பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்
தற்கொலைகளின் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே தான் போகிறது.
"சாவதற்கு தைரியம் இருப்பவர்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா" ? என்பது சிந்தனைக்கு சவாலாகவே இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் , ஐ.ஐ.டி-யிலும் வருடந்தோறும் இரண்டுக்கு மேற்பட்ட தற்கொலைகலாவது நடந்து விடுகின்றது. சென்னை ஐ.ஐ.டி-யில் மட்டும் 2008 - இல் 5 மாணவர்களும்,
2009 - இல் 4 மாணவர்களும், ௨௦௧௦ -இல் 2 மாணவர்களும் 2011 -இல் 9 மாணவர்களும் தற்கொலை செஉது கொண்டு இறந்துள்ளனர் .
தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவன் மணிகண்டன் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து, நேற்று தற்கொலை செய்து கொண்டார் முதலாமாண்டு சிவில் துறையை சேர்ந்த மாணவி தைரிய லெட்சுமி. இந்த மாணவியின் பெயரில் மட்டும் தான் தைரியம் இருக்கிறதே தவிர அவளுக்குள் இல்லை.
இவர்களின் சாவிற்கு காரணம் என்ன?
அவர்களுக்குள் எழுகிற தாழ்வு மனப்பான்மையும், பெற்றோர்களின் கட்டாயமும் தான்.
பள்ளியில் முதல் மாணவனாக இருந்து அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் , கல்லுரியில் மற்ற மாணவர்களுக்கு முன்னால் தங்களை குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு படிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் தாழ்வு மனப்பான்மை என்னும் கூண்டுக்குள் அடைபட்டு விடுகிறனர்.
இதற்கான தீர்வு தான் என்ன?
ஒன்று தமிழக அரசு முதலாமாண்டு பொறியியல் படிப்புகளின் பாடசுமையை பாதிக்கு பாதியாக
12 -இல் இருந்து 6 -ஆக குறைக்க வேண்டும். அதோடு முதல் செமஸ்டரில் மாணவர்களுக்கிடையே நல்ல ஒரு நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும் படியாகவும் அவர்களுக்கிடையே எல்லோரும் சமம் என்று உணருகிற நிலை வருகிற அளவுக்கு பல கலந்துரையாடல்களை வாரம் மூன்று முறை ஏற்படுத்தி தரலாம். அதோடு படிப்புடன் நின்று விடாமல் பொழுது போக்கு அம்சத்திலும் அவர்களை ஈடுபடுத்தி மனப்பாரத்தை குறைக்கும் படியாக வகுப்புகளை கொண்டு சென்றால் இந்த மாதிரியான உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.
1 comments:
நல்ல கட்டுரை!
Post a Comment