அரசாங்க வேலை பார்த்துக் கொண்டும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டும் இலவசத்திலே இலாக்காக்களை வாங்கி போடுபவர்களுக்கு நமது அரசு தற்போது தான் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளது.
அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்காக இலவசமாக தரப்பட்ட வீடுகளையும் வைத்துக் கொண்டு அவர்கள் வசதிக் கேற்ப வீடுகளை வாங்கி கொண்டு உள்ள பலபேர்கள் இன்று தஊண்டில் மீனாய் பிடிபட்டனர். கோவையில் மட்டும் 1642 பேர் இந்த மோசடி வழக்கில் மாட்டி உள்ளனர். கோவியில் மட்டுமே இப்படி என்றால் மொத்த தமிழகத்திலும் கணக்குப் போட்டு பார்த்தால் .... எத்தனை இலட்சங்களைத் தாண்டுமோ தெரியவில்லை?
சிலர் ஒன்றுக்கு நான்கு வீடு வைத்துக் கொண்டு இருக்க இன்னும் சிலர் குடிசைக்கே வழியில்லாமல் தெருவூரங்களில் வாழ்வாதா? என்ன ஏற்றத்தாழ்வு இந்த சமூகத்தில் ?
இவர்களை எத்தனை "அண்ணா ஹசாரே" வந்தாலும் திருத்த முடியாது போல? "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தானே? "
அரசாங்க சொத்தை அழித்து இவர்களெல்லாம் நமது நாட்டை மேலும் ஏழை நாடாகவே மாற்றுகின்றனர்.
1 comments:
நல்ல தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
Post a Comment