தமிழகத்தில் தான் இந்துக்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாகவும் , முஸ்லீம்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாபர் மசூதி பிரச்சனைக்கு இன்னும் சரியான தீர்ப்பு கூட வழங்க முடியாமல் உள்ளது , மதங்களை மாறுவதிலும், மதப் பிரச்னையை உருவாக்கும் பதப்பிசாசுகலாய் நாம் ஏன் மாற வேண்டும். நம் நாட்டில் தான் இப்படி இருக்கே தவிர வேறு எங்குமே இப்படி இல்லை அதற்கு முன் உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் யாரேனும் இதை ஆதரித்து இருப்போமா? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ..... நமக்குள்ளே நாம் மதமெனும் கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நமை நாமே சிறையில் அடித்துக் கொள்கிறோம்.
இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது. இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் இந்த கோயில் பணிகள் குறித்து கூறுகையில், இப்படி ஒரு கோயில் உருவாவது இந்து மதத்திற்கு இதுஒரு சிறந்த மைல்கல் ஆகும். ஆன்மிகம் பரப்புவதில் சிறந்த பங்காற்றும். இந்த பகுதியில் உள்ள திரை நட்சத்திரங்கள், பாடகர்கள், பேசன் டிசைனர் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து முன்னேறி இருக்கிறது என்றால் அவர்கள் நாட்டின் வளர்ச்சியை மட்டுமல்லவா பார்க்கிறார்கள்,
ஆனால் நமக்கு தேவை "மனித உரிமைகள் இல்லையே, மதங்கள் தானே" இப்படி இருக்கையில் எப்படி நாம் முன்னுக்கு வருவது?
1 comments:
இங்கிலாந்தில் பல இந்துக் கோவில்கள் ஏற்கனவே தேவாலயங்கள் இருந்தவையே! ஈஸ்ற்காம் முருகன் கோவில், ஹய்கேற் முருகன் கோவில் இன்னும் பல.
வணக்கதலம் இன்னுமொரு வணக்கத் தலமாவது சிறப்பே!வணிக வளாகமாகவில்லையே!
இங்கிலாந்தில் தேவாலயங்கள் பல பக்தர்கள் இன்றி பாராமரிப்பதில் பொருளாதார நெருக்கடியை நோக்குகின்றன. அதனால் அதை கொடுத்து
விடுவதில் எந்த கெடுபிடியுமில்லை.
மேலும் வெளிநாடு சென்ற இந்துக்கள் எதை விட்டாலும், மதத்தை விடுவதாகவில்லை.
இதில் பக்தியை விட பணம் பார்க்கவும், பதவிசுக்கும் குறைவில்லையென்பதே முக்கியம்
Post a Comment