ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வாசகத்தை படித்து பார்த்தால் மட்டும் போதுமா அதை பாலோ-வும் பண்ண வேண்டும் அல்லவா? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வாசகத்தை படைத்த நாமே எயிட்ஸ் நோயில் முதலிடம் வகிப்பது நியாயமா? கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக முழைத்தது தான் எயிட்ஸ் நோய்.
இதிகாசங்களில் ஒருவருக்கு 1000 மனைவி என்று பள்ளிகளில் ஆசிரியர் பாடம் நடத்தினால் அவருக்கு எயிட்ஸ் நோய் வரவில்லையா என மாணவர்கள் வேடிக்கையாக கேட்பார்கள் .. உண்மை தான் அவர்களுக்கு கூட எயிட்ஸ் நோய் வரவில்லை. அவர்கள் ௦௦௦ மனைவியை மணந்ததோடு சரி வேறு செயல்களில் ஈடுபடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்தனர். மிருகம் படம் எடுத்தும் மக்கள் மத்தியில் எயிட்சின் தாக்கத்தை ஏற்படுத்திய போதும் அது பலரை சென்றடையாமலே மீண்டும் எயிட்சின் வேட்கை தொடங்கியதால் இந்த ஆண்டு சென்னையில் எயிட்ஸ் விழிப்புணர்வுக்க்கான குறும்பட போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் முதல் 5 குறும்படங்களை மக்கள் பார்வைக்கு விளம்பரங்களாக அறிமுகப்படுத்துவதாக உள்ளனர். இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
எயிட்ஸ் விழிப்புணர்வில் மக்களின் ஆர்வம் இந்த ஆண்டு அதிகமாகவே உள்ளது என்பது பாராட்டுதலுக்கு உரியதாகவே உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் ௧ம் தேதி உலக எயிட்ஸ் தினம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பெருமைக்குரியதாக உள்ளது.
வருங்கால சந்ததிகளிலும் இது போன்ற பிரச்சனையில் இருந்து மக்களை காப்பாற்ற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது பெருமிதமாக உள்ளது. வருங்காலம் வசந்தகாலமாக எயிட்ஸ் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டால் போதும்.
1 comments:
//கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக முழைத்தது தான் எயிட்ஸ் நோய்.//
1986 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் எச்.அய்.வி. தொற்று சென்னையில் கண்டறியப்பட்டது.
Post a Comment