படத்தின் கருப்பொருள் இரண்டு. இரண்டையும் ஒன்றாய் புகுத்த நினைத்த இயக்குனர் செல்வராகவனுக்கு இது ஒரு தலை குனிவு தான்.
முதல் கருத்து தனுசின் வாழ்க்கை குறிக்கோளான புகைப்படக் கலைஞர் தான். இறுதியில் மிக அசத்தலாக தனுசினை உயரத்தில் காமித்த இயக்குனர் செல்வராகவன், இரண்டாம் பகுதியில் கதையினை ஆடியென்சுக்கே பிடிக்காத நிலையில் இழுத்திருப்பது படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
இரண்டாவது கருத்தாக "லிவிங் டு கெதர்" முறையில் கதாநாயகியை அறிமுகப்படுத்தியதால் தான், கதாநாயகியை அறிந்து கொள்ளவே ஆடியன்சுக்கு மிகுந்த நேரம் ஆகி விட்டது. நண்பனுக்காக தன் காதலியை விட்டுக் கொடுத்த நண்பன் அவர்களின் கல்யாணத்திற்கு பின்னரும் இயல்பாக நடந்து கொள்வது நடைமுறைக்கு சாத்தியமானதாக அமையவில்லை.
அதோடு தனுசிற்கு மனநலம் குன்றிய சமயத்தில் இன்னொரு நண்பன்தவறான எண்ணத்தோடு கதாநாயகியிடம் பேசுவது பார்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் படியாக உள்ளது. ஆண் சமூகத்தையே தவறான எண்ணத்துடன் காட்ட முயற்சித்ததைப் போன்று உள்ளது. அதோடு பளிச்சென்று சில காட்சிகளை வெளிப்படையாக காமித்திருந்தது பார்வையாளர்களை தலை குனிய வைக்கிறது.
இயக்குனர் செல்வராகவன் சொல்ல வந்த கருத்து சூப்பர். ஆனால் சொல்ல வந்த விதம் தான் சற்று கோணலாகி விட்டது. தனுஸ் தன் வாழ்க்கை குறிக்கோளாக நினைத்த புகைப்பட கலைஞராக வர முடியாததால் அதன் நினைவாகவே மன நோய்க்கு உட்பட்டு மீண்டும் தன் மனைவி மூலம் உயர்ந்த நிலையை அடையும் படியாக காட்டப்பட்ட காட்சிகள் மிகுந்த அருமை. ஒரு நல்ல மனைவியின் குணநலத்தையும், தன் இலட்சியத்தை அடையும் வரை அதையே நினைத்துக் கொண்டிருந்த தனுஸின் கதாபாத்திரத்தையும் காமித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்..........
4 comments:
உங்களைப் போன்ற ரசிகர்களுக்கென்றே குருவி, வில்லு வரிசையில் தற்போது ஒஸ்தியும் வந்துள்ளது.
பார்த்து ரசித்து சந்தோஷமாயிருங்கள்.
"மயக்கம் என்ன" போன்ற வித்தியாசமான, தரமான படைப்புகளை சீண்டாமல் இருக்க வேண்டுகிறேன்.
உங்கள் கோணத்தில் விமர்சனம் அருமை. செல்வராகவனின் படங்களில் பொதுவாக சில உண்மைகள் பட்டவர்த்தனமாக இருக்கும். இதைத் தவிர்க்க முயற்சிக்கலாம் அல்லது நாசுக்காக சொல்லலாம். குடும்பத்தோடு பார்ப்பவர்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும்.
@ விச்சு
நன்றி உங்கள் கருத்துக்கு....உங்கள் வருகைக்கும்...
@Malarvanna
உங்களுக்கு விஜய் யை பிடிக்காத என்ன?
Post a Comment