Find us on Google+ பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசமா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday 28 November 2011

பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசமா?



பஞ்சத்தில் அடிபட்டு கிடக்கும் பாமர மக்கள் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரங்களில் பூக்கடை நடத்தி வந்தால் அவர்களிடம் போயி பேரம் பேசி விலையை குறைக்க வைத்து பூவை வாங்கி வைப்பதில் நம்ம ஊர் காரர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோசம். இதை பெருமையாக வேற எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது.

இதோடு மட்டுமா தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்களோ அல்லது பிளாஸ்டிக் பொருள் விற்பவர்களோ வந்து விட்டால் போதும் அந்த தெருவில் உள்ள எல்லா பெரியவர்களும் தள்ளுவண்டியை சுற்றி கூடிக் கொண்டு அசலை விட குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி விடுவர். அதில் அந்த தெருக்காரர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோசம்.


ஆனால் இறுதியில் அந்த கூலித் தொழிலாளியின் நிலை என்ன?  அனைத்தையும் விற்று விட்டு கணக்கு பார்த்தால் அசல் கூட மிஞ்சாது. அவருடைய உழைப்பு எல்லாம் வீணாகி போயிற்று தானே கடும் வெயில், மழை பாராது தள்ளுவண்டியை தள்ளி நடந்தே பிளைப்பு நடத்தும் மக்களிடம் நாம் இது போன்று பேரம் பேசலாமா?      சிந்தித்து பாருங்கள்..........

ஒரு பெரிய ஏழு மாடி அங்காடிக்கு போகிறோம் அங்கே மட்டும் பேரம் பேசாமல் நாம் சொன்ன விலைக்கு சில்லரையுடன் சேர்த்து கொடுத்து விட்டு வந்து விடுகிறோம். பணக்காரரை மென்மேலும் வளர வைக்கும் நாம், ஏன் கூலித் தொழிலாளிகளின் லாபத்தை மட்டும் பறித்துக் கொள்ள வேண்டும்???........  


இனிமேலாவது கூலித்தொழிலாளர்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் பேரம் பேசாமல் அவர்களுக்கு லாபம் ஈட்டித் தருவோம்.........   

0 comments:

Post a Comment