'முக்கனியில் முதல் கனி' மாம்பழம். சுவை தான், அதன் மீதான ஆர்வத்திற்கு காரணம் என்பதால், சில வியாபாரிகள் செய்யும் தில்லு முல்லுக்கு எல்லையே இல்லை. முந்தைய காலங்களில் மாம்பழம் உண்டால், நாக்கு தித்திக்கும். தற்போது வரும் மாம்பழங்களை உண்டால், நாக்கு புண்ணாகிறது.
வெளித்தோற்றத்தில் பழத்தின் சாயல் இருக்கும், சுவைத்தால் சுண்ணாம்பு ருசி.
முன்னர் எத்தனாலை பயன்படுத்தி மாங்காய்களை பழுக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் , முந்தைய ஆண்டில் கார்பைடு கற்களை பயன்படுத்தி வந்தனர் . ஆனால் தற்போது
"கார்பைடு' கற்களை விட மலிவாக கிடைக்கும், திரவம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மூன்று லிட்டர் நீரில், 100 மி.லி., திரவத்தை சேர்த்தால், மூன்று டன் மாங்காய்களை, பழத்தின் தோற்றத்திற்கு கொண்டு வந்துவிடலாம். இது போன்ற பழங்களை வாங்கி உண்பதால், உடல் நலத்திற்கு பாதிப்பே.
ஒவ்வொரு ஆண்டும், மாம்பழம் சீசனின் போது, அதிகாரிகள்
"ரெய்டு' நடத்தி செயற்கை முறை பழங்களை அழிக்கின்றனர். அதன் பிறகும், "பழஉற்பத்தி' தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், மாம்பழம் சீசனின் போது, அதிகாரிகள்
"ரெய்டு' நடத்தி செயற்கை முறை பழங்களை அழிக்கின்றனர். அதன் பிறகும், "பழஉற்பத்தி' தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
செயற்கை மாம்பழங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
வெளித்தோற்றத்தை வைத்து கண்டுபிடிப்பது சிரமம் தான். கருப்பு நிற புள்ளிகள் இருந்தால், அவை செயற்கை முறையில் பழுக்க வைத்தவையாகும். அவற்றை தவிர்ப்பது நல்லது. மாம்பழம் சீசனுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதன் பின் பழங்கள் வாங்கினால் சந்தேகத்தை தவிர்க்கலாம். "சீசனுக்கு முன் பழம் எப்படி கிடைக்கும்,' என்பதை, மக்கள் சிந்திக்க வேண்டும்,
ஆகவே சீசன் தொடங்கி பத்து பதினைந்து நாட்களுக்குப் பின்னர் நீங்கள் மாம்பழம் சாப்பிட தொடங்குங்கள் அதுவரை வாயை கொஞ்சம் கட்டிக் கொள்ளுங்கள் முடிந்தவரை பழ மார்க்கெட் பக்கம் செல்லாமல் இருங்கள்.
0 comments:
Post a Comment