Find us on Google+ நாம் நினைக்கும் கற்பனை உலகம் எப்படிப் பட்டது ? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Wednesday 9 November 2011

நாம் நினைக்கும் கற்பனை உலகம் எப்படிப் பட்டது ?

   நமக்குள் ஏற்படும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளுள் ஒன்று மொழி. இந்த உலகில் எத்தனை நாடுகள் உள்ளன அதிலும் எத்தனை மொழிகள் ஆண்டு கொண்டிருக்கின்றன. ஒரே மனித இனத்தை படைத்துள்ள இந்த கடவுள் ஒற்றுமையில், வேற்றுமையாய் ஏன் மொழிகளை உருவாக்கினார்.
     மொழிகள் மட்டும் இந்த உலகில் ஒன்றாய் இருந்திருந்தால் நாம் அனைவரும் நன்றாய் இருந்திருப்போம். வேறு மாநிலங்களுக்குச் சென்றாலே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளியைப் போல பேச முடியாமல் தவிக்கும் நாம் எப்படி வேறு நாடுகளுடன் சுமூகமாக உறவை மேற்கொள்ள முடியும்.
     மொழி பிரச்சனையால் இன்று எத்தனையோ அறிவாளிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்க்கொண்டு இருக்கின்றனர்.
      ஒரு கற்பனை உலகில் நான் வாழ்ந்து பார்த்தேன்................................................   இந்த உலகத்தில் அனைவரும் அறிந்த மொழி ஒன்று என்றால் எப்படி அமைந்திருக்கும் இந்த உலகம்?
      நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் முற்றிலும் மறைந்திருக்கும்.... எத்தனையோ சாதனையாளர்கள் இந்த உலகத்தில் சாதனை புரிந்திருப்பர். அன்பும் பண்பும் எல்லோரிடமும் பெருகிக் கொண்டே போயிருக்கும்...  நமது ஊர் நமது மாநிலம் என்ற எண்ணங்களை மறந்து நமது தேசம் நமது உலகம் என்ற பரந்து விரிந்த எண்ணம் அனைவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும்...........



3 comments:

மொழி மட்டுமே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதில்லையே....

தமிழ்நாட்டில் மட்டுமே இப்படியான பிரச்சனை நடக்குது. ஆந்திராவில் இரண்டாம் பாடம் ஹிந்தி தான். எங்கே போனாலும் எளிமையாய் மக்களுடன் கலந்துவிடுகிறார்கள். நாம் தான் ஹிந்தியை விரோதி மொழியாக்கிவிட்டோம்...

எல்லாருக்கும் ஒரே மொழி என்றால் எங்கும் கவலையில்லாமல் வியாபாரமோ, சுற்றுலாவோ , வெளிநாடுகளில் வாழ்க்கை என மகிழ்ச்சியாக எந்தவித தொந்திரவும் இல்லாமல் இருக்கலாம் இல்லையா

நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்

நன்றி...உங்கள் கருத்துக்கு....

Its not possible for this world. But only we can do dream world JP. I'm really appreciate your dream world JP.


Thanks & Regards,

Isai Selvan S

Post a Comment