Find us on Google+ தண்டவாளத்திலே ஒரு விமானப் பயணம் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday, 20 October 2011

தண்டவாளத்திலே ஒரு விமானப் பயணம்


அதிவேக இரயில்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  சீனா, ஜப்பான், பிரான்ஸ் போட்டி போட்டுக் கொண்டு அதிவேக இரயில்களை இயக்கி வருகின்றன. இதில் சீனாவை சொல்லவே வேண்டாம். 1327கிலோமீட்டர் தூரத்தை 5 மணிநேரத்தில் கடக்கும் அதிவேக இரயில் தற்போது சீனாவில் இயங்கி வருகிறது.

      இன்று 1327கிலோமீட்டர் தூரத்தை 3 மணிநேரத்தில் கடக்கும் இரயிலை கண்டறிந்துள்ளனர். இந்த அதிவேக இரயில் பயணத்தால் சீனர்கள் எல்லாரும் விமானத்தில் பயணம் செய்வதைப் போல் உணருவதாக சொல்கிறார்கள்.

      மக்கள் தொகையில்  முதலிடம் பிடித்துள்ள சீனா, இன்று தொழில் நுட்பத்திலும் முன்னேறி வருகிறது. ஆனால் நம்மூரில் 3 மணி நேரத்தில் 1327கிலோமீட்டர் வேகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை . சரியான நேரத்தில் இரயில் வந்தாலே போதுமே....

     தண்டவாளத்தில் தடகளப்போட்டியே நடத்தி விடுவர் நம்ம ஊர் மக்கள், அவ்வளவு தாமதமாக அல்லவா இரயில் வருகிறது. ஆனால் அண்டை நாடான சீனாவில் அனல் பறக்கும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது..

 மக்கள் தொகயில் சீனாவையே முந்து விடும் அளவிற்கு வளர்ந்து வரும் நாம் ஏன் தொழில்நுட்ப வளர்ச்சியில் அந்த போட்டியை காமிக்க கூடாது?

0 comments:

Post a Comment