Find us on Google+ உங்களுக்கு எந்த நாட்டில் பிறக்க ஆசை? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday 3 December 2011

உங்களுக்கு எந்த நாட்டில் பிறக்க ஆசை?


           ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும் நாம் இந்த நாட்டில் பிறந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அந்த நாட்டில் பிறந்து இருந்தால் நன்றாக வாழ்ந்திருக்கலாம் என நினைப்பர். 


           அனைவருக்குள்ளும் இருக்கும் சில எதிர்பார்ப்புகளுள் வறுமையில்லா நாடாகவும், இயற்கை எழில் கொழிக்கும் நாடாகவும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படியான நாடாகவும் அனைத்து பொருளாதாரத் தேவைகளும் நிறைந்த நாடாகவும் விலை பொருட்கள் குறைந்த  விலையாகவும் இருக்க வேண்டும் என நினைப்போம்.


           இந்த அனைத்து தகுதிகளுமுடைய ஒரே நாடாக விளங்குகிறது ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா. இங்கே 100 கி.மீ தொலைவை ஒரு ரூபாய் பயணக் கட்டணத்தில் பயணம் செய்கிறார்களாம். அப்படி இருந்தால் நம்ம ஊர் காரர்கள் எல்லாம் பேருந்தே கதி என தானே கிடப்போம். ஆனால் ஆஸ்திரிய நாட்டில் எப்போதும் பாதி பேருந்துகள் காலியான நிலையிலே தான் செல்லும்.


           இதற்கு அடுத்த படியாக சுவிட்சர்லாந்து, நியூஸிலாண்ட், ஜெர்மன் போன்ற நாடுகள் இடம் பிடிக்கின்றன. அனைவராலும் கவரப்பட்ட சிங்கப்பூரே 25 வது இடத்தில் தான் உள்ளது என மெர்கர் நிறுவனம் கண்டறிந்துள்ளது.


           இதே போல யாராலும் விருப்பப்படாத நாடுகளுள் ஒன்றாக ஈரான் விளங்குகிறது. நாம் விரும்பும் நாடு எதுவாக இருந்தாலும் சரி நாம் நினைத்த சொர்க்க பூமியாக நாம் இருக்கும் இடத்தை மாற்ற கற்றுக் கொண்டு விட்டால் ஆசை மிகுந்த உலகத்தில் மிக சுவாரஸ்யமாக வாழலாம்.


2 comments:

நாம் விரும்பும் நாடு எதுவாக இருந்தாலும் சரி நாம் நினைத்த சொர்க்க பூமியாக நாம் இருக்கும் இடத்தை மாற்ற கற்றுக் கொண்டு விட்டால் ஆசை மிகுந்த உலகத்தில் மிக சுவாரஸ்யமாக வாழலாம்.

Post a Comment