Find us on Google+ மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா ! ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 8 March 2012

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா !


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திரும் ஈசன்
மண்ணுக்குள்ளே  சில மூடர் நல்
மாதர் அறிவை கெடுத்தார்."

"இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்" என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன. மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள்திகழ் கின்றனர். "உடல்வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்"  என்பதை பெண்கள் சாதித்து கொண்டிருகின்றனர் .

ஒரு பக்கம் பெண்கள் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கமோ பிறரால் தூற்றப் பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.

பெண்களை கொடி என்கிறீர்கள்
ஏன் காற்றில் வீழ்ந்து ஒடிவதர்கா ?

பெண்களை நிலவு என்கிறீர்கள்
ஏன் நடந்து நடந்து தெய்வதர்கா ?

பெண்களை கிளி என்கிறீர்கள்
ஏன் ஆண்கள் சொல்வதை திருப்பி சொல்வதற்கா?

பெண்களை தெய்வம் என்கிறீர்கள்
ஏன் சூடம் காட்டி அணைப்பதற்கா?


இன்றைய நிலையில் ஆட்டோக்களில் கூட  " பெண்புத்தி பின்புத்தி"   ,  "சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே " என்ற வசனங்கள் மனதை உருக்குலைய வைக்கிறது.


இருபத்து நூற்றாண்டு பெண்கள் முன்னேறுகிறார்களா இல்லை பின்னேறுகிரார்களா ?
பெண்கள் முன்னேற்றமடைந்தாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து விடும் என்கின்றனர் குற்றவியல் வல்லுனர்கள். பல வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பல வடிவங்கள

எப்படி தடுப்பது ?
பெண்கள் மீதான வன்முறையை முற்றிலுமாக தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு பல்வேறு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். இதற்கு அதிகார மையங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் இது சாத்தியம். ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் பெண்களுக்கு பார்லிமென்ட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு 49 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்காவிட்டாலும், பார்லிமென்ட் உறுப்பினர்களில் 37 சதவீதத்தினர் பெண்கள். இந்நிலை நம்நாட்டிலும் வர வேண்டும்.

ஆனால் நம் தமிழகத்தில் தற்போது பார்லிமென்டிலும், மத்திய அமைச்சரவையிலும் ஏறத்தாழ 10 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாக உள்ளனர். நாட்டில் ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் நான்கு மாநிலத்தில் முதல்வராக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக இது நிறைவேறாத கனவாகவே உள்ளது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த உரிமையை சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியதாகவே உள்ளது.


1 comments:

Nalla Pathivu...Thozhi...Keep it Up........

Post a Comment