Find us on Google+ காதல் என்பது கனவு மாதிரி ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday, 24 October 2011

காதல் என்பது கனவு மாதிரி

இன்றைய காதலர்களை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரிய வில்லை. பார்த்ததும் காதல், பார்க்க பார்க்க காதல், ஏன் பார்காமலே    கூட காதலியுக்கிறார்கள். இவர்கள் காதல் எல்லாம் இறுதியில் கல்யாணத்தில முடிகிறதா என்ன ?

  காதலுக்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா ?  எதிர் பாராமல் வருவது தான் காதல். ஒரு பெண்ணை பார்த்ததும் மனதில் பட்டாம் பூச்சி ரீங்காரம் அடிக்கும் அந்த நொடி அவள் நமக்கு தேவதை அவளை ஒரு வழியாக காதல் வலையில் சிக்க வைத்த பின்னர் ஒரு மூன்று மாதம் மிக சுவாரஸ்யமாக பனி துளி மேலே நடந்து செல்வதை போன்று இருக்கும். சுற்றி என்ன நடக்குது என்றே தெரியாத ஒரு மாய வலைக்குள் அடைக்கப் பட்ட சிலந்தியைப் போன்று காதல் படுத்தும் பாடு ஒரு சுமையான சுகம். ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். அப்படி என்றால் எந்த காதலர்களும் இணைவது இல்லை என்கிறீர்களா ? நிச்சயம் நான் அப்படி சொல்ல வர வில்லை. உண்மைக் காதல் காலத்தால் அழியாத சுவடுகளாக விளங்கும்  தாஜ்மகாலை போன்றது தான். எதையும் எதிர் பாக்காமல் வருவது தான் காதல், எதிர் பாராமல் வந்த காதலில், நாம் எதிர்பார்க்கும் குணங்கள் காதலியிடமோ அல்லது காதலனிடமோ இல்லையென்றால் உடனே அந்த காதல் தோற்று போகிறது. இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து வந்தால் மட்டுமே அந்த காதல் கல்யாணம் வரை போகிறது. ஆகவே காதலை கனவாக நினைப்பவர்கள் தோற்றுப் போகிறார்கள். காதல் ஒரு கணம் தெரியாத சுமை. அதை சுகத்துடன் தூக்கி செல்லுங்கள் உங்கள் காதல் கண்டிப்பாக வெற்றி அடையும்.



 

1 comments:

சுகமோ , சுமையோ சுமப்பவன் நானாக மட்டுமே இருக்கின்றேன்....... சில உண்மைகள் ஊமையாகவே இருப்பது நல்லது பேச தொடங்கினால் மனசாட்சி தற்கொலைக்கு முயலும் ......

செல்லன்

Post a Comment