அமைச்சர்கள் மாற்றம் ,ஐஏஎஸ் அதிகாரிகள் சுழற்றியடிப்பு ..இந்த
ம்யூசிக்கல் சேர் விளையாட்டுக்கு இடையே சற்று ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை
வெளியிட்டுள்ளார் முதல்வர்.இனி ஆண்டு தோறும் கல்லூரி மானவர்களுக்கு
மென்பொருள் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.மின் ஆளுமையை தமிழகத்தில்
ஆழமாக வேறுன்றச் செய்யவும் ,தகவல் தொழில் நுட்பத்தில் தமிழக இளைஞர்களின்
திறனை ஊக்குவிக்கவும் இந்த விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த
முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.ஆனால் அது உண்மையான ,நேர்மையான,மதிப்பு
மிக்க வெற்றியாக வேண்டுமென்றால் சில முடிவுகளை தமிழக அரசு மேற்கொண்டேயாக
வேண்டும்.தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் தொழில் நுட்பம் சார்ந்த
மென்பொருள் உருவாக்கம்,மாற்றுத திறனாளிகளுக்கு பயனளிக்கும் தொழில்
நுட்பங்கள் உருவாக்கம் ,நரம்பியல் வலை யமைப்பைக் கொண்ட தொழில் நுட்ப
உருவாக்கம் ஆகிய பிரிவுகளில் கல்லூரி மானவர்களுக்கு போட்டி
நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளுக்கு ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த தமிழக
அரசு மாணவர்களை வலியுறுத்த வேண்டும்.காரணம் மாணவர்கள் உருவாக்கப்போகும்
மென்பொருள் சுதந்திரமாகவும் ,எந்த ஒரு ஐடி வியாபாரிகள் தலையீடும்
இல்லாமல் இருக்க வேண்டும்.இல்லையேல் மானவர்களின் உழைப்பால் உருவாகும்
தொழில் நுட்பங்களுக்கு நாங்கள் தான் முதுகெலும்பு என்று அந்த நிறுவனங்கள்
கொக்கரித்து ,தங்கள் ஆதிக்க வலையை விரிக்க தொடங்கி விடும்.
அடுத்து ,அமைச்சர்கள் உள்பட தகவல் தொழில் நுட்ப அறிவு அறவே அற்றவர்களின்
பார்வை கூட தேர்வு குழுவில் பட விடக்கூடாது.தகவல் தொழில் நுட்ப
நிபுணர்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தை தமிழகத்தில்
பரவச் செய்யும் மேற்கொள்ளும் தொழில் நுட்ப செய்தியாளர்கள் அறிஞர்களையும்
தேர்வுக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இதை எல்லாம் செய்தல் தான் அரசின் அறிவிப்பு முழுமை பெறும்,செழுமை பெறும்
! ! இல்லையேல் ,பத்தோடு பதினொன்று தான்! ! !.
0 comments:
Post a Comment