எந்த ஒரு கணினி பாகத்துடனும் இணைக்கப் படாமல், எப்படி இந்த கம்பியில்லா சுட்டி இயங்குகிறது?
சுட்டி மிகவும் முக்கியமான கணினி உதிரிபாகங்களுள் ஒன்று. சுட்டியின் மூலமாகவே நாம் விரும்பும் வேலைகளை கணினித் திரையில் குறிப்பான்களின் உதவியோடு செய்ய முடியும்.
இந்த சுட்டியில் இருக்கும் பித்தான்களை கொண்டு எழுத்துகள் மற்றும் படங்களை பெரிது படுத்தி காட்டலாம். அதனோடு சுருள்களை ஏற்ற இறக்கத்துடன் செயல்படுத்தவும் செய்யலாம். மற்றும் அரம் , உரைகளை திறக்கவும் இந்த சுட்டி பயன் படுத்தப்படுகிறது. .
கம்பிமுறையில் , சுட்டியிடம் இருந்து தகவல்கள் CPU-க்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் கம்பியில்லா இணைப்பு முறையில், சுட்டியிடம் இருந்து தகவல்கள் ரேடியோ அலைகள் மூலமாக நேரடியாக CPU-க்கு அனுப்பப்படுகின்றன.
இந்த தொழில் நுட்பத்தில் ரேடியோ டிரான்ஸ்மிட்டரை சுட்டியிலும், அந்த ரேடியோ அலைகளை பெறும் வாங்கியை கணிப் பொறியிலும் இணைத்துள்ளனர்.
ரேடியோ அதிர்வெண் வாங்கிகள் சுட்டியின் வாங்கி வழியாக பெறப்பட்ட ரேடியோ அலைகளை , குறிவிலக்கு செய்து அதனை நேரடியாக கணிப்பொறிக்கு அனுப்புகிறது. சில நேரங்களில் தனிப்பட்ட அட்டைகளையும் கணினிகளுடன் இணைத்துக் கொள்கின்றனர்.
அதிகளவு, கம்பியில்லா இணைப்பு முறையானது ஒருங்கிணைக்கப்பட்ட வாங்கிகளாக , மிக சிறிய அளவில் கணினிகளில் உள்ளீடாக செருகிகளின் மூலம் இணைக்கப் பட்டுள்ளது.
இந்த கம்பியில்லா சுட்டி முறையில் 2 .4 ஜிகா ஹெட்ஸ் அளவிலான ரேடியோ அதிர்வெண்களை பயன்படுத்தி தகவல்களை அதிவேகத்துடன் திரைக்கு அனுப்புகிறனர் . அதோடு எந்த ஒரு இடையுறும் இல்லாத இடமாக சுற்று சூழல் இருக்க வேண்டும்.
இந்த தகவல் பரிமாற்றமானது மிக சிறப்பாக 100 மீட்டர் தூரம் வரை செயல்படக் கூடியது. இன்னொரு புதிய தொழில் நுட்பம், இந்த கம்பியில்லா சுட்டி முறையை
Blue tooth ரேடியோ அலைகள் தொழில்நுட்பத்திலும் \பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தொழில் நுட்பத்திலும் 2 .4
ஹெட்ஸ் அளவிலான ரேடியோ அதிர்வெண்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த Blue tooth முறை தகவல் பரிமாற்றமானது 2௦ - 3௦ மீட்டர் தூரம் வரை மட்டுமே தகவல்களை பரிமாற்றிக் கொள்ளக் கூடியது.
0 comments:
Post a Comment