இந்த சேவையை நமக்காக அழித்து வருகிறது ஸ்கிரைப்டி(scribd) வலைதளம்.
ஸ்கிரைப்டி பற்றி உங்களுக்கு தெரியுமா....? இதில் உறுப்பினராக இலவசமாக சேர்ந்து கொள்ளலாம்.அனைத்து வகையான டெக்னிக்கல் புத்தகங்களையும், பி.டி.எஃப் ஆவணங்களையும் (DOCUMENT),டுடோரியலையும் (TUTORIAL)தன்னகத்தே கொண்டுள்ளது இந்த வலைதளம்.
இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்யும் வகையில் அமையப்பெற்றுள்ளது இந்த வலைதளத்தின் தனிச்சிறப்பு.
கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி(இஞ்சினியரிங்) படிக்கும் மாணவர்களுக்கு ஸ்கிரைப்டி ஓர் வரபிரசாதமாக உள்ளது.
தேர்வுக்கு முந்தைய தினம் நூலகங்களையும்,புத்தக கடைகளையும் தேடி செல்வதை விட, ஸ்கிரைபிடி(scribd) வலைதளத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் நேரத்தை சேமிப்பதோடு அதிக மதிப்பெண்களையும் பெறலாம் மற்றும் தேர்வு நேரத்தில் பேராசிரியர் காலிலோ அல்லது நண்பர்கள் காலிலோ விழுந்து நோட்ஸ் வாங்கி படிப்பதை விட பக்கத்து தெருவில் இருக்கும் இணையதள மையத்துக்கு சென்றால் தேர்வுக்கு தேவையான மெட்டீரியலை பதிவிறக்கம் செய்து விடலாம். புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான டுடோரியலையும்(TUTORIAL) நாம் பதிவிறக்கம் செய்ய முடிகிறது.
ஒரு மென்பொருளை எப்படி உபயோகிப்பது அதன் பயன்கள் மற்றும் அது சம்மந்தப் பட்ட அனைத்து தரப்பு விசயங்களையும் நமக்கு இலவசமாக வழங்குகிறது.கூகுளில் நாம் தேடி படிக்க பல மணி நேர விரயம் ஆகிறது அதுமட்டுமில்லாமல் ஒரு புத்தகம் முழுவதையும் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது முடியாத ஒன்று.
அந்த கவலையே நமக்கு இனி தேவையில்லை
.நீங்களும் ஸ்கிரைபிடியில் உறுப்பினர் ஆகி,
” அள்ளிகங்க அள்ளிகங்க
இலவசமா புத்தகங்களை அள்ளிகங்க.....இது ஆடி தள்ளுபடியில்லங்க ஆண்டு முழுவதும் தள்ளுபடி.”
உங்களுக்காக இலவசமாக அளிக்கப்படுகிறது.
5 comments:
very useful information
Cant read your blog properly. Please change the templet.
@Alavoudine
Thanx.....for ur Response ...
@அருண்மொழித்தேவன்
Thanx for Ur Suggestions...
thanks raj
Post a Comment