மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது ஐ.பி.எம் நிறுவனம்.
இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது.
ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். வரலாறு,புவியியல், பொழுதுபோக்கு,இலக்கியம்.அரசியல்,சமூகம்,கணிதம்,அறிவியல் என எந்த துறையிலிருந்தும் கேள்விகள் வரலாம். கேள்விகள் நேரடியாகவோ அல்லது துப்புகள் மூலமாகவோ அல்லது அனுமானமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்கப்பட்ட கேள்விகளை, அதனுடைய சூழல் புரிந்து சரியான பதிலை விரைவாக சொல்ல வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனிதர்களின் பேச்சு மொழி வழக்கிலேயே கேள்விகள் கேட்கப்படும். இந்த போட்டியில் வெல்வது குதிரைக் கொம்பு தான்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் முதன் முறையாக ஒரு கம்ப்யூட்டர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. மனிதனுக்கும் ,ஒரு இயந்திரத்திற்கும் நடக்கும் போட்டியாகவே கருதப்பட்ட இந்நிகழ்ச்சி பலரையும் ஆச்ச்சரியத்தில் வாய் பிளக்க வைத்தது உண்மை தான். ஒவ்வொரு பதிலும் துல்லியமானதாகவும், வேகமானதாகவும், நம்பிக்கையுடனும் தெரிவிக்க வேண்டும். மனிதர்களை போல சிந்திக்கும் திறனும், தகவல் திரட்டுகளை சரியாகப் பயன்படுத்தும் திறனும், கேள்வியின் நோக்கையும், சூழலையும் புரிந்து கொள்ளும் திறமையும் கொண்டதாக வாட்சன் படைக்கப்பட்டது. இது ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் துறையில் முற்றிலும் ஒரு புதிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
வாட்சன் கணினி, மொத்தம் 90 ஐ.பி.எம் பவர் 750 சர்வர்களின் குழுமத்தினையும், 16 டெராபைட் ரோம் திறனையும், மொத்தம் 2880 பவர், 7 பிராசசர் சக்தியும் கொண்ட ஒரு பிரமாண்ட படைப்பாகும். ஒவ்வொரு பவர் 750 சர்வரும், 3.5 ஜிகா ஹெட்ஸ் பவர் 7 கொண்ட 8 கோர் ப்ராசசரை கோரும் நான்கு த்ரெட்களை உபயோகப்படுத்துகின்றது.
வாட்சன் கணினி, 500 ஜிகாபைட்ஸ் தகவல்களை செயல் கட்டுப்பாடு செய்யும் திறமை கொண்டது. அதாவது, ஒரு நொடியில் பத்து லட்சம் புத்தகத்தை வாசிக்கும் திறனைக் கொண்டது. இதனை வடிவமைப்பதற்கு மட்டும் 3 மில்லியன் டாலர் செலவானது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்சனின் தகவல்
திரட்டிற்காக, வெவ்வேறு வகையான மூலாதாரங்கள் பயன்படுத்தப்பட்டன. வெவ்வேறு என்சைக்ளோபீடியா, டிக்சனரி , தெசாரஸ் , டேட்டாபேஸ்கள் , டாக்ஸானமி, ஆன்டாலாஜி போன்றவற்றால் அறிவூட்டப்பட்டது. பின்ன என்னங்க, நொடிப்பொழுதில் பதில் சொல்ல வேண்டும் என்றால் சும்மாவா.
இப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணம் , மனிதர்களின் மிக முக்கிய காரணம், மனிதர்களின் மூளையை அப்படியே வடிவமைக்க வேண்டுமென்பதல்ல. மாறாக, மனிதர்களின் நடைமுறை மொழியை அதன் இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும்
ஆற்றலுடன் ஒரு இயந்திரத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை இலக்காகும். ஏனென்றால், மனிதர்களுக்காக மனிதர்களே படைப்பது தானெ ஒரு இயந்திரம்..... அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் .... இப்படியே போனால் வருங்காலத்தில் மனிதனே தேவையில்லை இயந்திரங்களே போதும் என்ற நிலைக்கு இந்த உலகமாகவே மாறிவிடப்போகிறது!!!!!!!!!!.
0 comments:
Post a Comment