Find us on Google+ கறுப்பு பணத்தால் இன்று நாணயங்கள் எல்லாம் வெளுத்துக் கொண்டிருக்கின்றன ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 20 October 2011

கறுப்பு பணத்தால் இன்று நாணயங்கள் எல்லாம் வெளுத்துக் கொண்டிருக்கின்றன


    
    என்னடா கறுப்பு பணம் என்றதும் இங்கேயும் ஊழலா என நினைக்கிறீர்களா? பயப்படாதீர்கள்.  ரிசர்வ் வங்கிபுதிதாக வெளியிட்டுள்ள ஒரு ரூபாய் நாணயம் தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம். முன்பெல்லாம் வெண்கலத்தில் நாணயங்களை செய்து வந்தனர். மின்சாரமே கண்டு பிடிக்காத காலத்தில் கூட மக்கள் இருட்டிலும் நாணயத்தின் வடிவத்தை வைத்து அதன் மதிப்பினை கண்டறிந்தனர். தற்போது வெண்கலத்திற்கு பஞ்சமோ என்னவோ நிக்கல் உலோகத்தால் தான் நாணயங்கள் செய்யப்படுகின்றன. அதுவும் ஒரு ரூபாயை சற்று பெரிய அளவிலாவது வெளியிட்டு இருக்கலாமே? அதிலும் கஞ்சத்தனமா? தற்போது 50 பைசா, 5ரூபாய் உள்ள அளவிலேயே இந்த ஒரு ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.

      ஏற்கனவே 5 ரூபாய்க்கும், 50 பைசாவிற்கும் பெரிய தகராறு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இதில் மூன்றாவதாக ஒரு ரூபாய் நாணயமும் இதனுடன் போட்டி போட அடி எடுத்து வைத்துள்ளது

        இதனால் பாதிக்கப் படுபவர்கள் கிராம மக்கள் மற்றும் வயதானவர்கள் மட்டுமல்ல நாமும் தான். அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் கவனிக்காமல் சில்லரைகளை அள்ளிக் கொடுத்திவிடுவோம் கஷ்டமர்களிடம்.  சொல்லப் போனால் இதனால் பிச்சைக் காரர்களுக்கத்தான் பெரிய வாழ்வு.

                        வாழ்க பிச்சை வாழ்க பிச்சை.................................................
                        இந்த நிலை நீடித்தால் வளருமா தமிழகம்........................

0 comments:

Post a Comment