தீபாவளியைப் பற்றி தீபாவளிக்கு முன்னாடி பேசியிருந்தால் அது வெறும் மாயையாகவே இருந்திருக்கும் என்பதால், தீபாவளியை திகட்ட திகட்ட கொண்டாடி முடித்த என் தமிழ் மக்களுடன் ஒரு ரீவைண்ட் பண்ணி பார்க்க ஆசைப்படுகிறேன். உண்மையில் தீபாவளி என்று தெரியுமா? கையில் காசு இருக்கிறவனுக்கு தினந்தோறும் தீபாவளி தான். தீபாவளி என்றால் நாம் புதுத்துணிகள் எடுக்கிறோம், கையில் காசு இருக்கும் போதெல்லாம் தற்போது புதுத்துணிகள் எடுப்பதிலே தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். அடுத்ததாக, பலகாரங்கள் செய்து வியர்த்துப் போன வீட்டு மகளிர்களுக்கு விடுதலை அளிக்கும் பொருட்டு ஆர்டர் என்ற பெயரில் இன்று பேக்கரிகளின் ராஜ்ஜியம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதல்லவா? மாலை வேளையில் தினந்தோறும் பேக்கரியின் வாசலில் வரிசையில் நிற்கும் இவர்களுக்கு என்ன ஸ்பெசல் இருக்கிறது தீபாவளி பலகாரங்களின் மீது.
அப்படியென்றால் தினந்தோறும் இவர்கள் எல்லாருக்கும் தீபாவளி தானா என்கிறீர்களா? தீபாவளிக்கு முக்கியமே பட்டாசுகள் என்கிறீர்களா? பட்டாசுகளை விரும்பி வாங்கும் குழந்தைகள் தினந்தோறும் கப்யூட்டர் கேம்களில் 3டி அனிமேசனில் வெடி போட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அப்படியானால் இவர்களுக்கும் தினந்தோறும் தீபாவளி தானா???????????? அப்படியென்றால் உண்மையான தீபாவளி எங்கிருக்கிறது. ஒரு காலத்தில் இருந்தது அப்படிப்பட்ட தீபாவளி. இன்று அது வெரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதிலே பலருக்கும் முடிந்து விடுகிறது.
உண்மைத் தீபாவளி என்பது வீட்டில் தீபங்களை ஏற்றி வீட்டை ஒளி பெறச் செய்வதோடு எல்லோர் மனதிலும் ஒளிபடைத்தவனாய் அன்று ஒரு நாள் ஆவது வேறு எல்லா வேலைகளையும் மூட்டைக் கட்டி விட்டு குடும்பத்துடன் ஒன்றாய் இணைந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு குடும்ப பெண்ணுக்கு பலகாரம் செய்வதில் கொஞ்சம் ஒத்தாசையாக இருந்து அந்த பலகாரத்தில் நம்முடைய பங்கும் இருக்கிறது என்பதை காட்டிவிட்டு தன் பெற்றோர் எடுத்துக் கொடுத்த புதுத்துணிகளை போடும் அவசரத்தில் மஞ்சள் வைக்க மறந்து கால் சட்டையை அணியும் போது அங்கிருந்து அம்மாவின் குரல் அடே! சாமிக்கு முன்னாடி புத்தாடையை வைத்து மஞ்சள் வைத்தபின் ஆடையைப் போடு டா.. சரி அம்மா என்று கூறியவன் அவசர அவசரமாக கால் சட்டையை அவிழ்த்து சாமிக்கு முன் வைத்து மஞ்சள் வைத்தது தான் தெரிந்தது அவன் ஆடையுடன் கண்ணாடி முன் நின்று தன் புத்தாடையை ரசித்திக் கொண்டிருப்பான். அடுத்ததாக வீட்டில் செய்த இனிப்பு பலகாரங்களை அண்டை அயலாரிடம் கொடுத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதோடு தன் புத்தாடையைப் பற்றி அவர்கள் கூறும் கமெண்டுகளில் நாம் கரைந்து விடுவோம். இறுதியாக சீனி வெடி வெடிக்கும் போது அப்பா பின்னாடியே வந்து பாத்து டா பாத்து போடு என்று சொல்லி கொண்டிருக்கும் தருணம் அம்மாவின் குரல் மணி என்ன ஆகுது வெடி போடுற ஆர்வத்துல சாப்பாட்டையே மறந்தாச்சு என சொல்ல காலை சாப்பாடு இனிதே முடியும் தருணம் அண்டை அயலார் வீட்டு பலகாரங்களும் வீட்டிற்கு வந்து குமியும் அதையும் ஒரு கட்டு கட்டி விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்த சற்று நேரத்தில் அன்னை அசைவ உணவையும் சமைத்து விடுவாள்.
ஒரு வழியாக ஆனந்தப் பூரிப்பில் அதையும் ஒரு கட்டு கட்டி விட்டு சினிமாவுக்கு கிளம்பி போய் 4 மணி நேர மேட்னி சோவை கண்டு மகிழ்ந்து விட்டு
அப்படியே மாலை வந்ததும் பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு இரவிலே வான வேடிக்கைகளை வானில் பார்த்து ரசித்து விட்டு அப்பா தீப்பட்டி மத்தாப்பை உறசி கொடுக்க, தம்பி புஸ்வானம் வைடா , அம்மா உடனே அய்யோ கையை சுட்டுகிறப் போறான் கம்பி மத்தாப்பை புடுச்சி கொடுங்கன்னு சொல்ல ஆனந்தத்துடன் உறங்கி தீபாவளியை முடித்து வைப்பதிலே உண்மையான சந்தோஷம் இருக்கிறது.
2 comments:
Very Nicccccceeeee.
வாழ்க்கையின் தருணங்கள...
Post a Comment