நடந்து முடிந்த சட்டமன்ற கவுன்சிலர் தேர்தல் எல்லா ஊர்களையும் ஒரு உழுக்கி உழுக்கி விட்டது. அந்த தேர்தலுக்காக அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்து தன்னுடய வாக்கினை இந்த ஆண்டு பதித்துள்ளனர் பலபேர்.
அம்மி மிதித்து அருந்ததி பார்க்காமல், தாளி கட்டிய கையோடு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளித்த தம்பதிகளை நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் 89 வயது மூதாட்டியும் தனது மகன் உதவியுடன் ஓட்டு போடுவதற்கு வந்தது மிகவும் பெருமிதமாக உள்ளது.
நடக்க கூட முடியாத நிலையில் உள்ள 97 வயதானவர் ஓட்டுப் போட ஆசைப் பட்டதால் அவரது மகன் அவரை தூக்கிச் சென்று வரிசையில் நின்று ஓட்டழித்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.







0 comments:
Post a Comment