Find us on Google+ நீங்கள் Hacker என்றால் உங்களுக்கான வாய்ப்பு ! ! ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday, 18 October 2011

நீங்கள் Hacker என்றால் உங்களுக்கான வாய்ப்பு ! !


Hacker என்றால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன்.அதாவது ஒரு நபர் அனுமதி இல்லாத கணினியில் நுழைந்து அவரது தகவல்களை திருடி தனக்கு சாதகமாய் பயன்படுத்துபவர்.

Hacking செய்வதற்க்கு முக்கியமான ஒன்று Internet ,அது இருந்தால் தான் அடுத்தவர் கணினியை நமது கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.இந்தியாவில் என்ன தான் I.T துறை வளர்ச்சி அடைந்தாலும் Hacking செய்வதற்கான ஆள் இல்லை என்றே கூறலாம்.பணம் வாங்கிக் கொண்டு Program எழுதி கொடுக்க தான் ஆள் இருக்கிறது.
கணினியில்  எவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும் கெட்டதும் இருக்கிறது.இன்றைய உலகில் மக்களுடைய வேலைகளை பாதியாக குறைகிறது.internet    அது போல் தான்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் Bank Transaction முதல் Railway இல் Ticket Book செய்வது வரை இணையம் பயன்படுகிறது.

Hacking நல்ல முறையில் பயன்படுத்துவது White Hats என்று அழைக்கப் படுகிறார்கள்.அவர்களுக்கு தான் இன்றைக்கு மவுசு..

இணையத்தில் கெட்டது என்று பார்த்தால் Hacking தான் சொல்வார்கள்.Hackers பெரும்பாலும் நம்முடைய Credit card /Net Banking User Id அண்ட் Password போன்றவகளை தான் திருடுவார்கள்.அதனால் இது போன்ற வேலைகளை செய்யும் பொது கவனமாக செய்ய வேண்டும் .இல்லையென்றால் நமக்கு அல்வா கொடுத்து விடுவார்கள்.
ஆனால் இப்போது Hacking போக்கு மாறியிருக்கிறது.இவர்களுக்கு தான் இப்போது மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.இவர்கள் job Site பார்த்து Register பண்ண அவசியம் இல்லை,Paper Paper ஆக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை,கம்பெனி கம்பெனி யாக ஏறி இறங்க வேண்டியது இல்லை. பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு.
ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.
இதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.

ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்
ஒரு விஷயத்தில் நாம் பெருமை பட்டுக் கொள்ளலாம். பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.

2 comments:

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.!

தங்கம் பழனி @

ரொம்ப நன்றி......

Post a Comment