Find us on Google+ நேரமே எனக்காக கொஞ்சம் காத்திரு ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Wednesday 16 November 2011

நேரமே எனக்காக கொஞ்சம் காத்திரு

நம் அனைவரிடமும் நிச்சயம் நேரம் தவறாமை இருக்க வேண்டும். எப்படி நாம் நேரத்தை வீணாக்காமல் உபயோகப் படுத்தமுடியும் என்றால் அது நிச்சயம் உண்டு. நம்மில் பெரும்பாலானோருக்கு வகுப்பறையில் இருக்கும் போது அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்க்கும் பழக்கம் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு, எப்படா இந்த பாடவேளை முடியும் ரெம்ப பிளேடா இருக்கு என்று நினைத்து அடிக்கடி நேரம் பார்ப்பார்கள் சிலர்.  

    இன்னும் சிலர் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்க்கும் பழக்கம் வைத்திருப்பர். மிகச் சிலர் மட்டும் கைக்கடிகாரம் பயன்படுத்தாமல் தேர்வு எழுதுவார்கள், கைக்கடிகாரம் பயன்படுத்தாமல் தேர்வு எழுதும் சிலர் தேர்வு நேரம் முடிந்தும் விடாமல் எழுதிக் கொண்டிருப்பர், ஒரு பாதியை எழுதாமலே திருப்பி தருபவர்களும் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்ன என்று பார்த்தால் அவர்களுக்கு நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்த கைக்கடிகாரம் இல்லை. நிச்சயமாக நாம் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்றால்

    நாம் பார்க்கும் இடமெல்லாம் நாம் கடிகாரங்களை பயன்படுத்தலாம். நம் வீட்டில் அனைத்து அறைகளிலும் அழகான வரைபடங்களை மாட்டி வைப்பதை விட, அழகான சுவர் கடிகாரங்களை மாட்டி வைத்தால் நாம் காலம் தவறாமல் நம் வேலையை நேர்த்தியாக செய்ய முடியும். அடிக்கடி சுவர்கடிகாரங்களை பார்ப்பதால் நாம் நேரத்தை நேர்த்தியாக உபயோகப் படுத்த கற்றுக் கொள்ள முடிகிறது.  

    நேரத்தின் அருமையை பற்றி நாம் பல கவிதைகளைப் படித்திருப்போம். அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    "ஒரு நிமிடத்தின் அருமையை இரயிலை விட்ட பயணியிடம் கேட்டு பார் ஒரு மணி நேரத்தின் அருமையை காதலிக்காக காத்திருக்கும் காதலனிடம் கேட்டுப் பார். பத்து மாத்தின் அருமையை குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் கேட்டு பார்."

    உங்களுக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று நினைப்பவரா நீங்கள் .... இந்த முயற்சியை மேற்கொண்டு பாருங்களேன். இனிமேல் உங்களுக்கு நேரமின்மை என்ற பற்றாக்குறையே வராது. நீங்கள் பிறருக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் போது கடிகாரங்களையும் அதனால் நேரமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என இரு வரிகளையும் இணைத்துக் கொடுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களும் காலம் தவறாமையை மேற்கொண்டால் அவர்களைச் சில விசயங்களுக்காகச் சார்ந்திருக்கும் உங்களுக்கும் காலம் தவறாமை இன்றி வேலை நடந்து விடும்.




0 comments:

Post a Comment