Find us on Google+ About Me ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

About Me


        நான் இராமநாதபுரம் மாவட்டத்திலே பிறந்து வளர்ந்தேன். நான் பொறியியல் பட்டதாரி. எனக்கு எழுத்தில் சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகம்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டேன். 11 வயதில் நானே படைத்த முதல் கட்டுரை அது தான். அந்த கட்டுரையின் பெயர்சிறு துளி பெருவெள்ளம்”.என்னுடைய முதல் படைப்பு தோல்வியில் தான் முடிந்தது. ஆனாலும் என் முயற்சியை கைவிட வில்லை. தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டேன். 3ஆண்டுகள் நான் அடைந்த தோல்வியில் நான் செய்த தவறுகளை எல்லாம் என்னால் திருத்திக் கொள்ள முடிந்தது. ஒன்பதாம் வகுப்பில் இருந்து தொடர்ந்து கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளில் பரிசினை வென்றேன். அனைத்து கட்டுரைப் போட்டிகளிலும் முதல் பரிசினையே வென்றேன். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பரமக்குடி வட்டார அளவில் நடந்த கட்டுரைப்போட்டியில் நான் முதல் பரிசினை மாவட்ட ஆட்சியாளர் கையில் வாங்கியது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.  

அடுத்ததாக பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் மாவட்ட அளவிலான கட்டுரை,கவிதை மற்றும் பேச்சு போட்டி நடந்தது.போட்டியின் விதிமுறைப்படி ஒரு போட்டியாளர் இரண்டு போட்டிகளில் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நான் கட்டுரை மற்றும் கவிதை என இரண்டிலும் கலந்து கொண்டேன். போட்டிக்கு 5 நிமிடங்களுக்கு முன்பு தான் கட்டுரை மற்றும் கவிதைக்கான தலைப்புகள் வழங்கப்பட்டன. அன்று மாலை 4 மணி அளவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நான் கலந்து கொண்ட 2 போட்டிகளிலும் நான் தான் முதல் பரிசினை வென்றேன். என்னால் இன்னும் மறக்க முடியாத என் அனுபவங்கள் இவைகள் எல்லாம்

    அன்று முடிவு பன்னினேன் கடவுள் எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு என் எழுத்து திறமை தான் என...  அதன் பின் கல்லூரியிலும் கவிதை என்றால் அது ஜெயப்பிரியா தான் என முத்திரை பதித்தேன்

என்னைக் கவர்ந்த சிந்தனையாளர், எழுத்தாளர்,பேச்சாளர் எல்லாமே ஒரே ஒரு தனி நபர் தான் அவர் தான் சுகி சிவம்.வாரந்தவறாமல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சன் தொலைக்காட்சியில் அவருடைய சிந்தனையை நானும் என் அப்பாவும் கேட்போம். அவர் பேசி முடித்த பின்னர் அவர் கூறிய கருத்துகளைப் பற்றி நானும் என் அப்பாவும் விவாதம் செய்வோம். அப்படி வளர்ந்தது தான் என் சிந்தனைகள்..  என்னுடைய எழுத்துத் திறனை என் சிந்தனைக்கு பயன்படுத்தி என் எழுத்துக்கு உயிர் கொடுக்க ஆசைப்பட்டேன். கல்லூரியில் படிக்கும் போது மூன்றாம் ஆண்டு எழுத தொடங்கினேன் புத்தகத்தை. அதன் வேர் தான் இன்று மரமாகிசிந்தனைச் சிகரங்கள்என்ற பெயரில் புத்தமாகி உள்ளது...

2 comments:

பன்னினேன் அல்ல ....பண்ணினேன்.:)

Post a Comment