தமிழகத்தில், 92 உட்பட நாடு முழுவதும் ஆயிரம் ஏ.டி.எம்., களை
(தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்), அமைக்க தபால் துறை திட்டமிட்டுள்ளது என, மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:தபால் துறை மூலம் நாடு முழுவதும்
ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக,
820 தலைமை தபால் அலுவலகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஏ.டி.எம்.,களை எந்தெந்த தபால் அலுவலகங்களில் அமைப்பது
என்பது விரைவில் கண்டறியப்படும்.
ஆந்திராவில் 100, தமிழகத்தில் 92, உத்திர பிரதேசத்தில் 73,
மகாராஷ்டிராவில் 61, கர்நாடகாவில் 60, கேரளா மற்றும்
ராஜஸ்தானில் தலா 51 என்ற அளவில் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட உள்ளன.
நவீனமயமாக்க திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 969 தபால் அலுவலகங்களை,
தபால்துறை கணினி மயமாக்கியுள்ளது. மேலும், 2013ம் ஆண்டுக்குள் 1.55 லட்சம் தபால் அலுவலகங்களை கணினி மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தபால் நிலையங்களில் பணம் சேமிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு ATM சேவை இல்லாத ஒரு மிகப் பெரிய குறைபாடும் தபால் நிலையங்களின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாய் இருந்தது. அதனை தற்போதாவது அறிந்துள்ளனரே ! இனிமேலவது தபால் நிலையங்களின் சேமிப்பு கணக்கு உயருகிறதா என பார்க்கலாம் !!!!!!!!!!!
0 comments:
Post a Comment