிப் போட்டது. சூறாவளியில் நிலை தடுமாரி நின்ற
மன்னருக்குக்குள் ஒரு கேள்வி எழும்பியது, நம்
மீது வீசும் காற்றை யாராலும் கையில்
பிடித்து அடக்க முடியுமா?
இது தான் அந்த
கேள்வி.அன்று முழுவதும் நீண்ட நேரம் தூங்காமல் யோசித்தப்படியே இருந்தார்.
மறு நாள் அரசவை கூடியது,மன்னர் தனக்குள் இருந்த கேள்வியை
மந்திரிகளிடம் கூறினார். தன் மீது வீசும் காற்றைகையில் பிடித்து காட்டுபவர்களுக்கு
ஆயிரம் பொற்காசுகள் அழிக்கப்படும் என
சவால் விட்டார்.மந்திரிகளும் அமைச்சர்களும் யோசித்து குழம்பி விட்டனர்.இரண்டு
நாட்கள் மன்னரிடம் அவகாசம் கேட்டனர்.இரண்டு நாட்கள் முடிந்து விட்டன எவருக்கும்
பதில் தெரியவில்லை.ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டிய மன்னர், தன் மீது வீசும் காற்றை கையில்
பிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தரப்படும் என்று கூறினார். மக்களிடத்தில் ஓர் அமைதி
நிலவியது.எவரும் பதில் சொல்ல முன்வரவில்லை.ஐந்து வயது குழந்தை எனக்கு பதில் தெரியும் என்று மன்னரிடம்
கூறியது.ஆச்சரியத்துடன் அனைவரும் அந்த குழந்தையை பார்த்தனர்.விரைந்து வீட்டுக்கு சென்ற குழந்தை ஒரு பலூனை
கையில் எடுத்து வந்து மன்னர் முன் நின்றது.பலூனில் தன் காற்றை ஊதி கயரால் கட்டி
தன் கையில் பலூனை பிடித்தது. இதைப் பார்த்த மன்னருக்கு ஒரே ஆச்சர்யம்.ஆயிரம்
பொற்காசுகளை குழந்தைக்கு கொடுத்தார். நாம் எதை
சிந்தித்தாலும் எளிய வழியில் விடை காண யோசித்தால் கண்டிப்பாக வெற்றி நமதே......
0 comments:
Post a Comment