எத்தனையோ தாலுகாக்களில் இன்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் தான் இருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்திவிட்டால் மட்டும் போதுமா? லட்சங்களை வாங்கிக் கொண்டும், ஆட்சிக் கோட்டாவிலும் பலரை கிராம நிர்வாகத் துரை அதிகாரியாக அமைத்து விட்டு உண்மைக்கும், கடின உழைப்பிற்கும் முன்னுரிமை அளிக்கமாலே சென்று கொண்டிருக்கிறது நமது சமுதாயம் ............
இதனால் பதவிக் காலம் முடிவடைந்து பணி ஓய்வு பெற்ற பல கிராம நிர்வாக அதிகாரியின் இடம் காலியாகவே உள்ளது. எத்தனை இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற்றும் பணம் என்ற ஒரே காரணத்தினால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு உதாரணமாக ஒரு சான்றை உங்கள் முன் வைக்கிறேன்.
பதவி ஓய்வு பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரங்கோட்டை பகுதியில் இன்னும் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப் படவில்லை. எவருமே லஞ்சம் கொடுக்க முன்வராத சூரங்கோட்டை பகுதியில் இன்னும் அந்த பணியிடம் காலியாகவே உள்ளது. ஆகவே மாற்று ஏற்பாடாக தற்போது சூரங்கோட்டை பகுதியில் உள்ள காலியிடத்தையும் சேர்த்து பக்கத்து பகுதியான கேணிக்கரையில் தற்போது பணியாற்றி வரும் கிராம பஞ்சாயத்து அலுவலரை நியமித்துள்ளனர்.
இவர் காலையில் கேணிக்கரை பகுதியிலும் மதிய வேளையில் சூரங்கோட்டை பகுதியிலும் பணியாற்றி வருகிறார். அப்படியென்றால் இவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல இரண்டு சம்பளமா என்றால் அதுவும் கிடையாது.
நம் தமிழகத்தில் என்ன மக்கள் தொகைக்கா பஞ்சம்? இல்லை!
வேலையில்லா பட்டதாரிகளுக்குத் தான் பஞ்சமா?
அப்படி இருக்கையில் லஞ்சம் கொடுக்க முன் வராத காரணத்தினால் ஒருத்தர் இரண்டு கிராம நிர்வாகத்தை ஆண்டு கொண்டிருப்பது இந்த தமிழகத்திற்கே சாத்தியமா?????????????
0 comments:
Post a Comment