Find us on Google+ ரெயின் ரெயின் கோ அவே ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Wednesday 30 November 2011

ரெயின் ரெயின் கோ அவே


மழை வந்தாலும் வந்துச்சு எப்படா மழை நிக்கும்னு தோனுதுல.....  மழையே வா வா-ன்னு  கூப்பிட்டு கழுதைக்கு கல்யாணம் பன்னி வச்சாலும் மழை வராது. ஆனால் இந்த ஆண்டு என்னவோ ஊத்து மழை கொட்டுது. எப்படியோ ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மறு பக்கம் நல்ல விளைச்சல் கிடைத்தால் போதும்.

    ஆனால் மழை இல்லாமல் நாம் எவ்வளவோ நாள் கஷ்டப்பட்டிருக்கிறோம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் மழை இல்லாமல் பஞ்சத்தில் அடிபட்ட காலங்கள் எல்லாம் இருந்தன. ஆகவே தற்போது வர்ணபகவான் நமக்கு அருள் பாலித்ததாக நினைத்து மழையை அன்போடு ஏற்றுக் கொள்வோம்.


    ஆங்கில நாட்டில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருப்பதால் இவர்கள் "ரெயின் ரெயின் கோ அவே" என்ற பாடலை பாடினர். ஆனால் நமது மெட்ரிக் குழந்தைகளிடம் பாட்டு பாட சொன்னால் முதல் பாடலாக ரெயின் ரெயின் கோ அவே தான் பாடுகின்றனர். வராத மழையே இப்பத்தான் வந்திருக்கும் அதற்குள் சின்ன குழந்தைகள் ரெயின் ரெயின் கோ அவே பாடலைப் பாடி வருகிற மழையையும் கலைத்துக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளின் பாடல் சத்தம் கேட்ட வர்ணபகவான் மழையை மூட்டை கட்டிக்கொண்டு போய் விடுகிறான்.


    அதற்கு அடுத்தபடியாக கருப்புக் குடை காட்டி மழைக்கு எதிராய் கருப்புக் கொடி பிடிப்பதைப் போன்று வர்ணபகவானையே பயமுறுத்துகிறோம். இயற்கையின் நிகழ்வுகள் எல்லாமே நாம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை தான். இயற்கையின் போக்கிற்கு நாம் ஒத்துழைத்து வாழ்ந்தால் எந்த அழிவுகளும் நேராது.



1 comments:

அமைச்சருக்கு
எதிராக கருப்புக் கொடி
ஏந்திய கரங்கள்...
பழக்கதோஷத்தில்
மழைக்கு எதிராகவும்
கருப்பு கொடி
குடை!

Post a Comment