தமிழன் தேசப் பற்று ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!
பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
... ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!
எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...!
மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன் எல்லைதாண்டி போகிறான் என்றான்...!
முல்லை பெரியாறு பிரச்சனை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர் வருவதில்லை என்றான்...!
இதோ இன்று...!
சபரி மலையில் ...தமிழர்கள் தாக்கப்பட்டனர்..!அழைப்போம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரமாட்டான் ...!
ஏன் என்று கேட்டால் ...யார் அவர்களை கேரள கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!
ஆனால்.......!
இந்திய -மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் ..
எவனும் அழைக்க வில்லை...!
வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..!
ஏன் என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...!
அடேய் ..!
தமிழா வாழ்க உனது தேசப் பற்று..!
2 comments:
Nalla Pathivu.....Thanx.......
மிக அருமையான பதிவு..
விடுதலைப்புலிகளுக்காக தற்கொலை செய்யும் ஒவ்வொரு கோழைகளுக்கும், விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்த பணத்தை நிதிவுதவி செய்துவரும், வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற பயங்கரவாதிகள் தமிழன்கள் இல்லை, தமிழ் வியாபாரிகள் என்று பச்சையாக சொல்லி இருக்கிறீர்கள்..
எல்லை தாண்டும் மீனவனுக்காக குரல் கொடுப்பவன் - தமிழன் அல்ல சுயநல கிருமி என்று பறை சாற்றி இருக்கிறீர்கள்
விடுதலைபுலிகளை தூக்கில் போடச்சொல்லும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் இங்குள்ள தேச துரோகிகள், முல்லைபெரியாறு விசயத்தில் மட்டும் சுப்ரீம் கோர்ட் விசாரணையை ஏற்றுக்கொள்ளும் கயமைத்தனத்தை நன்றாகவே அறிந்து அந்த தேச துரோகிகள் தமிழன்கள் அல்ல என்பதை போட்டுடைத்து இருகிறீர்கள்
இந்தியாவில் அராஜகம் செய்த விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு - வால் பிடிக்கும் பயங்கரவாதிகள் தமிழன்கள் அல்ல தேச துரோகிகள் என்பதை ஒப்புக்கொண்ட உங்களுக்கு ஒரு சபாஷ்...
Post a Comment