இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பி.,யாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும். சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன் சந்தித்தார் சச்சின். அது முதலே பற்றிக்கொண்டது பரபரப்பு.
சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்வதாக மீடியாக்கள் கொளுத்திப்போட்டன.தொடர்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சச்சின் அரசியல் பிரவேதத்தை வரவேற்கத்துவங்கின. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதற்கு வரவேற்பு தெரிவித்தன. தொடர்ந்து சச்சினை ராஜ்யசபா எம்.பி-யாக பரிந்துரை செய்து மத்திய அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட சச்சினை ராஜ்யசபா எம்.பி.-யாக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சச்சின் விரைவில் ராஜ்யசபா எம்.பி-யாக பதவியேற்பார் என தெரிகிறது.
மேலும், சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதை காந்தியவாதி அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, சச்சின் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
ஆட்ட நாயகனாக இருந்து ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்த சச்சின், தற்போது அரசியலில் களம் இறங்கி இருப்பது ஒருபக்கம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் , ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா விருதளித்து பாராட்டுவது போதாதா? அதற்காக அரசியலில் எம்.பி பதவி கொடுத்து தான் பாராட்ட வேண்டுமா என்ன?
சினிமா நட்சத்திரங்களே இன்றைய அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் புதுவிதமாக விளையாட்டு வீரரை அரசியலுக்குள் கொண்டு வருவது தவறில்லையே என்றும் சிந்திக்க தொனுகிரதல்லவா ?
அவர் அரசியலை ஆடுகளமாக நினைக்கப் போகிறாரா ? இல்லை ஆட்டுவிக்கப் படப்போகிறாரா ? எது எப்படியிருப்பினும் அரசியலில் முன் அனுபவமே இல்லாத சச்சின் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment