Find us on Google+ அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி” அறக்கட்டளை...................... ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday, 15 October 2011

அழிந்த கிராமத்தையே அழகு படுத்திய “ அழகிய கடன் உதவி” அறக்கட்டளை......................

       இன்றைய இளைஞன் நாளைய குடிமகன் என்பது பழைய மொழி. இளைஞர்கள் நினைத்தால் இமயத்தையும் வென்று விடுவர் என்று சாதித்துக்காட்டியவர்கள் இந்த பதின்மூன்று இளைஞர்கள்.

     சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் அழகிய அறக்கட்டளை மிகவும் அழகாக இயங்கி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை பஞ்சத்தில் மூழ்கியிருந்த அந்த கிராமத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது அழகிய கடன் உதவி அறக்கட்டளை. அடுத்த ஊர்களுக்கு சென்று விறகு வெட்டி வாழ்ந்து வந்தனர் இந்த ஊர் காரர்கள்.கடுமையான பஞ்சத்தில் ஆட்பட்டுகிடந்த ஊரில்எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் மிச்சம்என்ற எண்ணத்தில் கந்துவட்டிகாரர்களின் ஆதிக்கம் வேறூன்றத் தொடங்கியது.அழிவின் வாயிலை தொட்டுப்பார்த்து திருப்பிய கிராமம் புதூர்.

    முஸ்லீம்களை அதிகமாக கொண்ட இந்த கிராமத்தில் ஏறத்தாழ 650 வீடுகள் உள்ளன.இந்த அறக்கட்டளையை இக்கிராமத்துக்கு கொண்டு வந்தவர் அபுல் ஹசன் சாதலி ஆசிரியர்.2006 இல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஆரம்பத்தில் நகையையோ,வீட்டையோ அடமானம் வாங்கிக் கொண்டு வட்டியில்லா கடன் வழங்கியது. ஆனால் மக்கள் அடமானம் வைப்பதற்கு வழியில்லாமல்மல் கந்துவட்டி காரர்களின் வளையில் சிக்கித் தவித்தனர்.

    இதைக்கண்டு மீண்டெழுந்த 13 இளைஞர்கள் ரிஸ்வான் கான்,சதாம் உசேன், முகமது சதகத்துல்லா, சையது அபுதாகிர், ஜாவித் கான், தமீம் அன்சாரி, அஜாருதீன்,ஹாஜி, ராமிஸ் ராஜா, ராசுல் தீன், ரியாஸ் கான், எம்.ரமீஸ் ராஜா மற்றும் சீனி முகமது
கல்லூரி மாணவர்களாகிய இவர்கள், கிராமத்தின் நிலையை மாற்றி அமைக்க பெரிதும் போராடினர்.அந்த போராட்டத்தின் விழைவாக 2010 ஆம் ஆண்டு ஆசிரியருடன் தங்களை அர்பணித்துக் கொண்டு
          ”அழகிய கடன் உதவியை
                 ”வட்டி இல்லா கடன் உதவி
என்று மாற்றி அமைத்த மாணவர்கள் கிராமத்தின் தலை எழுத்தையே
மாற்றி அமைத்தனர். தனி நபர் ஒருவருக்கு பதினைந்தாயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆறு மாதம் முதல் ஒரு வருட கால அவகாசமும் கொடுக்கப்படுகிறது வட்டியில்லா கடனை திருப்பி கொடுப்பதற்கு. ஒரு வருடம் முடிந்தும் பணத்தை திருப்பி தராதவர் மேல் எந்த ஒரு அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. புதூர் முழுவதும் பயனடைந்துள்ளது இந்த அறக்கட்டளையின் சேவையினால். முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களை அதிக அளவில் கொண்டுள்ள இந்த ஊரில் பாகுபாடின்றி அனைவருக்கும்  ”வட்டியில்லா கடன் உதவிவழங்கப் படுகிறது.
               

0 comments:

Post a Comment