Find us on Google+ பகவத் கீதைக்கே பங்கமா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday, 22 December 2011

பகவத் கீதைக்கே பங்கமா?


இந்துக்கள் எத்தனை பேர் வீட்டில் பகவத் கீதை வைத்துள்ளனர்? கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கூட பகவத் கீதையை படிப்பதில்லையே ஏன்?

முஸ்லீம்களும் கிறித்தவர்களும் கடவுளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களின் மத நூலான பைபுளுக்கும்,குர்-ஆனுக்கும் கொடுக்கின்றனர். ஆனால் முக்குக்கு முக்கு கோவில் கட்டி பக்தியினை வெளிப்படுத்தும் இந்துக்கள் மட்டும் ஏன் மத நூல்களை மதிக்க தவறுகிறோம்?

சென்னையிலே ரெங்கனாதன் தெருவினிலே கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள் என்ன வென்று பார்த்தால் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை தான்..... அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோத ஒரு ஈ,காக்கா கூட இல்லாத வெறிச்சோடி நிலையில் இந்த கடை மட்டும் காட்சி அளித்தது.

எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்து மதம்? பகவத் கீதை வெறும் மத உரை அல்ல.அது இந்தியர்களின் சிந்தனை பற்றிய ஆய்வுத் தொகுப்பு. நமது மாபெரும் நாகரீகத்தின் ஆன்மாவை விளக்கக் கூடியது. இவ்வளவு விலை மதிப்பற்ற புனித நூலை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி இருக்கப் போய் தான், இன்று ரஷ்யா நமது பகவத் கீதை தீவிரவாத செயலை ஊபதேசிக்கிறது எனவே அடியோடு பகவத் கீதையை ஒழிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இன்று புனித நூலை நம்மிடம் இருந்து பிரிக்கும் ரஷ்யாவுக்கு நம் இந்து மதத்தையே அழிக்க எவ்வளவு நாள் ஆகும்? விழித்துக் கொள்ளுங்கள்..

5 comments:

இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்!
http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_21.html

entire THIRUPPATHI revenue can be made useful to print GEETHA,and distribute for free........!!!

ஹிந்து எனும் வார்த்தை சமஸ்கிருதமோ, அல்லது திராவிட மொழியிலோ, என எந்த இந்திய மொழியையும் சார்ந்து உருவானதல்ல. பாரதம் என்பதே இந்திய மொழியில் இந்திய துணைக்கண்டத்தை குறிக்க சொல்லப் பட்ட வார்த்தை. 17ஆம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்று நூல்களிலோ, அல்லது இந்திய குறிப்புகளிலோ, ஹிந்து எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லை. ஹிந்து எனும் வார்த்தை பொதுப்படையாக இந்தியாவில் வாழும் மக்களை குறிக்கவே பயன்படுத்தப் பட்டாலும், குறிப்பாக மதம் குலம் சார்ந்த வார்த்தையாக மாற்றப்பட்டது ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் தான்.

ஹிந்து எனும் சொல்லாடல் வேதத்தை பின்பற்றும் உயர்சாதி பிராமணர்களை குறிப்பாக உணர்த்த 1830களில் ஹிந்துயிஸம் என திரிபு பெற்றது.

ஆதாரம்:
1. The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd. ISBN 1-4051-3251-5.
2. Radhakrishnan, S.;Moore, CA (1967). A Sourcebook in Indian Philosophy. Princeton. ISBN 0-691-01958-4.
3. Tattwananda, Swami (1984). Vaisnava Sects, Saiva Sects, Mother Worship. Calcutta: Firma KLM Private Ltd.. First revised edition.

எத்தனை காலமாக நாம் இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றோம்?

நூறு கோடி இந்துக்களுக்கு முப்பத்து மூன்று கோடி தேவர்கள் தெய்வமாக இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் ஏன் இந்துக்களின் கஷ்டங்களை நீக்க முன்வரக்கூடாது?

இந்தியாவில் மிகப் பெரும்பாலான மக்களாயிருக்கும் இந்துக்கள் ஒற்றுமையாயிருந்தால், வேற்று நாட்டினர் இந்தியாவைப் பிடித்து அரசாண்டிருக்க முடியுமா?

இவ்வித ஒற்றுமை இந்துக்களுக்குள் ஏற்படாமல் போனதற்குக் காரணம் இந்துமதத்தில் உள்ள சாதி வேற்றுமையல்லவா?

இந்துமதம் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?

இந்து மதத்திற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் வேதம் என்று சொல்லுவீர்களானாலும், அந்த வேதத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

பிராமணரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வேதத்தைப் படிக்கவாவது உரிமையுண்டா?

முஸ்லிம் மத வேதமாகிய குரானை இன்னார் தான் படிக்கலாம்; இன்னார் படிக்கக் கூடாது என்று அம் மதத்தில் இருக்கிறதா?

எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய வேதத்தைப் படிக்க உரிமையிருக்கிறதே! அதுபோல, இந்து மதத்தில் ஏன் இல்லை?

கிறிஸ்தவ வேதமாகிய பைபிளைப் படிக்காத கிறிஸ்தவர்கள் உண்டா? எல்லாக் கிறிஸ்தவர்களும் தாராளமாகப் படிக்கிறார்களே. ஆனால், இந்துமதத்தில் ஏன் பார்ப்பனர்கள் மாத்திரம் வேதங்களைப் படிக்கலாம்?

மற்றவர்கள் படிக்கவும் கூடாது; படிப்பதைக் கேட்கவும் கூடாது; படித்தால் நாவையறுக்க வேண்டும்; படித்ததைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று ஏன் கட்டளையிடப்பட்டிருக்கிறது?

இதனால் இந்து மதம் என்பது பார்ப்பன மதம் அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏற்பட்ட மதம் என்பது தெரியவில்லையா?

Post a Comment