முன்பெல்லாம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கடிதங்களைப் பரிமாறி வந்தோம். கடிதங்களின் வாயிலாக கிடைக்கப் பெறும் நலம் நலமறிய ஆவலுக்கு இணை வேறு எதுவுமே இல்லை. தபால் காரர் வந்து ஐய்யா போஸ்ட் என்று ஒரு சத்தம் கொடுத்தால் போதும் அனைவரும் பறந்து வந்து தபாலை வாங்குவர். அதோடு பண்டிகை காலங்களில் வாழ்த்து மடல்களின் வரவேற்பு அனைவரது இல்லத்தையும் ஆனந்தமாய் அலங்கரிக்கும். ஆனால் தற்போதைய நிலை தலை கீழாக மாறியுள்ளது. என்றைக்கு தொலைபேசிகள் மற்றும் கைபேசிகளின் வரவேற்பு அதிகமானதோ அன்றே கடிதங்களுக்கும் வாழ்த்து மடல்களுக்கும் நாம் குட் பாய் சொல்லி விட்டோம். இந்த நிலையில் அறிவியலின் வளர்ச்சியை மேலும் ஆக்கப் பூர்வமாக்கும் நோக்கத்தில் கொரியர்களுக்கும் ஒரு ஆப்பு வைத்து வட ஏற்பாடு செய்து விட்டனர்.
அப்படி என்ன அந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்கிறீர்களா? எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு முறை தான் இந்த புதிய உலகை ஆள தற்போது அடியெடுத்து வைத்துள்ளது.
அதாவது நமக்கு மிக தொலைவில் இருப்பவர்களுக்கு நாம் நினைத்தவுடன் நம்மால் பரிசு பொருட்களைக் கொடுக்க முடியாது. ஆனால் இந்த எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு வசங்கும் சேவையின் மூலம் இணையத்தில் நமக்கு தேவையான பொருட்களை டெபிட் கார்டு மூலம் வாங்கி அந்த பொருளுக்கான ரசீதை நேரடியாக எலெக்ட்ரானிக் கிப்ட் கார்டு முறையில் பெறுபவரின் பெயர் மற்றும் முகவரியுடன் மின்னஞ்சலையும் இணைத்து கொடுக்கவும் அதை சில நிமிடங்களில் சலானாக கிடைக்கப்பெறுகிறார் பெறுனர். அந்த சலானை அவர் உடனடியாக மாற்றி பொருளை பெற்று கொள்ளலாம். அதில் அவருக்கு ஒரு சந்தோசம் கிடைக்கப் பெறுகிறார். அனுப்புனருக்கும், பெறுனரிடம் பொருள் கிடைத்தவுடன் தகவல் அனுப்பப் படுகிறது.
இப்படி அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும் காத்திருந்து பரிசுகளை தபால் மூலமோ அல்லது கொரியர் மூலமோ கிடைக்கப் பெறும் சுகமே தனி தான் .
0 comments:
Post a Comment