இன்னும் 20 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி கிடைக்காது என கட்டுக்கட்டாக பீதிகளை கிளப்பி வருகின்றனர். நம் நாட்டில் கடலோரப்பகுதியில் எப்படி தோண்ட தோண்ட தண்ணீர் வருகிறதோ அதைப் போன்று சவுதி அரேபியாவில் தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கிறது. இன்னும் தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் பல பெட்ரோலியப் பேரல்கள் உள்ளன. இவைகளைக் கொண்டு இன்னும் 70 ஆண்டுகள் இந்த உலகமே பற்றாக்குறை இல்லாமல் எண்ணெய் வளங்களை பயன்படுத்தலாம்.
அதோடு பிரேசிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி லிட்டர் அளவிலான பெட்ரோலிய பேரல்களின் மூலம் இந்த உலகமே இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் எண்ணைய் வளங்கள் இல்லாமல் செழிப்புடன் வாழலாம் என சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பிரேசிலும் பெட்ரோலிய உற்பத்தியில் கொடிகட்டி பறக்கப் போகிறது.
அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இன்னும் பயன்படுத்தப்படாமல் இயற்கையின் பாதுகாப்புக்காக தோண்டி எடுக்கப்படாமல் இருக்கும் நிலக்கரிகள் ஏராளம். ஆகவே இன்னும் 200 ஆண்டுகளுக்கு நமக்கு எண்ணெய் வளங்களைப் பற்றிய பயம் தேவையில்லை. இவ்வளவு பெட்ரோல் வளம் இருந்தும் நமது அரசு ஏன் இன்னும் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது ??
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைப்பதற்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு 53 ஆக உயர்ந்து விட்டதாலும் பெட்ரோலிய எண்ணெய் பொருட்களின் விலையை 2.10 பைசா அதிகரித்துள்ளனர். பெட்ரோல் விலை கூடினால் ஒட்டு மொத்தமாக அன்றாட தேவை பொருட்களின் விலையும் தானாக கூடி விடுகிறது அல்லவா?
இதைத் தான் தலையில் அடித்தால் பாதம் வரை அதன் வீரியம் பரவும் என்பார்கள். இதனால் அடித்தட்டு மக்களின் நிலை இன்னும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரசின் கடன் சுமையை குறைப்பதற்காக மக்கள் அனைவரையும் கடன் காரர்கள் ஆக்கும் சமுதாயமாகவே இன்றைய சமுதாயம் உள்ளது.
0 comments:
Post a Comment