Find us on Google+ நூலகங்களுக்கும் மூன்றாண்டு உறக்கம் தேவையா ? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday 5 March 2012

நூலகங்களுக்கும் மூன்றாண்டு உறக்கம் தேவையா ?


இணையத்திலே முழ்கிக்  கிடக்கும் நம் இளைஞர்களுக்கு புத்தகத்தை புரட்டிப் பார்க்க நேரமிராது என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர் . இன்று எத்தனையோ இளைஞர்கள் பல கவிஞர்களின்  பெயர்களை புனைப் பெயர்களாகவும் அவர்களது வழியை பின்பற்றியும்  சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாத அவந்தியில் உள்ளனர். இதன் விளைவாகத் தான் நூலகங்களை
கண்டு கொள்ளாமல் மூன்றாண்டு உறங்க விட்டு விட்டனர் போல!!.

நூலக வரியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வரை நூலக வரி செலுத்துகின்றன. மாவட்ட, கிளை மற்றும் கிராம நூலகங்களின் பராமரிப்பு, ஊழியர் சம்பளம் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு, நூலக வரி தொகை பயன்படுகிறது. இந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 450 கோடி ரூபாயை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தியும், நூலகங்களுக்கு ஒரு புத்தகத்தைக் கூட வாங்காத அவல நிலை உள்ளது.

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க தனி கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், நூலக சங்க செயலர் பல்கலை மற்றும் கல்லூரி நூலகர்கள் உறுப்பினர்கள். இவர்களோடு, பொதுநூலகத் துறை இயக்குனகரம் ஆலோசித்து, நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வாங்கும் புத்தகங்களை முடிவு செய்வர். கடந்த 2009க்கு பின், மூன்றாண்டுகளாக நூலகங்களுக்கு ஒரு புத்தகம் கூட வாங்கப்படாதது குறித்து, நூலக சங்க செயலர், எம்.முத்துசாமி கூறுகையில், ""நூலகத் துறை இயக்குனரகத்துக்கு பல கோரிக்கைகள் விடுத்தும் பலனில்லை. நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம், பதிப்பாளர்களுக்கு கிடைத்து வந்த வருமானம் தடை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாண்டுகளில், 450 கோடி ரூபாய் நூலக வரி செலுத்தப்பட்டு உள்ளது. அது அனைத்தையும் முடக்கியே வைத்துள்ளனர்'' என்றார்.

பொதுநூலகத் துறைக்கு, ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாயை புத்தகங்கள் வாங்குவதற்காக, மத்திய அரசு அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில், இந்த தொகையும் முடங்கி கிடக்கிறது. இதுபற்றி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலர், வைரவன் கூறும்போது, ""புதிய நூல்கள் கிடைப்பதில்லை என்பது நூலகம் சென்று வாசிப்பவர்களுக்கு பெரும் நஷ்டமே. மாவட்ட அளவிலும், கிராமங்களிலும் தனியாக புத்தகம் வாங்கி வாசிப்பவர்களை விட, நூலகம் சென்று வாசிப்பவர்களே மிக அதிகம்'' என்றார். மேலும், ""கடந்து மூன்றாண்டுகளாக புத்தகங்களை ஏன் வாங்கவில்லை என்பதற்கு, நூலகத் துறை காரணங்களைக் கூறவில்லை. புத்தக விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் நூலக இயக்குனரகத்தை பல முறை அணுகியும் பலனில்லை'' என்றார்.

  "எதில் எல்லாமோ ஊழல் நடந்து வருகிறது என்று பார்த்தால் தற்போது அறிவை புகட்டும் புத்தகங்களின் வீடான நுலகங்கலிலும் ஊழலா???"
என்பது தான் தாங்கிக் கொள்ள முடியாத விசயமாக  உள்ளது.

5 comments:

good article. keep posting

அடடா இதிலும் கூடவா ஊழல்! மனம் பதைக்கிறதே! அய்யா இதிலுமா ஊழல்? வேதனை. "தம்பி எரிதழல் கொண்டு வா! கதிரை வைத்திழந்தான் கையை எரித்திடுவோம்" என்று பாஞ்சாலி சபதத்தில் நம் பாரதி கூறினானே அந்த வரிகள்தான் ஞாபகம் வருகிறது. கோபம் கொப்பளிக்கிறது. அருமையான பகிர்வு. நன்றி !

கருத்துரை இடும்போது Word Verification கேட்கிறது. அதை நீக்கிவிடுங்கள் சகோ. அப்போதுதான் எளிதாக கருத்துரையிட முடியும். நிறைய நண்பர்களும் வருவார்கள். நன்றி!

@துரைடேனியல்

நன்றி சகோ ...என்னை ஊக்கபடுத்தியதற்க்கு ...Word verification யை நீக்கி விடுகிறேன்...

@மேகா

Thanks...For your Feedback...

Post a Comment