ஏட்டுக்கல்வி கறிக்குதவாத நிலையில் நாம் சமச்சீர் கல்வியை தேர்ந்தெடுத்தோம்.
குருகுல கல்வியில் இருந்து மாறி பள்ளிகல்விமுறையை நடைமுறைப்படுத்திவரும் நமக்கு அதிலும் பாகுபாடா?
தமிழ்நாட்டிலே பிறந்தும் தாய்நாட்டின் மொழியான தமிழை அவமதித்து ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.
அதன் விளைவு தான்! அனைத்து ஊராட்சிப்பள்ளிகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகின்றன.இன்னொருபுறம் நகராட்சிப்பள்ளிகளும் நளிவடைந்து கொண்டே தான் இருக்கின்றன.ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நேரத்தில் அனாதைகளாய் கைவிடப்பட்டவைகள் தான் ஊராட்சி பள்ளிக்கூடங்கள். ஊராட்சியில் படித்தவர் தான் இன்று மாவட்ட ஆட்சியாளராக பெரும்பாலும் உள்ளனர்,மாநகராட்சியில் படித்தவர் அலர்.
தமிழகத்தின் தென்கோடியான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்ணமங்குளம்
கிராமத்தில் சபரியார்புறம் என்ற பகுதியில் கிறித்தவர்கள் சபையின் ஆதரவின் கீழ் இயங்கிவரும் அரசாங்கத்தின் மூலம் சம்பளம் பெறும் பள்ளி அது.
தொடக்கப்பள்ளியின் இன்றைய நிலை....
இந்த ஆண்டு ஜீன் 15-ஆம் நாள் பள்ளி திறக்கப்பட்ட அன்று பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.ஜீன் 15-ஆம் நாள் 10 மணியளவில் பள்ளி திறக்கப்பட்ட நிலையில்
ஆசிரியரும்,தலைமை ஆசிரியரும் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.மணி பண்ணிரெண்டை கடந்து விட்டது ஒரு மாணவனும் பள்ளிக்கு வரவில்லை. 12.30 மணியளவில் ஒரு மாணவனும் அவனுடைய பெற்றோரும் பள்ளிக்குள் நுழைந்தனர்.அலை திரண்ட வெள்ளம் போல,இன்முறுவலோடு ஆசிரியரும்,தலைமைஆசிரியரும் அந்த மாணவனை அழைத்தனர்.
ஒரு மாணவனைக்கொண்டு இயங்க முடியாத நிலையில் ஒன்பது மாணவர்களை தத்தெடுத்துள்ளது அந்தப்பள்ளி.தற்போது பத்து மாணவர்களை கொண்டு இயங்கி வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கி வரும் ஊராட்சி தொடக்கப்பள்ளி அது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் கண்ணம்மங்குளம் ஊராட்சி பள்ளியைத்தான் தேர்ந்தெடுத்து படித்தனர்.அப்பேற்பட்ட பள்ளிக்கே இன்று இந்த நிலை.ஆரம்ப காலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு பிரிவுகளை கொண்டு இயங்கி வந்தது இந்தப்பள்ளி. அது படிப்படியாக குறைந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பிரிவாக மாறியது. சென்ற ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் இருவர்,இரண்டாம் வகுப்பில் மூவர்,மூன்றாம் வகுப்பில் இருவர்,நான்காம் வகுப்பில் ஒருவர் ஐந்தாம் வகுப்பில் மூவர் என்ற நிலையில் மொத்தத்தில் பதினோரு மாணவர்களை கொண்டு இயங்கி வந்த பள்ளியின்நிலை இந்த ஆண்டில் பத்து மாணவர்களுக்கு , ஒரு ஆசிரியர்,ஒரு தலைமை ஆசிரியர் என்ற நிலை மாறிவிட்டது.இந்த நிலை நீடித்தால் பள்ளியின் தரம் என்ன ஆவது ?
காமராசரால் தொடங்கப்பட்ட சத்துணவுத்திட்டமே இந்த பள்ளிக்கு இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் சத்துணவுக்கென அரசாங்கமே நிதி ஒதுக்கியுள்ள நிலையில் இந்தப் பள்ளிக்கு பத்து மாணவர்களுக்கு மட்டும் சமைக்க முடியாத அநாவசியத்தால் பக்கத்து கிராமத்து பள்ளிக்கூடத்திலிருந்து மதிய உணவு வரவழைக்கப்படுகிறது. என்ன கொடும சார் இது????
ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வாக்கினை காப்பாற்ற முடியாத நிலையில் இயங்கிவருகிறது இந்த பள்ளிக்கூடம்.
விளையாடத்திடல் இருந்தும் என்ன பயன்?
விளையாடத்தான் மாணவர்கள் இல்லையே....
ஒலிம்பிக்கில் தமிழர் வெற்றி பெறாமைக்கு காரணம் என்ன?இது போன்ற பள்ளிகளால் தான் எத்தனையோ விளையாட்டு வீரர்கள் முழையிலே கிள்ளி எறியப்படுகிறார்கள்.இப்படி எத்தனைப் பள்ளிகள் விளையாட்டுத் திடல் இல்லாமலும்,மாணவர்கள் இல்லாமலும் பல விளையாட்டு வீரர்களை இழந்து வருகிறது.
ஆண்டு விழா அரங்கேற்றம் செய்ய கலைஅரங்கம் தான் இல்லையென்றால் இங்கே பார்வையாளர்களுமே இல்லை என்பது வேதனைக்குரிய விசயம் தான்.
ஆசிரியர்களும் அரசாங்கத்தின் மூலம் வாங்கும் சன்மானத்திற்கு தகுந்த உழைப்பு இல்லையே என மன உழைச்சளுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையை எப்படி மாற்ற முடியும்?
தமிழக அரசே சரியான வழிமுறையினை ஏற்படுத்தி அழிந்து வரும் ஊராட்சி பள்ளிகளின் நிலையை மீண்டும் நிலை நாட்ட போராட வேண்டும்.
0 comments:
Post a Comment