Find us on Google+ I.T கம்பெனியா ?வேணாம் ! ! ! ! ! ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday, 16 October 2011

I.T கம்பெனியா ?வேணாம் ! ! ! ! !


சென்னை மக்களின் வாழ்க்கைத் தரம்,இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது;இது நல்ல விஷயம் தான்.அதே சமயம் இளைஞர்களின் வாழ்க்கை முறை இன்று எங்கோ போய் விட்டது தான் மிகவும் வேதனையான விஷயம்.வெள்ளைக் காரர்கள் எல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஆனால்  நம்முடைய இளைஞர்கள் வெள்ளைக்காரர்களின் “லிவிங் டூ கெதர்பாலிசியை பிடித்துக் கொண்டு வாழ்வதை பார்க்க மிகவும் பயமாக உள்ளது.

சென்னை போகும் போக்கு தாங்க முடிய வில்லை என்றாள் பெங்களூரு அதை விட மோசம்.சமீபத்தில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை ரேப் பண்ணி அவன் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டு சென்றுள்ளனர்.அந்தப் பணத்தையும் அவன் போட்டிருந்த டிரெஸ்சையும் கழட்டிக் கொண்டு அரவாணி ஒருவர் ஓடி விட்டார்.நிர்வாணமாய் கிடந்த அந்த இளைஞனை பார்த்தவர்கள் காப்பாற்றி உள்ளனர் என்ற செய்தி எத்தனை வேதனையை தருகிறது..

பெங்களூருவிலும்  நிறைய ஐ.டி கம்பெனிகள் திறக்கப்பட்டு இளைஞர்கள் எக்கச்சக்கமாக சம்பாதிக்கின்றனர்.இதனால் பெற்றோரை சிறிதும் மதிப்பதில்லை.தம் இஷ்டம் போல் பணத்தை செலவு செய்வதும் ஆடம்பரமாக வாழ்வதும் சிறு வயதிலேயே போதை,மது,செக்ஸ் என தவறான வழிகளுக்கும் சுலபமாக செல்கின்றனர்.
ஒரு குடும்பத்தில் ஒரே மகன் பெண் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்து வந்தனர்.காலேஜ் போகும் போது கூட பின்னாலே செல்வர்.M..E படிக்கும் மகன் Project விஷயமாக ஆசிரியர்களை பார்க்கச் செந்தராலும் இவர்களும் போய் காரிலேயே உட்கார்ந்து கிடப்பர்.படித்து முடிந்ததும் உடனே வேலை கிடைத்தது.அவ்ளோ தான்.அது வரையில் அடக்கமாக இருந்த மகன்,அப்படியே ஆளே மாறி விட்டான்.

பெற்றோரை எதிர்த்து பேசுவது ,girl Friend டிடம் விடிய விடிய போன் பேசுவது..எதிர்த்து கேட்க முடியுமா..பெற்றோர் வாயடைத்து நின்றனர்.ஒரு நாள் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் என்று சொல்லி நண்பரின் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான் அந்த இளைஞன்.அவர்கள் வீட்டில் கேக் கட் பண்ணி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர்.பிறகு “அண்ணி நாங்க ரொம்ப டையர்டா இருக்கோம் சற்று நேரம் தூங்குகிறோம்.. என்று சொல்லி அண்ணியின் பெட்ரூமுக்கு சென்று கதவை அடைத்துச் கொண்டனர்.

அதிர்ந்து போன உறவினர் மனைவி தன் கணவருக்கு போன் செய்து வரவழைத்தார்.பதறியடித்து வீட்டுக்கு ஓடி வந்தவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவர்களே கூலாக எழுந்து வந்து ஒன்றுமே நடக்காது போல் ஷாப்பிங் சென்று விட்டனர்.கொஞ்ச நாட்களில் என்னாச்சு என்றே தெரியவில்லை..எனக்கு அந்த பொண்ணு வேண்டாப்பா “என்றான் மகன்.

ஏன்?என்று காரணம் பார்த்தால் அந்த பொண்ணுக்கு இவனைப் போல் நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் உண்டு என்று.
என்வே இந்த பொன்னை கழட்டி விட்டான்..திரும்பவும் சிறிது நாட்களில் இன்னொரு பொண்ணுடன் “Close ஆக இருந்தான்.

என்ன வாழ்க்கை டா இது ! ! ! !

4 comments:

//என்ன வாழ்க்கை டா இது//
இது தாண்டா வாழ்க்கை.

Nonsense post. It is mud slinging on a profession. I condemn the content.

//ஒரு குடும்பத்தில் ஒரே மகன் பெண் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்து வந்தனர்.காலேஜ் போகும் போது கூட பின்னாலே செல்வர்.M..E படிக்கும் மகன் “Project “ விஷயமாக ஆசிரியர்களை பார்க்கச் செந்தராலும் இவர்களும் போய் காரிலேயே உட்கார்ந்து கிடப்பர்.படித்து முடிந்ததும் உடனே வேலை கிடைத்தது.அவ்ளோ தான்.அது வரையில் அடக்கமாக இருந்த மகன்,அப்படியே ஆளே மாறி விட்டான்.//

இது கற்பனைக் கதையாகவே இருக்க விழைகிறேன்.

12/13 வயசுக்கு அப்புறம் சொந்தக் காலில் நிற்கத் தெரியாத இளைஞனின் திருகணத்திற்குப் பிறகும் அப்பாவும், அம்மாவுபம் படுக்கையறை சென்று கற்றுத் தருவார்களோ?

@Gujaal

இது ஒன்றும் கற்பனை இல்லை..உங்களுக்கு தெரியாத விஷயங்கள் இந்த உலகத்தில் நிறையவே உள்ளன.I.T யில் என்ன நடக்கது என்று யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை.ஏனென்றால் மேல சொன்ன விஷயங்கள் தினபத்திரிக்கையில் முதல் பக்கத்தில் வருவதில்லை.அதை செய்தி யாக யாரும் பார்ப்பதில்லை...

Post a Comment