இன்றைய நிலையில் அரேஞ்சுடு மேரேஜ் என்பது கணவனுக்கும்,மனைவிக்கும் இரண்டு கல்யாணம் போன்றது. தனக்கு வரும் மனைவி இப்படி எல்லாம் இருக்க வெண்டும் என்ற கற்பனை மனைவி ஒரு தாரம் ஆனால் கிடைத்த மனைவியோ வேறு ரகம். இப்படித்தான் கற்பனை மனைவியான முதல் தாரத்துடனும் நிஜ மனைவியான இரண்டாம் தாரத்துடனும் வாழ்கின்றனர். அப்படியானால் அரேஞ்சுடு மேரேஜ் பண்ணுகிற எல்லாருக்கும் இரண்டு தாரமா என்ன? நிச்சயம் அப்படி இல்லை.
பெரும்பாலான ஆண்களும்,பெண்களும் தங்களுக்குள் மனக்கோட்டையை கட்டிக் கொண்டு வாழ்வது தான் இந்த பிரச்சனைக்கு முழுக்காரணமே. இதனால் கல்யாணத்திற்குப் பின்னரும் கற்பனை மனைவியுடனே வாழத்தொடங்கி விடுகின்றனர். நிஜத்தை நிழலாகத் தொலைத்து நிழலெனும் கற்பனையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இறுதியில் விவாகரத்திலே போய் முடிகிறது. இது மாதிரியான மனிதர்கள் ஒன்று அரேஞ்சுடு மேரேஜ் பண்ணிக்க கூடாது. அல்லது தன் மனைவியோ, கணவனோ தாங்கள் எதிர் பார்த்தபடி அமையா விட்டால் அவர்களை தங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல அன்பினால் மாற்றி அமைக்க வேண்டும். இப்படி எதுவுமே என்னால் முடியாது என கூறுபவர்கள் கட்டாயம் அரேஞ்சுடு மேரேஜ் பண்ணிக்க கூடாது. இதனால் பாதிக்கப் படுபவர்கள் இருவருமே தான்.
கற்பனைகள் இருக்கலாம் அதில் தவறு இல்லை எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் இருக்கலாம் அதுவும் தப்பு இல்லை. ஆனால் நமது கனவு பலிக்காத போது அதை ஏற்றுக் கொள்ள கூடிய மனப் பக்குவம் இருந்தால் நாம் நிகழ்காலத்தை வென்று விடுவோம். ஆகவே அரேஞ்சுடு மேரேஜிலும் அனுசரிப்புடன் நடந்து கொண்டால் அமுதமாய் இனிக்கும். இல்லையேல் கரும்பாய் இருந்தாலும் கசக்கவே செய்யும்
1 comments:
Really nice story. Because all are need some things including my self but this is not possible for this generation..... Keep it up JP.
Thanks & Regards,
Isai Selvan. S
Post a Comment