Find us on Google+ திடுக்கிடும் தகவல் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 6 September 2012

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல்

இன்றைய நிலையில்  வயது வித்தியாசமேயின்றி  அனைவரது கை இடுக்குகளிலும் ஆறாவது விரலாக பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறது இந்த கைபேசி.
இயந்திர உலகில் நாம் படும் இன்னல்களுக்கிடையில் நம்மோடு சேர்ந்து வியர்வைக்குள்ளும்,  நெரிசல்களுக்குள்ளும்  சேர்ந்து அல்லல் படுவதோடு மட்டுமல்லாமல்  அழுக்குகளையும்  படிய வைத்து கொள்கிறது.

உண்ணும் போதும் , உறங்கும் போதும்  என்று  கூடவே  நம்முடன் பயணம் மேற்கொள்ளும் கைபேசிகளின் சுகாதாரத்தைப் பற்றி என்றேனும் நாம் கவலைப்பட்டதுண்டா?

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் ஓர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
நம் வீட்டு கழிவறைகளில் இருக்கும் கிருமிகளை விட நாம் கையில் வைத்திருக்கும்
கைபேசிகளில் தினந்தோறும் படியும் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமென்று .

சின்ன சின்ன விசயங்களை நாம் கண்டுக்காமல் விட்டுவிடுவதன் விளைவு தான் இந்த திடுக்கிடும் தகவலின் மறுபக்கம்.
தற்போது வயிறு சம்பந்தமான நோய்களால் அதிகப்படியான  மக்கள் மருத்துவமனை
வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வைத்தியம் பார்த்து செல்கின்றனர். 
இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மட்டுமல்ல ,
ஆறாவது விரலான செல்போன்களையும் கையில் இணைத்துக் கொண்டே உண்பது தான்.

வாய்க்கு அடைப்பு போடாவிட்டாலும் பரவாயில்லை, இயன்றவரை  கைபேசிக்கு உறை போட்டு பயன்படுத்துங்கள்.
முடிந்தவரை துணிகளால் ஆன உறைகளை பயன்படுத்தினால் அடிக்கடி சுத்தம் செய்து பயன் படுத்துங்கள்.
சுகாதாரம் நம்மிடம் உள்ள சின்ன சின்ன விசயங்களில் இருந்தே தொடங்குகிறது.

4 comments:

பயனுள்ள தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

This comment has been removed by a blog administrator.

useful information...keep it up

Post a Comment