இப்படியும் ஒரு முதல்வரா?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,"மறக்க முடியாத நினைவுகள்'என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தன் குழந்தை பருவம் குறித்து அவர் எழுதியுள்ளதாவது: பள்ளியில் படிக்கும்போது, எனக்கு மிகவும் நெருக்கமான, நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, எனக்கு துரோகம் செய்தாள். கணித தேர்வின்போது, தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், நான் எழுதி முடித்து விட்டேன். அருகில் அமர்ந்திருந்த தோழிக்கு உதவுவதற்காக, அவளுடைய விடைத் தாளை நானும், என்னுடைய விடைத்தாளை அவளும் மாற்றிக் கொண்டோம். மீதமிருந்த நேரத்தில் என் தோழிக்காக சில கணக்குகளை பூர்த்தி செய்தேன். மணி அடித்தபோது, என்னுடைய விடைத்தாள், தோழியிடம் தான் இருந்தது. தேர்வு கண்காணிப்பாளரிடம், என்னுடைய விடைத் தாளை, என் தோழியே கொடுத்து விட்டாள்.
தேர்வு முடிவுகள் வெளியான போது, எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கணிதத்தை தவிர, மற்ற அனைத்து தேர்வுகளிலும் நல்ல மார்க் எடுத்து, தேர்ச்சி அடைந்திருந்தேன். கணித தேர்வில் தவறியதை என்னால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து, உரிய முறையில் விண்ணப்பித்து, விடைத்தாளை மறு ஆய்வு செய்யும்படி கோரினேன். அப்போது என்னுடைய விடைத்தாளில், என் தோழி, குறுக்கே கோடிட்டு அடித்திருந்தது தெரியவந்தது. மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தோழியே, என் முதுகில் குத்திய சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.அதோடு மட்டுமா என்ன?
தற்போது அனைவரும் "பாய் பிரண்ட்' பற்றி பேசி வருகின்றனர். ஆனால், என்னுடைய பள்ளி பருவத்தில், இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. பெற்றோர் என்னை கண்டிப்புடன் வளர்த்தனர். பள்ளி, வீடு, இதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. இவ்வாறு அந்த புத்தகத்தில் மம்தா எழுதியிருந்தார்.
ஒரு மாநிலத்தையே தற்போது ஆட்சி செய்து கொண்டு இருக்கும் திறமை உடையவருக்கு , இளம் வயதில் சமூகத்தின் மீதான தாக்கம் இல்லை என்பது வியப்பிற்கு உறிய விசயமாக இருப்பதோடு அப்படிப்பட்டவர் எப்படி முன்னாள் மத்திய இரயில்வே துறை நிர்வாகியாகவும் தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் விளங்க முடிகிறது.....?
1 comments:
குழந்தைப்பருவம் என்பதுவேறு உலகம். உதாரணமாக அப்போது நன்றாகப் படிக்காத பிள்ளைகள் கூட ஒரு பருவம் வரும்போது மாறிவிடுகின்றனர்.
Post a Comment